வானம் வசப்படும் !
சிறகிருந்தால் பறந்திடும் உயிரோட்டம் நிறைந்த துடிப்பு, கலகல சிரிப்பு, பார்ப்பவர்களை எல்லாம் கவர்ந்திடும் கள்ளம் கபடமில்லா முகங்கள் - இதை இந்திய கிராமங்களின் நிரந்திர 'ஸ்னாப்ஷாட்' காட்சியாக வைத்திருக்க இதோ உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.

சிறகிருந்தால் பறந்திடும் உயிரோட்டம் நிறைந்த துடிப்பு, கலகல சிரிப்பு, பார்ப்பவர்களை எல்லாம் கவர்ந்திடும் கள்ளம் கபடமில்லா முகங்கள் - இதை இந்திய கிராமங்களின் நிரந்திர 'ஸ்னாப்ஷாட்' காட்சியாக வைத்திருக்க இதோ உங்களுக்கும் ஒரு வாய்ப்பு.
“அம்மா! அப்பா எப்ப வருவாரு?” தன் தந்தையின் மரணத்தை புரிந்து கொள்ள முடியாத குழந்தை அஜய் கிருஷ்ணாவை எப்படியோ சமாதானம் செய்து அரசுப் பள்ளி ஒன்றிற்கு அனுப்பி வைத்தார் கலையரசி.
‘குடும்பப் பிரச்சனையினால் தற்கொலை செய்து கொண்ட தன் கணவன் விட்டு சென்றது அந்தக் குழந்தையை மட்டுமல்ல, வறுமையையும்தான்’ என வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருந்தார் கலையரசி.
தினசரி செலவுக்கும் வீட்டு வாடகைக்கும் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் தையல் இயந்திரத்தில் நூல் கோர்த்து கால் தேய்ந்து கலையரசி களைத்துப் போயிருக்க அவரது மகனோ சிறகுகள் விரித்து பறக்கவே ஆசைப் பட்டான். “அம்மா நான் பைலட் ஆகணும்” என்று சொல்லி பேப்பர் விமானத்தை செய்து இங்கும் அங்கும் பறக்கவிட்டுக் கொண்டிருந்தான்.
திடீரென ஒருநாள் “அம்மா இந்த ஸ்கூலுக்கு இனிமே நான் போக மாட்டேன். அங்க இருக்க பசங்க என்னை அடிக்கறாங்க, பயமுறுத்தறாங்க,” என்றான் அஜய்.
Subscribe
ஏழைகள் மட்டும் கனவு காணக் கூடாதா என்ன?
அப்போதுதான் ஈஷா வித்யா பள்ளியைப் பற்றி கேள்விப்பட்டார் கலையரசி. அஜெயின் பள்ளி சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்திருந்தார். நேர்காணலுக்கு பிறகு அஜெயின் சேர்க்கை உறுதியானது. அங்கே இவருக்கு தரமான கல்வி, மதிய உணவு என அனைத்தும் இனி இலவசமாக கிடைக்கப் பெறும் என்று அறிந்த கலையரசி பெரும் நிம்மதி அடைந்தார். ஈஷா வித்யா பள்ளிக்கு தன் நன்றியை தெரிவிக்க வார்த்தை இல்லாமல் தவித்தார்.
“டீச்சர் கைல கொம்பு இல்ல. மத்த பசங்க கிட்ட வம்பு இல்ல, இனிமே ஜாலி தான் அம்மா,” என்று துள்ளிக் குதித்தான் அஜய்.
மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் கல்வி முறையாக இல்லாமல் செயல்முறை கல்வியாக ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் படிப்பது அஜய்க்கு ஒரு ஆனந்தமான அனுபவமாக இருந்தது.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் கூட ஒரு சில உயர்தர பள்ளிகளில் மட்டுமே இருக்கும் இந்த ‘செயல்முறை கல்வி வசதி’ ஈஷா வித்யா மூலம் தங்கள் கிராமத்திலும் கிடைக்கப் பெறுவதால் இனி ஏழைகள் தங்கள் கனவுகளை நசுக்கிக் கொள்ளத் தேவையில்லை என்கிறார் கலையரசி.
கணிப்பொறி வசதியும் ஆங்கிலக் கல்வியும் சத்துணவும் அங்கே அஜய்க்கு இலவசமாகக் கிடைக்கிறது. தற்போது அஜய் பிறர் பேசும் ஆங்கிலத்தை எளிதாக புரிந்து கொள்கிறார். அவரும் ஆங்கிலத்தில் சில வார்த்தைகளில் பதிலளிக்கிறார். ‘ஆங்கிலம் தான் எனக்கு மிகவும் பிடித்த பாடம்’ என்கிறார்.
பள்ளியில் டிராயிங்க், பெயிண்டிங்க் என தன் பல திறமைகளை வெளிப்படுத்திவரும் அஜய்க்கு கபடி மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு.
தற்போது தமிழ் நாட்டில் மட்டுமே 8 ஈஷா வித்யா பள்ளிகள் இருக்கின்றன. அர்ப்பணிப்பு உள்ளம் கொண்ட ஆசிரியர்கள் புன்னகையுடன், குழந்தைகளோடு தோழர்கள் போல விளையாடிக் கொண்டே கல்வி கற்பிப்பது இந்த பள்ளியின் தனிச் சிறப்பு. இங்கே 4500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த பள்ளிகளில் இன்னும் சில வசதிகள் செய்யவும், மேற்கொண்டு சில கட்டுமானப் பணிகள் முடிக்கவும் ரூ. 60,00,000 தேவைப்படுகிறது.
அண்ணார்ந்து பார்த்தால் ஆகாயம் விசாலமாகத்தான் இருக்கிறது. பறப்பதற்கு ஒன்றும் தடையில்லை. சிறகுகள் மட்டும் தந்து உதவுங்கள். அஜய் பறப்பான். விமானத்தை மட்டுமல்ல. இந்த வானத்தையே வசப்படுத்தும் கனவுகளை கண்களில் ஏந்தி அஜய் போல பல குழந்தைகள் காத்திருக்கிறார்கள் உங்கள் உதவிக்காக.
ஆசிரியர்
ஈஷா வித்யாவின் 9 பள்ளிகள் 5200 குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வருகிறது, அதில் 2900 பேர் கல்வி உதவியின் மூலம் கல்வியறிவு பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தாராள மனம் கொண்ட மனிதர்களால் நிகழ்ந்தேறி வருகிறது. ஈஷா வித்யா பள்ளிகளின் கட்டுமானம், நிர்வாகம், கல்வி உதவி போன்ற பல செயல்களுக்கு உதவி செய்ய விரும்பும் உள்ளங்கள் India Giving Challenge என்ற இணையதளத்திற்கு சென்று உதவலாம். உங்கள் நன்கொடைகள் பல குழந்தைகளின் வருங்காலத்தை மாற்றி அமைத்து அவர்களுக்கு தரமான கல்வி வழங்க துணை நிற்கும். இதுபோன்ற அமைப்புகள் இல்லாவிட்டால் அஜய் போன்ற குழந்தைகள் பின் தங்கியவர்களாகவே இருப்பார்கள் என்பதே நிதர்சமான உண்மை. மேலதிக தகவல்களுக்கு give.india@ishavidhya.org.