“உயிர்நோக்கம்” - ஈஷாங்கா
பிற மனிதர்களுக்கு உதவிபுரிந்து, சேவை செய்திட மனிதர்களுக்கு உள்ள பல்வேறு வழிகளில், உச்சபட்ச நல்வாழ்விற்கு வித்திடும் ஆன்மீக சாத்தியங்களை வழங்குவதே மிக உயர்ந்தது. – சத்குரு
ஆசிரியர் பயிற்சி - ஏப்ரல் 2020, ஈஷா யோக மையம்
ஈஷாங்கா என்றால் “ஈஷாவின் அங்கம்” என்று அர்த்தம். ஈஷாங்காவாக இருப்பது, அனைவருக்கும் “ஒரு சொட்டு ஆன்மீகம்” வழங்கும், சத்குருவின் நோக்கத்தினை அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்வதற்கான அற்புத வாய்ப்பாகும்.
உயிர்நோக்கம் ஈஷாங்கா பயிற்சி என்றால் என்ன?
Subscribe
யோக நிகழ்ச்சிகள் மூலம் ஆன்மீக அறிவியலை அறிவியல்பூர்வமான முறையில் நீங்கள் உணர்ந்து, பிறருக்கும் வழங்குவதற்கான வாய்ப்பினை ஈஷாங்கா பயிற்சி வழங்குகிறது. சத்குருவால் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் இந்த நிகழ்ச்சி, தனிமனிதருக்கு தங்கள் உள்நிலையை அறிந்துகொள்ள தேவையான சூழ்நிலையை வழங்குகிறது. நல்வாழ்விற்கான ஒரு எளிமையான, சக்திவாய்ந்த கருவியாக உள்ள தொழிற்நுட்பங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சத்குருவின் ஒரு கருவியாக நீங்கள் மாறுவதற்கான ஒரு செயல்முறையாகவும் இது இருக்கிறது. தாங்கள் உணர்ந்துள்ள ஆழமான அனுபவத்தை பிறருடன் பகிரவேண்டும் என்ற இயல்பான ஆர்வம், பல மனிதர்களை இந்தப் பாதையில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள தூண்டுதலாய் இருந்துள்ளது. இன்று ஈஷாங்காக்கள், பல்வேறு பின்னணி மற்றும் வயதில் இருக்கும், உலகம் முழுவதிலுமிருந்து வருகை தந்து அனைவருக்கும் இந்த ஆன்மீக செயல்முறையை எடுத்துச்செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தப் பயிற்சியின் தன்மையினால், ஒரு குறிப்பிட்ட நேரத்தை நீங்கள் இதற்காகவே ஒதுக்க தேவையுள்ளது. உங்கள் வாழ்க்கை சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், பயிற்சியை நிறைவுசெய்ய நீங்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில், இதற்கு விண்ணப்பிக்கலாம். பல ஈஷாங்காக்கள் தங்கள் குடும்பத்திற்கு துணையாக இருந்தபடி, தங்கள் பணியிலும் தொழிலிலும் உள்ளவாரே, தங்களால் முடிகிற போதெல்லாம் இந்நிகழ்ச்சியை வழங்கி, மக்களைச் சென்றடைகிறார்கள். இதில் சேர்வதற்கான தகுதியைப்பெற, நீங்கள் ஈஷா யோகா வகுப்பும் பாவ-ஸ்பந்தனா வகுப்பும் செய்திருக்க வேண்டும். குறைந்தபட்சம், ஒரு வருடத்திற்காவது உங்கள் உள்ளூர் மையத்திலோ அல்லது ஈஷாவின் பிற நிகழ்ச்சிகளிலோ தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
அனுபவங்கள்:
“எனது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செல்ல முடிகிறது, இந்த பயிற்சி தீவிரமானதாக இருந்தது, இதுவரை என் வாழ்வில் நான் உணர்ந்திராத அளவிற்கு இலகுவாகவும், முற்றிலும் வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. நிகழ்ச்சி முடிந்தபின், இப்போது திரும்பிப் பார்க்கையில், அந்த வாழ்க்கைமுறையையே தொடர்ந்து கடைபிடிக்க விரும்புகிறேன். என் வாழ்வில் ஈஷா எனக்கு பல்வேறு விஷயங்களை கொடுத்திருந்தாலும், அந்த ஆசிரியர் பயிற்சி – என் வளர்ச்சிக்காக, என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் மிக முக்கியமான விஷயம் என்பதை என்னால் தெளிவாக பார்க்க முடிகிறது.”
- ஜனா, ஈஷாங்கா
எப்போது, எப்படி விண்ணப்பிப்பது?
வரும் பிப்ரவரி 29, 2020 வரை இதற்கு பதிவுசெய்யலாம். முன்கூட்டியே இடங்கள் நிரம்பிவிடும் பட்சத்தில், பதிவுகள் முன்கூட்டியே நிறுத்தப்படலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ளது படி, உங்கள் ஊரில் நிகழ்ச்சிக்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வத் தொண்டரை தொடர்பு கொள்ளலாம்.
பகுதி | தொடர்பு எண் |
சென்னை | 99621 06284 |
தெற்கு | 94423 64595 |
கிழக்கு | 94890 45308 / 94890 18824 |
வடக்கு | 91086 50650 |
மேற்கு | 90809 98354 / 94872 89118 |
விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்
மேலும் விவரங்களுக்கு:
அலைபேசி : 83000 83111
மின்னஞ்சல் : uyirnokkam.training@ishafoundation.org