அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் - சில எளிய குறிப்புகள் - பகுதி 1

எவ்வளவுதான் செல்வம் வைத்திருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால், அவற்றை நாம் அனுபவிக்க முடியாது. இந்த வாழ்க்கையை அனுபவிப்பதற்கு ஆரோக்கியம் மிக அவசியமானது. ஆனால், தவறான வாழ்க்கை முறைகளாலும் உணவுப்பழக்கங்களாலும் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளும் பலர், அதனால் பல நோய்களுக்கும் ஆளாகின்றனர். இந்த தொடர் மூலம் சத்குரு கூறியுள்ள பூதசுத்தி பயிற்சி முறை, சரியான உணவு வகைகள், சமைக்கும் முறை, மூலிகைத் தோட்டம் அமைத்தல் என ஆரோக்கியத்திற்கான ஆலோசனைகளை வாரந்தோறும் வழங்க உள்ளோம். தொடர்ந்து படித்து ஆரோக்கியத்தை உணருங்கள்!

யோகா என்றால்...

யோகா என்றால் உடலை இப்படியும் அப்படியும் வளைத்துக் காட்டுவதோ மூச்சை அடக்கி வெளியிடுவதோ அல்ல. மனிதன் தற்போது வாழும் பரிமாணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இன்னொரு நிலைக்குப் போவதற்கான தொழில்நுட்பம்தான் யோகா.

40லிருந்து 48 நாட்களுக்குள் உடலுக்குள் ஒரு சுழற்சி நடக்கிறது. இதைத்தான் ஒரு மண்டலம் என்கிறோம்.

உங்கள் முழு வாழ்க்கையின் அடிப்படை மூலம் உங்களுக்குள்தான் இருக்கிறது. தினசரி யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம் அந்த உயிர் மூலத்துடன் ஆன தொடர்பு உங்கள் விழிப்புணர்வுக்கு வருகிறது. இது உங்கள் ஆரோக்கியம் மேம்பட வழி வகுக்கிறது. சுகக் கிரியா, ஓம்கார தியானம், சூரிய நமஸ்காரம் போன்ற எளிய யோகப் பயிற்சிகளை உங்கள் தினசரி வாழ்வில் கடைப்பிடிக்கலாம்.

உடலில் இயங்கும் பஞ்சபூதங்கள்...

நம் உடலில் 72 சதவீதம் தண்ணீர், 12 சதவீதம் நிலம், 4 சதவீதம் நெருப்பு, 6 சதவீதம் காற்று. மீதம் ஆகாயம். 40லிருந்து 48 நாட்களுக்குள் உடலுக்குள் ஒரு சுழற்சி நடக்கிறது. இதைத்தான் ஒரு மண்டலம் என்கிறோம். மூன்று மண்டலம் தொடர்ந்து பூதசுத்திப் பயிற்சி பண்ணினால், உங்களுக்குள் இருக்கின்ற பஞ்சபூதங்களை ஓரளவிற்கு நாம் சுத்தப்படுத்த முடியும். ஐந்து இலட்சம் மூலப் பொருட்களை உங்களிடம் கொடுக்கவில்லை. ஐந்தே ஐந்து அம்சங்களை நீங்கள் உயிராக கையாண்டால் உயிரே இனிப்பாக மாறிவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பூதசுத்தி

உங்கள் உடலில் உள்ள நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் நல்ல முறையில் இயங்குமாறு பார்த்துக்கொள்ள ஒரு எளிய வழி இருக்கிறது. அதுதான் பூதசுத்தி.

உங்கள் உடலுக்கு வெளியே உள்ள பஞ்சபூதங்களும் உங்கள் உடலில் உள்ள பஞ்சபூதங்களும் வெவ்வேறல்ல. எனவே உங்கள் உடலுக்கு வெளியே உள்ள நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட பக்தி உணர்வுடனும் வணங்குதலுடனும் அணுகும்போது உங்கள் உள்ளே உள்ள பஞ்சபூதங்களும் நல்லவிதமாக செயல்படுகிறது.

உடலுக்கு வெளியே உள்ள நீரை ஒரு பக்தி உணர்வுடன் அணுகும்போது உடலுக்கு உள்ளே உள்ள நீரும் நல்லவிதமாக செயல்படத் தொடங்குகிறது. நீரை நாம் கங்கா மாதா என்று வழிபடுவதும் கோவிலில் நீரை தீர்த்தமாக பக்தி உணர்வுடன் வாங்கிக் கொள்வதும் இதனால்தான்.

வெளியே நீங்கள் சுவாசிக்கும் காற்றைக்கூட நல்லவிதமாக அணுகும்போது உங்கள் உள்ளே உள்ள காற்றின் தன்மையும் மாறுகிறது.

சூரியனைப் பார்த்து தினசரி வழிபடுவதோ, கோவிலில் கற்பூரமோ, விளக்கோ ஏற்றுவது அல்லது சாம்பிராணி புகை போடுவது அல்லது ஒரு உணவை பிரசாதம் என பெற்றுக்கொள்வது இவை எல்லாமே நெருப்பையோ, காற்றையோ, நிலத்தையோ பக்திபூர்வமாக அணுகும் முறைகள்தான்.

வெளியே நீங்கள் சுவாசிக்கும் காற்றைக்கூட நல்லவிதமாக அணுகும்போது உங்கள் உள்ளே உள்ள காற்றின் தன்மையும் மாறுகிறது. இப்படி வெளியே உள்ள பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் பக்தி உணர்வோடு அணுகும்போது உங்களைச் சுற்றிலும் உள்ள அதிர்வுநிலையே மாறுவதுடன் உங்கள் உடல்நலம் மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையே கூட உடனடியாக மாறத் துவங்குவதை நீங்கள் நன்றாகவே உணர முடியும்.

பூதசுத்திக்கான சில எளிய பயிற்சிகள் :

மண் குளியல்: புற்றுமண் எடுத்து நீர் குழைத்து உடல், தலை என ஒரு இடம் விடாமல் முழுவதும் பூசி வெயிலில் நின்று நன்றாகக் காய்ந்த பின் குளிர்நீரில் குளிக்க வேண்டும். புற்றுமண் கிடைக்காவிட்டால் களிமண் (பூச்சி உரம் அல்லது பிராணிகள் மலஜலம் கலக்காத) பயன்படுத்தலாம். பல தோல் நோய்கள் இதனால் உடனே குணமாவதோடு, வேறுபல உடல்நலன்களும் ஏற்படுகிற்து.

நீர் குளியல்: தினசரி 2 வேளை பச்சைத் தண்ணீர் குளியல் மிகவும் நல்லது. குளித்து முடித்தவுடன் துண்டால் உடலின் அனைத்து பாகங்களையும் அழுத்தித் துடைக்கவேண்டும்.

நெருப்புக் குளியல்: இதற்காக 'க்லேஷ நாஷனா' க்ரியா லிங்கபைரவியில் செய்யப்படுகின்றது.

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் தொடரின் பிற பதிவுகள்

அடுத்த வாரம்...

திட மற்றும் திரவ உணவு வகைகள் குறித்த ஆரோக்கிய குறிப்புகள் காத்திருக்கின்றன!