ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம். "அது தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன்?" என்று அலட்சியப்படுத்த வேண்டாம். நாம் இங்கே உயிர் வாழ்வதே பல இயற்கை ஆதாரங்களின் துணையோடுதானே? அதைக் கொஞ்சம் கவனத்தில் கொண்டு வருவது அவசியமல்லவா? இயற்கையை கொஞ்சாவிட்டால் நாம் இயற்கையிடம் கெஞ்ச நேரிடும்...

உங்களைச் சுற்றி நல்ல காற்றும் அதன் நறுமணமும் வீச ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் சுவாசிக்க காற்றில் தேவையான அளவு ஆக்ஸிஜன் இருக்கவேண்டுமென விரும்புகிறீர்களா? தூய்மையான தண்ணீர் உங்கள் நாக்கை நனைக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? அப்படியானால், நீங்களும் சுற்றுச்சூழலின் நலம் விரும்பிதான். நமக்கு வேண்டியவர் நலமாக இருக்க வேண்டுமென நினைப்பது நல்லதுதான். ஆனால், அந்த நபருக்கு தொந்தரவுகளும் கேடுகளும் செய்துவிட்டு, அவர் நலமாக இருக்க வேண்டுமென நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?!

மனித இனம் நீண்ட காலம் வாழ, பூமியைப் பற்றிய சிந்தனையும் அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்வது அவசியம். ஏனென்றால் நாம் அனைவரும் பூமியின் அங்கம்.

ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் சூழல் எப்படியிருக்கிறது என்பதைப் பொருத்தே நமது ஆரோக்கியமும் நலவாழ்வும் அமைகிறது. இந்த சுற்றுச்சுழல் தினத்தில் நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கை காரணிகளையும் அவை தற்போதுதுள்ள நிலையும் சற்று சீர்தூக்கிப்பார்ப்பது அவசியமானது.

"கஞ்சி குடிப்பதற்கிலார்
அதன் காரணங்கள் இவையெனும் அறிவும் இலார்"
என பாரதியார் பாடினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்றைய சுற்றுச்சூழலின்நிலைக்கு முக்கிய காரணம் மக்கட்தொகை பெருக்கமே. பேருந்தில் இடம்பிடிக்க எத்தனைப் போராட்டம்?! "இந்த இடம் இவருக்குப் பாத்தியப்பட்டது" என நிலமெங்கும் விளம்பரப் பலகைகள். உலகம் இப்படியிருக்க, சுற்றுச்சூழலின் நிலை எப்படி நலமாக இருக்கும்?

பூமித்தாய் போர்த்தியிருந்த பச்சைப் போர்வைகளை நம் சுயநலத்துக்காகச் சுருட்டினோம். வனத்தையும், நிலத்தையும், நீரையும் மதிக்காமல் தவறாய் பயன்படுத்தினோம்.

குறைந்தபட்சம் 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் உண்டு. சோளத்தில் 5000 ரகம் உண்டு. மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இந்த உயிரினங்களில் மனிதன் கோடியில் ஒரு துளி. இத்தனை உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.

ஆனால், மனிதனோ பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக்கொள்கிறான்.

இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது. மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் மனிதனின் உள்நிலையில் அவசியமாகிறது.

சுற்றுச்சூழலுக்காக ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகள்

யோகா மற்றும் ஆன்மீகம் மட்டுமல்லாது பல்வேறு சமூகநலப் பணிகளை மேற்கொண்டு வரும் ஈஷா அறக்கட்டளை, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது.

பூமி பற்றி சத்குரு பேசியது...

"நமது உடல் என்பது இந்தப் பூமியின் ஒரு பாகம்தான். நாம் என்று இருப்பது அனைத்தும் இந்தப் பூமிதான். இதனை நினைவூட்டுவதற்காகவே உலக பூமி தினமும் சுற்றுச்சூழல் தினமும் கடைபிடிக்கப்படுகிறது. மனித இனம் நீண்ட காலம் வாழ, பூமியைப் பற்றிய சிந்தனையும் அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்வது அவசியம். ஏனென்றால் நாம் அனைவரும் பூமியின் அங்கம்," என்று கூறினார்.

உருவாக்கப்படும் வேளாண் காடுகள்

நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒர் அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.5.00) வழங்கி வருகிறது. ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மரக்கன்றுகள் நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் கூறி வழிகாட்டுகின்றனர்.

தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமை கரங்கள் திட்டம்' அமைத்துள்ளது. எதிர்வரும் மழைகாலத்தில் இன்னும் அதிகப்படியான மரக்கன்றுகளை உருவாக்க முனைப்புடன் உள்ளது. ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் இதுவரை 18 மில்லியன் மரங்களை 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்களின் உதவியால் நட்டுள்ளது.

ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும், உங்களின் கரங்களை ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திற்கு தந்து உதவிடவும் 94425 90062 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.