Sounds of Isha குரு பாதுகா
Sounds of Isha வின் முந்தைய வெளியீடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ள 'வைராக்யா' பிரம்மச்சாரிகளின் சக்திமிக்க மந்திர உச்சாடனைகளைக் கொண்டுள்ளது. வைராக்யாவின் உச்சாடனைகளில் ஒரு பாடல் ஏற்கனவே பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது இங்கே இன்னுமொன்று உங்களுக்காக...

'வைராக்யா' ஒலி நாடாவில் பதியப்பட்டுள்ள 'குருபாதுகா ஸ்தோத்ரம்', பிரம்மச்சாரிகளின் குரல் அதிர்வுகளோடு தெய்வீக அதிர்வுகளுடனும் நம்மை வந்தடைகின்றன.
இந்த உச்சாடனம் குருவையல்ல, குருவின் பார்வையையல்ல, குருவின் கரங்களையல்ல, ஏன் குருவின் பாதங்களையுமல்ல குருவின் பாதுகைகளின் உயர்வினைக் கூறுகிறது.
பிறவிப் பெருங்கடலிலிருந்து நம்மைக் கரை சேர்க்கும் படகாகவும் அறிவுக் கடலாகவும் பிரகாசிக்கும் முழுமதியாகவும் சூரியன்களின் அணிவகுப்பாகவும் நீராகவும் தீயதை அழிக்கும் நெருப்பாகவும் போற்றிப் பாடப்படுகிறது குருவின் பாதுகைகள்.
'நாலீக நீகாஸ்ச பதா ஹ்ருதாப்யாம்...' இந்த வரிகளில், 'நம்மை வசீகரிக்கும் குருவின் தாமரைப் பாதங்கள் அற்ப ஆசைகளைக் களைவதாகவும், தணியாத ஆசைகளை நிறைவேறச் செய்வதாகவும் உள்ளதாகப் பாடப்படுகிறது.
நாமும், ஒரு பார்வையாளராக இல்லாமல் பக்தராக மாறும்போது மட்டுமே இந்த உணர்வினை நம்மால் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது.
இந்த உச்சாடனத்தைத் தினமும் கேட்கும்போது, குருவுடன் தொடர்பில் இருப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாரம் 'அனந்த ஸம்சார சமுத்ர தார...' உங்களுக்காக...
Subscribe