கைத்தறியைக் காப்போம் (#SaveTheWeave)

தேசிய கைத்தறி தினமான ஆகஸ்ட் 7ம் தேதி மாண்புமிகு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் சத்குருவுடன் இந்திய ஜவுளிகள், கைத்தறிகள் மற்றும் இயற்கை நூலிழைகள் குறித்த ஒரு கலந்துரையாடலில் இணைய நேரலையில் இணைந்தார். நலிந்துவரும் கைத்தறி மற்றும் நெசவுத்தொழிலை மேம்படுத்துவதற்காகவும், ஜவுளித்துறை முன்னேற்றத்திற்காகவும் சத்குரு தனது ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அந்தந்த மாநிலங்களின் கைத்தறி துணியினால் சீருடை உடுத்துவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டுமென்ற கருத்தை அப்போது சத்குரு முன்வைத்தார்.

சத்குருவுடன் எழுத்தாளர் தீபக் சோப்ரா

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி, விழிப்புணர்வான உலகத்தை படைப்போம் என்ற தலைப்பில் இந்திய-அமெரிக்க எழுத்தாளரும் மாற்று மருத்துவத்திற்கான சட்ட ஆலோசகருமான தீபக் சோப்ரா அவர்கள் சத்குருவுடன் ஆன்லைனில் கலந்துரையாடினார். இந்நிகழ்வில், கொரோனா காலத்தில் சுற்றுச்சூழலியலில் நிகழ்ந்துள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து கலந்துரையாடினர்.

காலபைரவர் மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா

20 ஆண்டுகளுக்குப் பிறகு, 20 ஜுலை, 2020 அன்று சோமவதி அமாவாசை நிகழ்ந்தது - ஆடி மாதத்தில் திங்கட்கிழமையில் வரும் ஒரு அமாவாசை நாள். இந்த மகத்துவமிக்க அரிதான நிகழ்வில், ஈஷா யோக மையத்தில் காலபைரவர் மண்டபம் அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ந்தேறியது. இந்நிகழ்வில், சத்குருவுடன் ஈஷா ஆசிரமவாசிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களும் ஆன்லைன் நேரலையில் இணைந்தனர்.

நதி வீரர்களுக்கு சத்குருவின் வாழ்த்து

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
— IshaFoundation Tamil (@IshaTamil) August 9, 2020

சத்குரு தனது ட்விட்டரில், நதிகளை மீட்போம் இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள நதி வீரர்களின் செயல்களை பாராட்டியும் வாழ்த்தியும் பதிவு செய்துள்ளார். நதி வீரர்கள் காவேரிப் படுகையிலுள்ள 9 மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் கர்நாடகாவில் விவசாயிகளுடன் செயலாற்றுகிறார்கள்; அவர்களின் வாழ்க்கையின் சிறந்த ஆண்டுகளை அவர்களின் தனிப்பட்ட நலனுக்காக அல்லாமல், ஒரு முழு சமூகத்தின் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்துள்ளனர் என்று அந்த பதிவில் சத்குரு குறிப்பிட்டுள்ளார்.

சவாலான இந்நேரத்தில் சத்குரு தரிசன நேரலை

“சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன்” என்ற தலைப்பில் இணையம் வாயிலாக தனது தரிசனத்தை ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நேரலையில் வழங்கி வருகிறார் சத்குரு. மாலை 6 மணியளவில் துவங்கும் இந்த நேரலை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து, சத்குருவின் ஆழமிக்க உள்நிலை தரிசனங்களைப் பெற்று சவாலான இந்நேரத்தை சத்குருவின் அருளுடன் இலகுவாக கடந்து செல்கின்றனர்.

sg-darshan-blog

சலுகை கட்டணத்தில் ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி

கண்ணுக்குத் தெரியாத எதிரியான வைரஸை எதிர்த்து முன்னணியில் நின்று களப்பணியாற்றும் சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இலவசமாக ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பொதுமக்கள் அனைவருக்கும் 50% சலுகை கட்டணத்தில் இந்நிகழ்ச்சி வழங்கப்படுகிறது. இந்த சலுகை வரும் செப்டம்பர் 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

iyo-blog-banner

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா, சத்குருவின் வாழ்த்து

இராமர் கோயில் பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டு விழாவும் ஆகஸ்ட் 5ம் தேதியன்று அயோத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கான தனது வாழ்த்து செய்தியில், இராமன் எனும் மனிதனை நாம் ஏன் வணங்குகிறோம் என்பதை விளக்கிய சத்குரு, இராமர் கோயில் எழுப்புவதன் மூலம் அனைத்து தரப்பினரும் பிரச்சனைகளை விலக்கிவிட்டு ஒன்றாக வேண்டுமென தனது விருப்பத்தை தெரிவித்தார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சத்குரு நேர்காணல்

புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் ஊடகவியலாளர் திரு.கார்த்திகை செல்வன் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார். ஆன்மீகம், பகுத்தறிவு, ஆன்மீக அரசியல், கொரோனா வைரஸ் தாக்கம், லாக்டவுன் தொடர்வது அவசியமா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார்.


சத்குருவின் சுதந்திர தின வாழ்த்து செய்தி

இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்தையும் ஆசியையும் தெரிவித்த சத்குரு, கொரோனா நோய்த்தொற்று நீங்கிய பின்னர், இந்தியர்களாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த 20 ஆண்டுகளை சிறப்பாக பயன்படுத்தி முன்னேற்றத்தைக் காணும் மகத்தான வாய்ப்பு இருப்பதை எடுத்துரைக்கிறார்.


ஐ.நா சுற்றுச்சூழல் பேரவை UNEP ஈஷாவிற்கு அங்கீகாரம்

ஐ.நா சபையின் சுற்றுச்சூழல் பேரவை, ஈஷா அறக்கட்டளையை ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டத்தில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ளது. இதுகுறித்து சத்குரு தனது ட்விட்டர் பதிவில், “நம் பூமிக்கு புதிய சுற்றுச்சூழல் விதியினை விழிப்புணர்வாய் படைப்பதற்கான நேரமிது. ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டங்களை பலப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.