சத்குருவின் ஓவியத்திற்கான ஏலத்தொகை ரூ. 4.14 கோடி
கோவிட் தொடர்பான சமூக நலத்திட்ட முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, சத்குருவின் ஓவியம் ரூ.4.14 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த நன்கொடையானது, பொருளாதாரம் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கு ஈஷாவுக்கு உதவியாக இருக்கும்.
உலகமெங்கும் ஒவ்வொரு தேசத்துக்கும், சமுதாயத்துக்கும் கோவிட்-19 சவால்களை முன்னிறுத்தியுள்ளது. ஆனால், இந்தக் கடினமான நேரத்தில் உணவு மற்றும் வாழ்வின் அடிப்படை அத்தியாவசியங்கள் பற்றாக்குறையினால் அவதிப்படும் பொருளாதாரம் மறுக்கப்பட்ட சமூகங்களின் மீதுதான் அனேகமாக பெருஞ்சுமை இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இத்தகைய சமூகங்களுக்கும் மற்றும் தனிமனிதர்களுக்கும் தினமும் உணவு மற்றும் மளிகைப் பொருட்களை ஈஷா வழங்கி உதவுகிறது. சுகாதார வசதிகளை அமைத்துத் தருவதுடன், அரசாங்க அதிகாரிகளுக்குத் தேவையான சாதனங்களுடன் பக்கத்துணையாக நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஈஷா தன்னார்வலர்களின் பணியாக இருக்கிறது.
தனிப்பட்ட சௌகரியங்களை பாராமல், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று
விழிப்புணர்வை வழங்குகின்றனர். அவர்களின் செய்தி: வரும் முன் காப்பதே சிறந்தது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கும் பணியில் எங்களுடன் இணையுங்கள்.
நன்கொடை செய்க: https://t.co/ly6eN0VRZX#BeatTheVirus pic.twitter.com/qNFG9Tzj7l
Subscribe
இந்த மகத்தான சமூக நலத்திட்ட முயற்சிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, “முழுமையாக வாழ” என்று தலைப்பிடப்பட்ட தனது ஓவியத்தை சத்குரு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏலமிடப்பட்ட ஓவியத்துக்கு கொடையாளர் வழங்கிய ரூ. 4.14 கோடி, இப்போது சமூக நலத்திட்டங்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தப்படும்.
சத்குரு கூறியுள்ளார், “அரசாங்கமும், நிர்வாக இயந்திரங்களும், சமூகத்தின் ஏழ்மையிலும் ஏழ்மையானவர்களுக்கு உதவிக்கரம் வழங்குவதில் அதிகம் செயல்பட்டாலும், சமூக அடுக்குகளின் எண்ணற்ற பள்ளங்களில் சிக்கிவிடும் அதிக என்ணிக்கையிலான மக்களைச் சென்றடைய முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட ஒருவர்கூட பட்டினிக்குத் தள்ளப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகவும் இருக்கிறது.”
இந்த நன்கொடையின் கூடுதல் பலம் என்னவென்றால், பட்டினியின் விளிம்புக்குத் தள்ளப்படக்கூடிய பல்லாயிரம் மக்களும் இப்போது சத்தான உணவு மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளைப் பெறுவதற்கு இது உதவி செய்யும்.
சமூகத்தின் நலனுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் கோவிட் போராளிகளாகிய மருத்துவர்கள், செவிலியர் மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்குவதற்கும் இந்த நன்கொடை உதவுகிறது.
ஆசிரியர் குறிப்பு: யாரேனும் பட்டினியை நோக்கித் தள்ளப்படும் நிலையில், உங்களால் உதவி வழங்க முடியவில்லையென்றால், தயவுசெய்து 83000 83000 என்ற ஈஷா உதவிக்கரத்தை தொடர்புகொள்ளுங்கள். இது கூடுதல் ஆதரவு வழங்குவதற்கான உள்ளூர் தன்னார்வலர் அமைப்பை ஆவன செய்யத்தூண்டும். பாதிப்படையக்கூடிய மக்களைக் காப்பதற்கான நமது குறிக்கோளுடன் இணைந்திருங்கள். நன்கொடைகள் வழங்குவதற்கு http://ishaoutreach.org/beatthevirus.