பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்
இந்த வார ஆரோக்கிய குறிப்புகளில், பெண்களுக்கான சிறப்பு ஆலோசனைகளும், குழந்தை வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களும் காத்திருக்கின்றன.!
அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் - சில எளிய குறிப்புகள் - பகுதி 8
இந்த வார ஆரோக்கிய குறிப்புகளில், பெண்களுக்கான சிறப்பு ஆலோசனைகளும், குழந்தை வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களும் காத்திருக்கின்றன!
பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்
பதின்ம பருவம்:
- பதின்ம வயதிலிருக்கும் பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும்.
- கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும்.
- இந்த வயதில் உளுந்து சாப்பிடுவது மிக முக்கியம், ஏனென்றால் அது இடுப்பெலும்பை வலுப்படுத்தும்.
- மாதவிலக்கின்போது உடலை சுத்தமாக வைத்திருப்பது நல்லது.
- அந்நாட்களில் இரு வேளை குளிக்க வேண்டும், அதில் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். நெருப்புக் குளியலும், சாம்பிராணியும் நல்லது.
கர்ப்ப காலம்:
Subscribe
கர்ப்பிணிப் பெண்கள், மற்ற பெண்களை விட அதிக சத்தான உணவுகளை உண்ண வேண்டும். ஒரு பெண் கர்ப்பமடையும்போது, தன்னை அவள் எப்படி வைத்துக் கொள்கிறாள் என்பது மிக முக்கியம்.
நமது பாரம்பரியத்தில் ஒரு கர்ப்பவதி மிகவும் பாதுகாப்பான சூழ்நிலையில், அவள் மனதையும், உணர்வுகளையும் இனிமையாக வைத்திருக்கக் கூடிய நேர்மறையான விஷயங்கள் நிரம்பிய இடத்தில் வசிக்குமாறு பார்த்துக் கொள்கிறோம். இது போன்ற சூழ்நிலை தாய்க்கும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் மிகுந்த பலனைக் கொடுக்கும்.
இரு வேளை குளிக்க வேண்டும், அதில் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். நெருப்புக் குளியலும், சாம்பிராணியும் நல்லது.
இந்த சமயத்தில் எளிமையான யோகப் பயிற்சிகளைச் செய்வது மிகவும் நல்லது. ஈஷாவின் "தாய்மை" என்னும் கர்ப்பிணி பெண்களுக்கான வகுப்பில் இந்த யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப் படுகிறது.
குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை
சமைத்த உணவை 1½ மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும். இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும்.
- 8/9 வயதை அடைந்தவுடன் குழந்தைகளை அதிகாலையில் எழுப்புங்கள். ஏதாவது ஒரு செயல் செய்ய வையுங்கள்.
- அசைவ உணவு கொடுப்பதை கூடியமட்டும் தவிருங்கள்.
- எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுங்கள்.
- நிறைய காய்கறிகள், பழங்கள், முளை கட்டிய தானியங்களைக் கொடுப்பது அவர்களை இன்னும் அதிக துடிப்பானவர்களாக, உயிர்ப்புள்ளவர்களாக ஆக்கும்.
- வெள்ளைப் பூசணியின் சாறெடுத்து தேன் கலந்து தினமும் உண்பது, வளரும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும். இதன் மூலம் அவர்களது கற்கும் திறனும், வளர்ச்சியும் மேம்படும்.
- ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வெள்ளை பூசணி தவிர்த்து விடலாம்.
- குளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் கொண்ட மசாலா அடங்கிய உணவுகளை கடைகளில் வாங்கி உண்பதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
- பெற்றோர் தம்முடைய கருத்துக்களை அவர்கள் மேல் திணிப்பதை விட்டுவிட்டு, குழந்தை தனது திறனை தானே கண்டறிய ஊக்குவிக்க வேண்டும்.
அன்றாட வாழ்வில் ஆரோக்கியம் தொடரின் பிற பதிவுகள்
அடுத்த வாரம்...
'ஈஷா கிரியா' என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை விளக்கும் அடுத்த வாரப் பகுதி, முதியோர்களுக்கான ஆரோக்கிய குறிப்புகளைத் தாங்கி வருகிறது.