அந்த நாள். செப் 3 துவங்கி, மெது மெதுவாக...ஆனால் அதிவிரைவாக, ஒவ்வொரு நாளாக... ஆனால் விடிந்ததும் இருட்டுவதும் மட்டுமே புரிகிற வேகத்தில், இந்தியா முழுவதும் 16 மாநிலங்கள் சென்று, 146 கூட்டங்களில் கலந்துகொண்டு, பலதரப்பட்ட மக்களின், தலைவர்களின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் திரட்டிக் கொண்டு, இதோ இன்று இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில், பேரணியின் முடிவில் நின்று கொண்டிருக்கிறோம். இன்று மாலை 5:30 மணிக்கு, இந்திராகாந்தி உள்ளரங்கத்தில் நம் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு வெங்கைய நாயுடு அவர்கள் நம்மோடு கலந்துகொள்ள உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் நீங்களும் இணைந்திருங்கள்

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

நிஜத்தின் நிழற்படம்

newdelhi-1

பார்த்தால் கற்பனையில் வரைந்ததுபோல் தோன்றும். ஆனால் சத்குருவைப் பொறுத்தவரை நாம் கற்பனை செய்வதற்கு அவர் எதையும் விட்டு வைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் செய்யும் செயல்களை எட்டுவதற்கே, நம் கற்பனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் போலிருக்கிறது. இப்படமும் அதுபோல்தான். பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் நடந்த பைக்-ராலியின் தாக்கம் இது!

9300 கி.மீ புதுடில்லி இந்தியா கேட்

நேற்றிரவு நள்ளிரவு தாண்டிய நேரத்தில் சத்குரு புதுடில்லியை வந்தடைந்தார்.

அப்போது அவர் பகிர்ந்ததாவது:

“நள்ளிரவைத் தாண்டிக் கொண்டிருக்கிறோம். அக்டோபர் – 2. மஹாத்மாவின் பிறந்தநாள். இந்தியா கேட்டில் 9,300 கி.மீ தொட்டிருக்கிறோம். இப்பேரணியின் “பயணம்” பாகம் இத்துடன் நிறைவுக்கு வருகிறது. இன்று மாலை பேரணியின் கடைசி நிகழ்ச்சி நடைபெறும். “நதிகளை மீட்போம்” பேரணியின் முதல் கட்டம் முடிவடைகிறது. இனி ஏகப்பட்ட வேலை காத்திருக்கிறது… :-)”

ஏற்பாடுகள் மிக மும்முரமாக நிறைவுக்கு வருகிறது

newdelhi-3

newdelhi-4

newdelhi-5

newdelhi-6

newdelhi-7

newdelhi-8

வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கும் உள்ளரங்கம்

newdelhi-10

newdelhi-11

முக்கிய பிரமுகர்கள் ஆதரவு

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் டிவிட்டரில்

newdelhi-12

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் டிவிட்டரில் பதிவு செய்ததாவது:

“நதிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இப்படியொரு பிரமாதமான சாதனையை நிகழ்த்தியிருக்கும் சத்குரு அவர்களுக்கும், அவரது ஈஷா அறக்கட்டளை அன்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்”

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள்

mumbai-rally-38

சத்குருவிற்கு வரவேற்பு

newdelhi-52

newdelhi-54

newdelhi-55

newdelhi-56

newdelhi-57

newdelhi-58

newdelhi-53

அரங்கத்தில் மக்கள்

newdelhi-17

newdelhi-21

newdelhi-31

newdelhi-59

newdelhi-51

அரங்கத்தில் எல்லைப் பாதுகாப்பு ஜவான்கள்

சோனு நிகம் அவர்களின் பாடல்களை உற்சாகத்தோடு ரசித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

newdelhi-61

newdelhi-70

சிறப்பு விருந்தினர்கள்

  • இந்தியாவின் துணை ஜனாதிபதி மாண்புமிகு வெங்கைய நாயுடு அவர்கள்
  • சுற்றுச்சூழல், பருவமாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர்.ஹர்ஷ் வர்தன் அவர்கள்
  • கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு மஹேஷ் ஷர்மா அவர்கள்
  • நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் திரு. பிபேக் தேப்ராய் அவர்கள்
  • எல்லைப் பாதுகாப்பு படையின் பொது இயக்குநர் திரு.கே.கே.ஷர்மா அவர்கள்
  • நடிகர் திருமதி.ஜூஹி சாவ்லா அவர்கள்
  • பாடகர் சோனு நிகம் அவர்கள்
  • ஜைன குரு ஆச்சார்யா லோகேஷ் முனி அவர்கள்
  • பௌத்த குரு காம்தக் ரின்போச்சே அவர்கள்
  • முன்னாள் இரயில்வே துறை அமைச்சர் திரு.தினேஷ் த்ரிவேதி அவர்கள்
  • ஜி.எம்.ஆர் குழுமத்தின் தலைவர் திரு. ஜி.எம்.ராவ் அவர்கள்
  • ஜீ டி.வி தலைமை நிர்வாக அதிகாரி சுனில் புக் அவர்கள்

இப்பேரணிக்கு இவர்கள் இதுவரை அளித்த ஆதரவிற்கு நன்றி செலுத்தும் விதமாக, இவர்களுக்கு மாலை அணிவித்து சத்குரு கௌரவித்தார்.

இன்னும் பல முக்கிய விருந்தினர்களும் வந்து விழாவை சிறப்பித்தார்கள்.

Rally-for-Rivers-event-at-Delhi-37

newdelhi-67

Rally-for-Rivers-event-at-Delhi-13

Rally-for-Rivers-event-at-Delhi-1

Rally-for-Rivers-event-at-Delhi-38

newdelhi-65

துணை ஜனாதிபதி மாண்புமிகு வெங்கைய நாயுடு அவர்கள் வருகை

newdelhi-75

newdelhi-71

Rally-for-Rivers-event-at-Delhi-2

ஓவியர் விலாஸ் நாயக் அவர்கள்

இன்று இரு ஓவியங்களை திரு.விலாஸ் நாயக் அதிவிரைவாக வரைந்து முடித்தார். முதலாவது ஓவியம், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசத்தந்தை மஹாத்மா காந்தியடிகள். இந்த ஓவியத்தை 5:30 நிமிடங்களில் வரைந்து முடித்தார். இரண்டாவது ஓவியம், “நதிகளை மீட்போம்” பேரணியை விளக்கும் ஓவியம். இதன் முதல் பாகத்தை 3:20 நிமிடங்களிலும், அதிலிருந்து தொடர்ந்து இரண்டாம் பாகத்தை 3:10 நிமிடங்களிலும் வரைந்து முடித்தார்.

newdelhi-25

newdelhi-26

newdelhi-27

newdelhi-29

newdelhi-30

சோனு நிகம் அவர்களின் இசை நிகழ்ச்சி

பாரம்பரிய இசை, திரைப்பட பாடல்கள், இப்பேரணிக்காக அவரே இயற்றிய பாடல் என சோனு நிகம் அவர்கள் மாறி மாறி வழங்கிய இசை விருந்தில் அரங்கமே உற்சாகமான ஆனந்தத்தில் லயித்தது.

newdelhi-32

newdelhi-66

newdelhi-63

newdelhi-64

newdelhi-80

newdelhi-68

newdelhi-85

newdelhi-76

சம்ஸ்கிருதி மாணவர்களின் கலை நிகழ்ச்சி

newdelhi-35

newdelhi-73

newdelhi-72

சம்ஸ்கிருதி மாணவர்கள் பரதநாட்டியம் மற்றும் களரிபயட்டு நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். பரதநாட்டியம் ஆடிய அந்த 5 மாணவிகளுக்கும் இடையே என்னவொரு ஒத்திசைவு! மிலிட்டரி அணிவகுப்பில் ஜவான்கள் ஒரே ஒத்திசைவில் நகர்வதுபோல், அதே ஒழுக்கத்தோடு ஆனால் இசையுடன் சேர்ந்து, மிக நளினமாக பாந்தமாக அவர்கள் ஆடிய நடனம் மிக அருமை. களரிபயட்டு செய்து காண்பித்த மாணவர்கள் மட்டும் சும்மாவா? அதுயென்ன உடம்பா அல்லது ரப்பரும் இரும்பும் சேர்ந்து செய்த புதுவித கலவையா? அவர்கள் உடலின் உறுதியென்ன, ஒவ்வொரு நிலையிலும் வளைந்து மிக நேர்த்தியாக அவர்கள் உடலைச் செலுத்தியதென்ன? பார்க்கப் பார்க்க பிரமிப்பு அதிகரிக்கிறது.

“நதிகளை மீட்போம்” மாநில அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

5, 6, 7ம் வகுப்புகளில் முறையே முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அமைச்சர்கள் டாக்டர்.ஹர்ஷ் வர்தன் அவர்கள், மஹேஷ் ஷர்மா அவர்கள் மற்றும் நடிகை திருமதி.ஜூஹி சாவ்லா அவர்கள் பரிசுகளை வழங்குகிறார்கள். உடன் இருப்பது காம்லின் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் திரு. சௌமித்ர பிரசாத் அவர்கள்.

newdelhi-49

newdelhi-47

newdelhi-48

ஜூஹி சாவ்லா அவர்களின் அனுபவப் பகிர்வு

newdelhi-74

இப்பேரணிக்காக ஜூஹி சாவ்லா அவர்கள் பலரிடம் ஆதரவு திரட்டியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் பலரின் ஆதரவு வீடியோ இவரின் முயற்சியால் கிடைக்கப் பெற்றது. இப்பேரணிக்காக செயல்பட்ட தன் அனுபவத்தைப் பகிர்கிறார் ஜூஹி சாவ்லா:

  • இன்று இங்கு சேர்ந்திருக்கும் மக்கள் கூட்டத்தையும், உங்களின் உற்சாகத்தையும் பார்க்கும்போது ஒரு இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
  • இம்மேடையில் நாம் இன்று பார்த்து ரசித்த கலைகள் – இசை, நடனம், ஓவியம் எல்லாம் மிக அற்புதமாக உள்ளது. எத்தனையெத்தனை கலைகள். மற்றவர்களைவிட நாம் வேறுபட்டிருப்பது மட்டுமல்ல, முன்னிலையிலும் இருக்கிறோம்.
  • 2.5 ஆண்டுகளுக்கு முன்பு இதைப் பற்றி நான் கேட்டபோது, டில்லியில் ஓடும் யமுனா நதியைப் பார்க்கச் சென்றேன். அது கழிவுநீர் வாய்க்கால் போலிருந்ததைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன்.
  • காந்தியடிகள் சொன்னார், “விலங்கினங்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதையேதான் உங்களுக்கும், ஒருவர் மற்றொருவருக்கும் செய்து கொள்கிறீர்கள்” என்று. இது இயற்கைக்கும் பொருந்தும். இயற்கையை அழித்தால், நாமும் அழிந்துவிடுவோம்.
  • இன்று நதிகளும், இயற்கையும் இருப்பதைப் பார்த்தால், என் கல்வி என்னைக் கைவிட்டுவிட்டது என்றே தோன்றுகிறது. இயற்கையை மதிக்கவும், அதை நேசிக்கவும் கற்றுக்கொடுக்காத கல்வி, பெரும் தோல்விதான். முடிந்தால் எங்கள் கல்வி அமைப்பை மாற்றவும் வழிசெய்யுங்கள் சத்குரு!
  • சத்குருவின் பின் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். இதில் நான் என்ன பெரிசு என்று நினைத்தபோது, “நீ சினிமாத்துறையில் இருக்கிறாய். அவர்களின் ஆதரவு வீடியோ பெற வழிசெய். மக்களிடம் அது இன்னும் விரைவாகச் செல்வதோடு, அவர்கள் துரிதான செயலிலும் ஈடுபடுவர்” என்றார் சத்குரு. அதைத்தான் நான் செய்தேன்.
  • சமூகம் பற்றியும் சுற்றுச்சூழல் பற்றியும் தனிமனித நல்வாழ்வு பற்றியும் இத்தனை தெளிவாக, விஸ்தாரமாக, ஆழ்ந்தறிந்து நீங்கள் பேசும்போது, நீங்கள் சொல்லி எதைச் செய்யாமல் இருப்பது?
  • இந்த மாபெரும் முயற்சியில் எனக்கும் பங்களித்ததற்கு நன்றி!

டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் பேச்சு

Rally-for-Rivers-event-at-Delhi-4

சுற்றுச்சூழல், பருவமாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர்.ஹர்ஷ் வர்தன் அவர்கள்:

  • நான் டில்லியில்தான் பிறந்து வளர்ந்தேன். இந்த அரங்கத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இதுபோன்ற உற்சாகமும், உத்வேகமும் நிறைந்த கூட்டத்தை நான் இதுவரை இங்கு பார்த்ததில்லை.
  • இப்பேரணி கோவையில் துவங்கும் போதும் நான் உடனிருந்தேன், இன்று முடிவிற்கு வரும்போதும் உடன் இருக்கிறேன் என்பதில் எனக்கு மட்டட்ற மகிழ்ச்சி.
  • சத்குரு எங்களிடம் ஒப்படைக்க உள்ள திட்டப் பரிந்துரையை நன்கு ஆராய்ந்து, புரிந்து கொண்டு செயல்படுத்த ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
  • இன்று பிரச்சினைகளாக உருவெடுத்திருக்கும் சுற்றுச்சூழல், நதி, காடுகள், அழிந்துவரும் வன விலங்குகள், மாறி வரும் பருவநிலை எதுவுமே தொழில்நுட்பப் பிரச்சினைகள் அல்ல. இவையெல்லாம் நம் மேற்போக்கான, பொறுப்பற்ற தன்மையால் வந்திருக்கிறது.
  • நம் முன்னோர்கள் நமக்கு சுத்தமான காற்று, நீர், வளமான பூமி, காடுகளை விட்டுச் சென்றார்கள். அதை அவ்வாறே நம் வருங்கால சந்ததிகளுக்கு கொடுப்பது நம் கடமை.
  • நம் இயற்கை வளம் பெருக நாம் எல்லோரும் ஒன்றாக செயல்பட்டால், நம் பொருளாதாரம் பெருமளவில் வளர்ச்சி பெறும்.
  • எங்களுடன் சேர்ந்து இத்திட்டப் பரிந்துரை அமலாக்கத்தில் பங்குபெறுங்கள்

சத்குரு அவர்கள் பேச்சு

newdelhi-45

சத்குரு:

இந்த 30 நாள் அனுபவம்:

  • இதுபோல் அதிகப்படியாக நான் கார் ஓட்டி 8-9 வருடங்கள் இருக்கும்.
  • இந்த 30 நாட்கள் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும் அதேநேரம் வலியையும் கொடுத்திருக்கிறது.
  • 40 வருடங்களுக்கு முன்பு நான் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் சென்றபோது, ஒரு நாளிற்கு 1200 கிமீ வரை பயணிப்பேன். ஆனால் அன்று சாலைகள் இருந்த நிலையில் நான் அவ்வப்போது நின்றுகொண்டு ஓட்டாவிட்டால், என் முதுகு உடைந்திருக்கும்.
  • இன்று பல மாநிலங்களில், அதிலும் குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சாலைகள் வெளிநாட்டிற்கு ஒப்பாக இருக்கின்றன.
  • எத்தனையெத்தனை மக்கள், அதுவும் குக்கிராமங்களில் என்னை யாரென்றும் கூடத் தெரியாதவர்கள், "நதிகளை மீட்க ஒருவர் வருகிறார்" என்ற ஒரே காரணத்திற்காக மழை/வெயில் பாராமல் 5-6 மணிநேரம் நின்று எங்களைப் பார்த்துவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆங்காங்கே பல இடங்களில் மக்களைப் பார்க்க நின்றதால், 5-6 மணி நேரப் பயணங்கள் 13-14 மணி நேரங்களாக நீண்டது. அதனால் எப்போது எவ்விடத்தை அடைவோம் என்பதை திட்டவட்டமாக சொல்ல முடிவதில்லை.
  • இதுபோல் அனைத்து இடத்திலும் மக்களின் ஆதரவும், உத்வேகமும் என்னை நெகிழச் செய்திருக்கிறது. ஆனால் அதே சமயம் ஆறுகளின் நிலை பெரும் சுமையாய் கனக்கிறது.
  • முன்னொரு காலத்தில் பைக்கில் இந்தியாவைச் சுற்றியபோது, ஹோட்டலில் எல்லாம் தங்கவில்லை. பல ஊர்களிலும் பெருகி ஓடும் நதிக்கரையிலேதான் தங்குவேன்.
  • ஆனால் இன்று..? பல குழந்தைகளுக்கு ஆறு என்றால், மணல்பரப்பு என்பதுபோல் ஆகிவிட்டது. இதை நாம் மாற்றியே ஆகவேண்டும்.

மனித சக்தி மகத்தான சக்தி:

  • நீர்வளம் குறைந்து பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். 6-7 வருடங்களுக்கு முன் பலரிடம் பேசியபோது, இப்பிரச்சினைக்கான காரணம், தீர்வு இரண்டும் முக்கியமானவர்களுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த பூதாகாரமான பிரச்சினைக்கு கடிவாளம் போடுவது யார் என்பதே கேள்வியாக இருந்தது.
  • இம்முயற்சியில் பல சிக்கல்கள், பல பிரச்சினைகள் இருந்ததால், ஒரு முட்டாள் மட்டுமே அதைக் கையில் எடுப்பான் என்ற நிலையில் அந்த முட்டாளாக ஆக நான் முடிவு செய்தேன்.
  • ஆனால் மனிதர்களின் மனிதநேயம் தொடப்படும் போது, எல்லோரும் அறிவுப்பூர்வமாக செயல்பட தயாராகிறார்கள்.
  • இதில் சிலர் எப்போதும், இது தவறு, அது குற்றம், இது நடக்காது, அது மோசம் என்று எதிர்மறையாகப் பேசி நாட்டை சதா சோகத்தில் ஆழ்த்துகிறார்கள்.
  • மக்களின் மனதில் என்ன துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. இன்று இப்பயணத்தில் இந்திய மனங்கள் ஒரு பிரம்மாண்டமான சாத்தியமாக ஆக முழு உத்வேகத்துடன் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இதைவிட வேறென்ன வேண்டும்?

newdelhi-77

மஹாத்மாவும் நம்மைப் போல் மனிதர்:

  • இன்று காந்தி ஜெயந்தி. இந்த மனிதர்... நான் அவரை மஹாத்மா என்று சொல்லாமல், மனிதர் என்கிறேன். அவரை மஹாத்மா என்றழைத்து, அவர்போல் நீங்களும் ஆகக்கூடிய சாத்தியத்தை இழந்துவிடாதீர்கள்.
  • கடவுள் என்று நாம் வணங்கும் சிவன், ராமர், கிருஷ்ணர், புத்தர், மஹாவீரர் எல்லோரும் இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்கள்தான்.
  • நம்மைபோல் அவர்களும் வாழ்வின் நாடகத்தை வாழ்ந்தார்கள். ஆனால் அந்த நாடகத்தைத் தாண்டி உயர்ந்ததால், 5000 ஆண்டுகள் தாண்டியும் அவர்களை மறக்கமுடியாமல் அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
  • சமீப காலத்தில் பார்த்தால் மஹாத்மாவும் அதுபோல் ஒருவர்தான். நாடகத்தைத் தாண்டி உயர்ந்தாலும் தெளிவான பார்வையோடு அன்றைய பிரச்சினைக்கு தீர்வு காண்பித்தார்.
  • உப்பு சத்தியாகிரகத்தில் அவரோடு சென்றவர்கள் வெறும் 72 பேர். அங்கு காந்தியடிகள் குனிந்து ஒரு கை உப்பை எடுத்துக் காட்டினார். இதுபோய் சுதந்திரத்திற்கு வழிவகுக்குமா என்று எதிர்மறையாளர்கள் சிரித்திருப்பார்கள்.
  • ஆனால் அதுதான் ஆங்கிலேயர்களை வெளியேற்ற பெரும் ஊக்கமாக அமைந்தது. இந்த மிஸ்டு-காலும் அதுபோல்தான். இன்றைய நிலையை சீர்செய்ய இது பெருமளவில் வழிசெய்யும்.

மக்கட்தொகை:

  • 70 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கிடைத்தபோது, நம்மை எப்படியெல்லாம் முடமாக்க முடியுமோ அப்படியெல்லாம் நம்மை ஒடித்துவிட்டுச் சென்றனர்.
  • அன்று நம் நாட்டின் சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு வெறும் 28 வயதுதான். இன்று அது 68 ஆக உயர்ந்திருக்கிறது.
  • இந்த 70 வருடங்களில் பிழைப்பு, முன்னேற்றம் என்று சென்றதில் பல தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் அன்றிருந்த சூழ்நிலையில் நடந்தவற்றை இப்போது நாம் விமர்சனம் செய்வது சரியல்ல. நாம் உண்ணும் உணவும், அனுபவிக்கும் வசதிகளும் அதிலிருந்து வந்ததுதான்.
  • ஆனால் இப்போது அத்தவறுகளை சரிசெய்யும் நேரம். உடனடியாக இதில் இறங்காவிட்டால், நமக்கு இனி எதிர்காலம், பிழைப்பு, முன்னேற்றம் எதுவும் இருக்காது.
  • 1947ல் நம் மக்கட்தொகை வெறும் 32 கோடி. இன்று நாம் 130 கோடி. இதில் இனியாவது சிறிது கவனம் தேவை. இது பல குழந்தைகள் பிறந்ததால்தான் என்று சொல்லிவிட முடியாது ஏனெனில், சராசரி ஆயுள் எதிர்பார்ப்பும் அதிகரித்திருப்பதாலும் தான். இதோ நான் இன்று உயிரோடு இருப்பதும் அதனால்தானே?
  • பல கோடி பேர் ஒன்றாக வாழ்கிறோம். நம் பிரச்சினைகளும் பன்மடங்காகிவிட்டது. இந்த சூழ்நிலையில் நாம் உடனடியாக நிலைக்கக்கூடிய வழிமுறைகளுக்கு மாறியே ஆகவேண்டும்.
  • மலைகள், காடுகள், நதிகள் போன்ற வளங்களுக்கு "நிலைக்கக்கூடிய" திட்டம் என்றால் 500 ஆண்டுகால திட்டம்தான். அவற்றைப் பொறுத்தவரையில் அடுத்த 5, 25, 50 ஆண்டுகளில் என்பதுபோல் சிந்திக்கக்கூடாது.
  • நம் திட்டப்பரிந்துரை 500 ஆண்டுகளில் நாம் எப்படி இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வார்க்கப் பட்டுள்ளது.
  • ஆனால் அது நடக்க, குறைந்தது அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாம் திசைமாறாது மிகத் தீவிரமான செயலில் ஈடுபடவேண்டும்.

திட்டப்பரிந்துரை:

  • 700 பக்கங்கள் கொண்ட இத்திட்டப் பரிந்துரையை 27 விஞ்ஞானிகளும், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகமும் பல மாதங்களாக இரவு-பகல் பாராமல் கருத்தாய்வில் ஈடுபட்டு உருவாக்கி இருக்கிறார்கள். இதை நாளை காலை மத்திய அரசிடம் ஒப்படைத்தபின், பலரின் பரிசீலனைக்கும் முன்வைக்கப்படும்.
  • அடுத்த 3-4 மாதங்களில் அதை ஆராய்ந்து, திருத்தங்கள் தேவைப்படின் அதையும் உள்ளடக்கி, இதை செயல்படுத்தத் தயாராவோம்.
  • இதை அரசாங்கம் மட்டுமே செய்துவிட முடியாது. பல துறைகளுக்கு நடுவே இவை செயல்படுத்த வேண்டும் என்பதால், ஈஷா அறக்கட்டளை பெருமளவில் இதில் பங்கெடுக்கும்.
  • ஏற்கெனவே சில மாநில அரசுகளுடன் இதற்கான உடன்படிக்கை ஒப்பந்தத்தையும் கையெழுத்திட்டு உள்ளோம்.
  • இதில் வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை ஏற்கெனவே சிறு அளவில் தமிழ்நாட்டில் செயல்படுத்தி, அது வேலை செய்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்துவிட்டோம்.
  • ஆனால் இது முழுமையாக வெற்றி பெற வேண்டுமெனில், இதில் வழங்கப்பட்டிருக்கும் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதில் ஒரு பகுதியை நிறைவேற்றினால் மட்டும் போதும், கிடைப்பது கிடைக்கட்டும் என்று விட்டுவிட முடியாது. அவ்வாறு செய்தால் இது முழு தோல்வியில் முடியும்.
  • "என் குழந்தை" என்று சண்டைபோட்டுக் கொண்ட இரு பெண்களுக்கு, குழந்தையை பாதியாக வெட்டி ஆளுக்கொரு பாகம் கொடு என்று சொல்லி, உண்மையான தாயை ஒரு அரசன் கண்டுபிடித்தானாம். முழுமையாக இருந்தால்தான் குழந்தை என்பதுபோல், இதை முழுமையாய் செயல்படுத்தினால்தான் இது வேலை செய்யும்.

newdelhi-79

"தேசம்" என்பதற்கு உணர்ச்சி அவசியமா?

  • இதற்கு நாம் "பாரத தேசம்" என்ற உணர்வு பெருமளவில் உறுதியாக வேண்டும்.
  • இதென்ன இப்போது எங்கு சென்றாலும், "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷங்கள் எழுப்புகிறார்கள். ஒரு தேசத்திற்கு இவ்வளவு உணர்ச்சிகள் தேவைதானா? தேசிய கீதம் கேட்டால் எழுந்து நிற்பதெல்லாம் எதற்கு?" என்று கேட்கிறார்கள்.
  • குடும்பம் என்பதை உணர்ச்சிப் பங்களிப்பில்லாமல் எப்படி உருவாக்க முடியாதோ, அதேபோல்தான் உணர்ச்சிப் பங்களிப்பின்றி தேசத்தையும் உருவாக்கமுடியாது.
  • நம் தேசிய கீதத்திற்காக வெறும் 57 நொடிகள் நிற்பதும்கூட பிரச்சினையாக இருக்கிறது? நீங்கள் நிமிர்ந்து பார்க்கும் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டை ஆரம்பிக்கும் முன்கூட தேசியகீதம் பாடுவார்கள் என்று தெரியுமா உங்களுக்கு?
  • இந்த நாடு என்பது உங்களுக்கு முக்கியமில்லை எனில், தம் வாழ்வையும், உயிரையும் துச்சமாக மதித்து, ஒருநாள் சண்டையில் உயிர் இழக்க நேரிடும் என்று தெரிந்தும் நம் எல்லைகளைக் காத்து நிற்கிறார்களே நம் ஜவான்கள் அவர்கள் அதைச் செய்வதற்கு என்ன அவசியம் இருக்கிறது?

விவசாயி:

  • உலக மக்கட்தொகையில் 20% நம் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அதில் 40% மக்கள் இன்னும் வயிறார உண்பதில்லை.
  • சிறிதேனும் மனிதநேயம் இருப்பின், 1 வேளை உணவுட சரிவரக் கிடைக்காத அவர்களைப் பற்றிய கவனம் நமக்கு இருக்கவேண்டும்.
  • நமக்கு வெட்கக்கேடான, தலைகுனிவான விஷயம், நமக்கு உணவளித்த விவசாயிகள் இனத்தில் 3 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டிருப்பது.
  • சமீபத்தில் நடந்த 3 போர்களில் கூட அத்தனை பேர் இறக்கவில்லை. தனக்கு வேறு வழியே இல்லை என்ற நிர்பந்தத்திற்கு வராமல் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளமாட்டார்கள். அப்படிபட்ட நிலைக்கு நம் விவசாயிகள் செல்வதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
  • வளமிழந்த பூமி, தண்ணீர் பற்றாக்குறையோடு விவசாயம் செய்ய இறங்கினால், நாமும் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியிருக்காது.
  • அவர்கள் செய்யும் "விவசாயம்" எனும் மகத்தான செயலை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டுமெனில், மண் வளமும், நீர் வளமும் பெருக வழிசெய்ய வேண்டும். இத்திட்டப் பரிந்துரையை செயல்படுத்துவதால், இது நடப்பதோடு, விவசாயிகளின் வருமானம் 3-8 மடங்கு உயரும்.

வேண்டுகோள்:

  • இரவு உண்பதற்கு முன், 20 நொடிகள் கண்மூடி இன்று உணவின்றி வாடும் மக்களின் நிலையை எண்ணிவிட்டு, பின் உங்கள் உணவை உண்ணுங்கள். இது உங்கள் உணவை தடுப்பதற்கல்ல. மனிதநேயத்தோடு, ஒரு மனிதனாக நீங்கள் அந்த உணவை உண்ணவேண்டும் என்பதற்காக.
  • மற்ற நகரங்களைப் போலவே டில்லியில் இருந்தும் 100 இளைஞர்கள் எங்களுக்குத் தேவை – 3 ஆண்டுகளுக்கு. “அப்போ நான்? எனக்கென்ன கிடைக்கும்” என்ற எண்ணம் இல்லாமல் இருப்பதுதான் உங்களிடம் நான் எதிர்பார்க்கும் ஒரே தகுதி.
  • 2 வேளை உணவு, உறங்க இடம். என்னால் அவ்வளவுதான் கொடுக்க முடியும். தவறாக எண்ணவேண்டாம். எனக்கும் அவ்வளவுதான் கிடைக்கிறது. இப்படி உங்களை மறந்து, உங்களைவிட மிகப் பெரிதான ஒன்றை உருவாக்கும் செயலில் நீங்கள் ஈடுபட்டால், அதில் உங்களுக்கு ஏற்படும் வளர்ச்சி, கிடைக்கும் ஆனந்தம் மகத்தானதாக இருக்கும்.
  • வரலாற்றில் நமக்கான நேரம் இது. இதைத் தவறவிட்டால், பின் நிலைமையை சீர்செய்வது மிகக் கடினம்.
  • பொறுப்பான தலைமுறையாக நம் நாடு மீண்டும் வளம் பெற சேர்ந்து செயல்படுவோம்.
  • இதை நிகழச்செய்வோம் வாருங்கள்!

மேதகு வெங்கைய நாயுடு அவர்கள் பேச்சு

newdelhi-42

newdelhi-90

newdelhi-44

newdelhi-78

துணை ஜனாதிபதி மேதகு வெங்கைய நாயுடு அவர்கள்:

  • சத்குருவின் செய்தியை புரிந்துகொண்டு, “இயற்கையைப் பாதுகாக்கும் இந்த முயற்சியில் நிச்சயம் பங்கெடுப்பேன்” என்று காந்தி ஜெயந்தி அன்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • நம் நாட்டின் அடிப்படை நாளம், உயிர்நாடி எல்லாமே நதிகள்தான். நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தண்ணீருக்கு இடமுண்டு.
  • நதிகள் இன்றிருக்கும் நிலையை இனியும் நாம் புறக்கணிக்க முடியாது.
  • எல்லாவற்றையும் “அரசாங்கம் செய்யும்” என்று ஒதுங்கி இருக்காதீர்கள். நீங்களும் இதில் ஈடுபடுங்கள்.
  • தற்சமயம் இதற்காக நீங்கள் செய்யவேண்டியது மிஸ்டு-கால். அதைத் தவறாமல் கொடுத்துவிடுங்கள்.
  • அதன்பின் “மாற்றத்தின் அங்கமாக” செயல்பட்டு, மரம் நடவு, பராமரிப்பு, நதி மீட்பிலும் ஈடுபடுங்கள்.
  • இன்றைய நிலவரம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதன் தீவிரத்தை உணர்ந்து நதிகளை மீட்க முன்வாருங்கள். நீரில்லாமல் வாழ்க்கையில்லை.
  • இப்படியொரு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அரசாங்கம், சட்டதிட்டங்கள் இயற்றுவோர் துரிதமாக செயல்பட சத்குரு ஒரு முனைப்பை உருவாக்குகிறார்.
  • இது தீவிரவாதம் அல்ல, சமூக, அரசாங்க எதிர்ப்பல்ல, மத-இன பிளவுக்கு வழிவகுப்பதும் அல்ல. மாறாக நம் ஒற்றுமைக்கும் நம் எதிர்கால நலனுக்கும் சத்குரு விழிப்புணர்வை உருவாக்கி வருகிறார்.
  • இதில் தவறெதுவும் இல்லை. இதை எதிர்த்து ஏன் விமர்சனம் செய்கிறார்கள் என்று புரியவில்லை.
  • இப்பேரணிக்கு தொழில் ஸ்தாபனங்கள் பொருளுதவி செய்வதில் தவறென்ன? நம் சுதந்திர போராட்டத்திற்கே இதுபோன்ற நிதியுதவி தேவைப்பட்டது!
  • இதை மக்கள் இயக்கமாக மாற்றி, எல்லோரும் ஒன்றாக செயல்படுங்கள். நாம் உயிர்வாழ்வதற்கும் கூட இது மிகவும் அவசியம். இதற்கு ஒரு குறிக்கோள்தான் உள்ளது – வளமான நம் எதிர்காலம். இதில் நாம் பிரிந்துநிற்க ஒன்றுமில்லை.
  • இதற்கு ஆதரவாக ஏற்கெனவே பல பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமாத்துறை அன்பர்கள், ஊடகங்கள் செயல்படுவது சந்தோஷமாக உள்ள்ளது.
  • நம் மொழி, கலாச்சாரம் எல்லாம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் நாம் ஒரே நாடு! ஒன்றாக செயல்படுவோம், நலமாக, வளமாக வாழ்வோம்.

பேரணிக்கு ஆதரவு

newdelhi-43

newdelhi-82

newdelhi-83

newdelhi-91

துணை ஜனாதிபதி திரு. வெங்கைய நாயுடு அவர்கள் விடைபெற்றுக் கிளம்புகிறார்

newdelhi-46

நம் “சாரதிகள்” அணி

newdelhi-87

இந்த 30 நாளும் இரவு-பகல் பாராது சத்குருவின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, 9300 கி.மீ, 16 மாநிலங்கள் பயணித்த – மற்றவர்கள் பயணிக்க வழிசெய்த நம் ஓட்டுநர்கள் இவர்கள்.

பகிர்வு வீடியோ:

உடன் பயணித்த ஈஷா யோக மையத்தினர் மற்றும் வீடியோ குழு

இப்பேரணி சிறப்பாக நடப்பதற்கு கூடவே பயணித்து உறுதுணையாக இருந்த ஈஷா யோக மையத்தினர், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா, இப்பேரணியை வீடியோவாகப் பதிவுசெய்த வீடியோ குழு மற்றும் புகைப்படக் குழு.

newdelhi-88

பேரணி நிறைவடைகிறது… ஆனால் வேலை ஆரம்பமாகிறது

newdelhi-86

இத்துடன் பேரணியின் நிறைவுக்கு வந்துவிட்டோம். ஆனால் சத்குரு சொல்வதுபோல், “இனிதான் நிறைய வேலை உள்ளது”. நாளை நாம் மத்திய அரசிடம் திட்டப் பரிந்துரையை ஒப்படைத்தபின், அந்த 700 பக்க திட்டப் பரிந்துரையின் நகல்களை மாநில அரசாங்கங்கள், ஊடகங்கள், உள்நாட்டு-வெளிநாட்டு சற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலருக்கும் விநியோகிக்க உள்ளோம். அதனை நன்றாக கலந்தாலோசித்து, அதில் திருத்தங்கள் இருப்பின் அவற்றை முன்வைக்கலாம். அடுத்த 3-4 மாதங்களுக்குள் இந்தப் பரிசீலனை முடிவுற்று, தேவையான மாற்றங்கள் (இருப்பின்) செய்தபிறகு, அதை செயல்படுத்த நாம் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். அதுவரை காத்திருங்கள். அதற்கு முன்பாக, இன்னும் அக்டோபர் – 30 வரை நேரம் உள்ளது. இன்னும் பலரின் மிஸ்டு-கால் கிடைக்க வேண்டியிருக்கிறது. அதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல், தொடர்ந்து முயற்சித்து, உங்களுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லோரும் மிஸ்டு-கால் கொடுக்க வழிசெய்யுங்கள்.

நாளை (அக்டோபர் 3) இரவு 8 மணிக்கு நேரடி “இணைய” ஒளிபரப்பில் ஆதரவாளர்களுடன் சத்குரு பேசவுள்ளார். விருப்பமிருப்பவர்கள், youtube.com/Sadhguru, facebook.com/Sadhguru வலைபக்கங்களில் அதைக் காணலாம்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்!

புதுடில்லி பேரணி - தொகுப்பு

புதுடில்லி பேரணி - முழு வீடியோ