“நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்” பேரணிக்காக சத்குருவின் 30 நாள் பயணம் – நாள் 28
28ம் நாள். இன்று அதிகாலை, அம்ரித்சரில் இருந்து கிளம்பி, லூதியானா வழியாக ஹிமாச்சல பிரதேசம் சென்று, அங்கிருந்து ஹரித்வார் செல்ல உள்ளோம்.
28ம் நாள். இன்னும் இரண்டு நாட்களில், அக்டோபர்-2 அன்று புதுடில்லியில் திட்டப்பரிந்துரையை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க உள்ளோம். இப்பேரணி முழுவதும் அந்த ஒன்றிற்குத் தேவையான மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்காக. உங்களில் இன்னும் சிலர் “மிஸ்டு-கால்” சேகரிப்பதில் ஏதேனும் முயற்சியை மீதம் வைத்திருந்தால், இனி அவ்வளவு நேரம் கையில் இல்லை. இது கடைசி 3 நாட்கள். உடனடியாக செய்ய முடிந்ததை எல்லாம் செய்து இன்னும் பல மிஸ்டு-கால் வாக்குகளை சேகரியுங்கள். இன்று அதிகாலை, அம்ரித்சரில் இருந்து கிளம்பி, லூதியானா வழியாக ஹிமாச்சல பிரதேசம் சென்று, அங்கிருந்து ஹரித்வார் செல்ல உள்ளோம்.
முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.
அதிகாலையில் அம்ரித்சர்
பியஸ் நதி:
பியஸ் நதி - வேறொரு இடத்திலிருந்து
அம்ரித்சரில் பள்ளி மாணவர்களை சத்குரு சந்திக்கிறார்
வீடியோ:
அம்ரித்சரில் இருந்து சத்குரு செய்தி
சத்குரு:
அம்ரித்சரில் இருந்து கிளம்புகிறோம். “ஹர்மந்திர் சாஹிப்” அல்லது சுற்றுலாப் பயணியரின் மொழியில் “கோல்டன் டெம்பிளின்” நகரத்திலிருந்து. சீக்கியர்களின் புண்ணிய ஸ்தலமான இங்கு, மதபேதமின்றி ஒவ்வொரு நாளும் பலர் வந்து போகிறார்கள். தங்கத்தால் கவசம் கொண்டிருக்கும் அழகான கோவில். அதைச் சுற்றி அழகானதொரு ஏரி. அம்ரித சரோவர் எனும் அந்த ஏரியின் பெயரில் இருந்துதான் அம்ரித்சர் என்று இந்த ஊர் வழங்கப்படுகிறது. இங்கிருந்து கிளம்பி மற்றுமொரு புண்ணியஸ்தலமான ஹரித்வாருக்குச் செல்கிறோம். ஹர-த்வார். அதாவது சிவனை அடையும் கதவுகள் என்று பொருள்படும். கங்கை நதிக்கரையிலே, ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் மிகத் தூய்மையாக வெளிப்படும் கங்கையின் கரைகளிலே அமைந்திருக்கும் இடம். இன்றளவில் அணையில் இருந்து வருவதால் அந்தளவிற்கு தூய்மையாக இருப்பதில்லை. இங்கிருந்து கிட்டத்தட்ட 500 கி.மீ பயணிக்க வேண்டும், நடுவில் ஹிமாச்சல பிரதேசம் தொட்டுச் செல்வதால். வழியில் சில இடங்களில் மக்களையும் சந்திக்கவிருப்பதால், இது 13-14 மணிநேர பயணமாக அமையலாம். தற்சமயம் 8648 கி.மீல் இருக்கிறோம். இன்று ஹரித்வார் செல்வதற்குள் 9000 கி.மீ தாண்டிவிடுவோம். பேரணி தொடர்கிறது!
Subscribe
வரும் வழியில் பில்லவுர் ஊராட்சி
இங்கு ஓட்டுநர்கள் உணவருந்த சிறிது நேரம் நின்றோம். அவ்வூரில் இருந்த சிவன் கோவிலும், சிலையும்.
இங்கு கோவிந்த் என்பவர் குழந்தைகளுக்கான ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரை தற்செயலாக சந்தித்து பேசியபோது, மிக ஆர்வமாக மிஸ்டு-கால் கொடுத்ததோடு, “இது மிகமிக அவசியமான இயக்கம். என் ஊரில் இருக்கும் அனைவரையும் இதற்கு மிஸ்டு-கால் கொடுக்கச் செய்வது என் பொறுப்பு” என்றும் கூறினார்.
லூதியானாவில் சத்குரு மக்களைச் சந்திக்கிறார்
லூதியானா ஆதரவாளர்கள் பகிர்வு:
லக்விந்தர் பாபு கில்: இப்பேரணிக்காக நாங்கள் வெகு நாட்களாகக் காத்திருக்கிறோம். பஞ்சாப் நதிகளின் நகரம். இங்கு பலர் விவசாயிகள். மிகவும் சந்தோஷமாக அவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து இப்பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
மினிந்தர் சிங்: இப்பேரணி முடிவிற்கு வருகிறது என்பது சோகமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் நாள்தான் இருக்கிறது. அதற்குள் இன்னும் பலருக்கு இச்செய்தியை கொண்டுசெல்ல வேண்டும்.
பைரவி: இது நதிகளின் நிலம். பலரும் இந்நதிகளோடு மிக ஆழமான தொடர்பு கொண்டுள்ளோம். இவற்றைக் காக்க சத்குரு வருவது எங்களுக்கு மிகமிக சந்தோஷம். லூதியானாவில் எல்லோரும் இதற்கு ஆதரவாக சேர்ந்து நிற்போம். சத்குருவிற்காக மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.
லூதியானா அருகே சட்லஜ் நதி
பஞ்சாபின் முக்கிய நதிகளில் ஒன்றான சட்லஜ் நதியை நேற்று அம்ரித்சர் செல்லும் வழியில் பார்த்தோம். இன்று மீண்டும் லூதியானா அருகே…
யமுனா நகர் அருகே பசுமைவெளி
ஹரியானா மாநிலத்தில் யமுனா நகரை தாண்டிக் கொண்டிருக்கிறோம். இவ்விடம் குருக்ஷேத்திரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில்தான் உள்ளது.
எங்கள் சிறு முயற்சி
யமுனா நகரில் நாங்கள் நின்ற சிறிது நேரத்தில், எங்களால் முடிந்த வகையில் ஆதரவு திரட்டினோம். செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர்கள் தங்கள் முகநூலிலும், வாட்ஸ்-ஆப்பிலும் இதைப் பகிர்வதாகச் சொல்கிறார்கள்! இன்னும் வழியில் சிலரிடமும் ஆதரவு திரட்டினோம்.
ஹரியானா… சில காட்சிகள்
ஏரி:
யமுனா நதி:
உத்திரப் பிரதேசத்தின் கிராமங்கள் வழியே பயணிக்கிறோம்
ஹரித்வார் பதஞ்சலி யோகபீடத்தில் சத்குரு
ஹிமாச்சல பிரதேசத்தில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்துவிட்டு, சத்குரு ஹரித்வாருக்கு வந்துவிட்டார். இங்கு பதஞ்சலி யோகபீடத்தில் பாபா ராம்தேவ் அவர்கள் சத்குருவிற்கு ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றார். மேலும் பாபா ராம்தேவ் தமது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவு செய்துள்ளதாவது: "நதிகளை மீட்போம் பேரணியின் நிமித்தம் சத்குரு பதஞ்சலி யோகபீடத்திற்கு வந்திருக்கிறார். இவர் இந்திய ரிஷிகள் சமுதாயத்திற்கே பெருமை"
மேலும் சில தகவல்கள் வர உள்ளன. தொடர்ந்து காண்க.