இன்று உலக ஆறுகள் தினம். மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்திரப் பிரதேசம் செல்லவிருக்கிறோம். நர்மதா பூமியில் இருந்து கங்கை பூமிக்கு! காலையில் விதிஷா எனும் ஊர் வரை முதல்வர் சத்குருவுடன் பயணித்தார். அங்கு கடகரேகையில் (Tropic of Cancer) சற்று நேரம் இருந்துவிட்டு, பெட்வா நதிக்கரையில் மக்களை சந்தித்துவிட்டு, கான்பூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இன்று இரவு கான்பூரில் தங்குகிறோம்.

முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

உலக ஆறுகள் தினம் – சத்குருவின் செய்தி

kanpur-1

இன்று உலக ஆறுகள் தினம். இன்று ஆரம்பித்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் உங்கள் அருகில் இருக்கும் ஏதோவொரு நதியுடன் செல்ஃபியோ, புகைப்படமோ எடுத்து, அந்நதியின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் தற்போதைய நிலையையும் பகிருங்கள் #StandWithRivers

சத்குருவின் உலக ஆறுகள் தின செல்ஃபி

“இதோ எனது முதல் செல்ஃபி, பெட்வா நதியுடன். இதில் நீர் முழுமையாக ஓடுவதுபோல் இருந்தாலும், வருடத்தில் 4 – 5 மாதங்கள்தான் இதில் நீர் உள்ளது” – சத்குரு. #StandWithRivers

(பெட்வா நதி. யமுனை ஆற்றின் கிளைநதி. இடம்: மத்தியப் பிரதேசம்.)

kanpur-36   kanpur-37

மத்தியப் பிரதேசத்தில் இருந்து சகல மரியாதையுடன் வழியனுப்பும் விழா

இன்று காலை முதல்வரின் வீட்டில் இருந்து கிளம்பும்போது, சகல மரியாதையுடன் பொதுமக்கள் சத்குருவை வழியனுப்புகிறார்கள்! விதிஷா வரை முதல்வர் அவர்களும் சத்குருவுடன் பயணிக்கிறார்.

kanpur-4

kanpur-60

kanpur-65

kanpur-6

1-kanpur-52

2-kanpur-65

தேவங்கஞ் அருகே பேரணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்

போபால்-விதிஷா நெடுஞ்சாலையில் தேவங்கஞ் எனும் ஊரில், நதிகளை மீட்க அவர்களே தனிப்பட்ட முறையில் பேரணி நடத்தும் இளைஞர்கள்.

kanpur-2

கடகரேகையில் (Tropic of Cancer) சத்குரு

போபால்-விதிஷா செல்லும் வழியில்தான் கடகரேகை அமைந்துள்ளது. அவ்விடத்தில் பூ செலுத்தி, அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றி சத்குரு விளக்கினார். பின் அங்கிருந்து கிளம்பி, சத்குரு, முதல்வர் மற்றும் அவரது மனைவி விதிஷா நோக்கி பயணமானார்கள்.

kanpur-11   kanpur-12   

"இதோ கடகரேகை தாண்டிவிட்டேன். இன்னும் வடக்கே செல்கிறேன்" என்று சொல்லி, கோட்டைத் தாண்டி கால்வைத்து சத்குரு சிரிக்கிறார்.

kanpur-66

வீடியோவில் சத்குரு சொல்வதாவது:

இந்தக் கடகரேகை பூமியின் சாய்நிலையைக் குறிக்கிறது. யோக விஞ்ஞானத்தில் இதற்கு அதீத முக்கியத்துவம் உள்ளது, ஏனெனில் பூமியின் சாய்வுநிலை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க சக்தியை உருவாக்குகிறது. 11 டிகிரி அட்சரேகை முதல் இந்தக் கடகரேகை வரை உள்ள இடம் சக்திவாய்ந்த இடமாக உள்ளது. அதனால்தான் இப்பகுதியில் அதிகளவில் கோவில்களைக் கட்டினார்கள். இப்போது நாம் இதைக் கடந்து இன்னும் வடக்கே செல்லப் போகிறோம்.

கராரியா கிராமத்தில் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள்

kanpur-14

மத்திய பிரதேசத்தின் சிறு கிராமங்களிலும் இப்பேரணி பற்றித் தெரிந்திருக்கிறது. நாங்கள் இப்பேரணிக்காக செயல்படுகிறோம் என்று தெரிந்ததும், எங்களுக்குக் கொடுத்த டீ, பிஸ்கட்டிற்கு பணம் வாங்க மறுத்துவிட்டார் இந்த டீ கடைக்காரர், தாக்கத் சிங்.

இக்கடைக்கு வந்திருந்த சுதீப் எனும் சிறுவன் பகிர்ந்ததாவது:

எனக்கு இந்தப் பேரணி பற்றித் தெரியும். டி.வியில் ஒரு பாபா இதுபற்றி பேசினார் (சத்குருவின் பெயர் தெரியவில்லை, ஆனால் அவர் பற்றித் தெரியும் என்கிறான் சிறுவன்) விவசாயம், வளம் மற்றும் வாழ்க்கைக்கு நதிகள்தான் ஆதாரம். அவற்றில் குப்பைகள் போடாக்கூடாது, அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். அதனால் நதிகளில் நாம் குப்பை போடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

விதிஷா அருகே காத்திருக்கும் மக்கள், மாணவர்கள்

நுழைவாயிலில் பேரணியின் விளம்பர அட்டைகள் கட்டப்பட்டுள்ளது.

kanpur-9

kanpur-7

kanpur-8

9-kanpur-61

7-kanpur-62

8-kanpur-57-vidi

விதிஷா அருகே பெத்வா நதிக்கு சத்குரு, முதல்வர் பூஜை செய்கின்றனர்

சத்குருவை வரவேற்று ஆரத்தி எடுக்கிறார்கள்

10-kanpur-53

11-kanpur-55

நதிக்கு சத்குரு, முதல்வர் பூஜை செய்கின்றனர்

kanpur-19

உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு, அங்கேயே நதியுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார் சத்குரு. Twitter hashtag: #StandWithRivers

kanpur-18

kanpur-10

பெத்வா நதிக்கரையில் பொதுமக்களை முதல்வர், சத்குரு சந்திக்கின்றனர்

நதிகள் பற்றியும், பேரணி பற்றியும், இனி நதிகளைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் பற்றியும் முதல்வரும், சத்குரு அவர்களும் மக்களிடம் பேசினார்கள்.

3-kanpur-63

4-kanpur-54

5-kanpur-59

kanpur-16

kanpur-30

kanpur-22

kanpur-23

6-kanpur-58

kanpur-24

kanpur-25

kanpur-26

உணவு இடைவேளை…

12-kanpur-64
13-kanpur-50-lalit

உணவை முடித்து சிறிது நேரம் இளைப்பாறலாம் என்று ஃப்ரிஸ்பீ விளையாடினோம். இதில் சத்குருவும் சில நிமிடங்கள் எங்களுடன் கலந்து கொண்டார்.
kanpur-57

மத்தியப் பிரதேசத்தின் கிராம நிலப்பரப்பு

kan-31

பெத்வா நதி:

kan-33

kan-15

kan-32

kan-16

வழியில் தென்பட்ட விலங்கு

இது Barking Deer எனப்படும் மான்வகை போல் தெரிகிறது…

kanpur-42-small

ஆங்காங்கே நம் ஆதரவாளர்கள்

விதிஷா விட்டுக் கிளம்பி செல்லும் வழியில் எல்லாம் ஆங்காங்கே சின்னச்சின்ன ஊர்களில் மக்கள் திரண்டிருந்து, இப்பேரணியை சத்குரு மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்து வணங்குகின்றனர்.
kan-35

kan-34

கஞ்ச் பசோடா அருகே பந்தல் போட்டுக் காத்திருக்கும் மக்கள்
14-kanpur-51-ganj
இன்னும் வேறு சில இடங்களில்
15-kanpur-49-after-vidisha

16-kanpur-56

வேகமாக எங்களைத் தாண்டிச் செல்லும் சத்குருவின் கார்

கோவை ஈஷா யோக மையத்தில் “உலக ஆறுகள் தினம்”

நம் கோவை ஈஷா யோக மையம் அருகே ஓடுகின்ற நீலி நதி (அ) காஞ்சி மாநதிக்கு, உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு மைய அன்பர்கள் பூஜை செய்தனர். சத்குருவின் வேண்டுகோளுக்கு இணங்கி, அடுத்த ஒரு வாரத்திற்குள் நாமும் நம் அருகே ஓடுகின்ற நதியை தேடிச் சென்று பார்த்துவிட்டு வருவோம். அந்நதி புத்துயிர் பெற்று மீண்டும் பழைய கம்பீரத்தோடு ஓடும்வரை, வருடாவருடம் இதைக் கடைபிடிப்போம்.

kan-39

kan-40

kan-41

உத்திரப் பிரதேசம் உங்கள் கண்முன்னே…

உத்திரப் பிரதேசத்திற்குள் மாலை 5 மணியளவில் நுழைந்தோம். நாங்கள் செல்லும் வழியில் தென்பட்ட காட்சிகள் உங்களுக்காக.

ஜான்சி கோட்டை:

kan-43

மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் இரு மாநிலங்களிலும் பொதுவானதொரு காட்சி – சாலைகள், நெடுஞ்சாலைகள் மாட்டினத்திற்கே! நாம் ஓரமாக பார்த்துப் பார்த்து உபயோகித்துக் கொள்ளலாம்.

kan-44

மாலை வானில் முழுநிலவாய்த் தோன்றும் அஸ்தமிக்கும் சூரியன்
kan-45

வீடு திரும்பும் உத்திரப்பிரதேச பிரஜைகள்

kan-46

மேலும் சில தகவல்கள் வர உள்ளன. தொடர்ந்து காண்க.