"மரணம் அப்புறம்?" - மரணத்தைப் பற்றி என்னவெல்லாம் தெரியவேண்டுமோ
அவையெல்லாம் இந்தப் புத்தகத்தில் உள்ளது. இந்தப் புத்தகத்திலிருந்து சில துளிகள் உங்களுக்காக...

"மரணம் அப்புறம்?" புத்தகத்திலிருந்து சில துளிகள்:

  • இறப்பு என்பது ஒரு கட்டுக்கதை. ஏராளமானவர்கள் இதைப்பற்றி பேசி உங்களை நம்ப வைத்து விட்டார்கள். இறப்பு என்று எதுவும் கிடையாது. உயிர், உயிர், உயிர் மட்டுமே இருக்கிறது. ஒரு பரிமாணத்திலிருந்து இன்னொரு பரிமாணத்திற்கும், இன்னொரு பரிமாணத்திலிருந்து மற்றோர் பரிமாணத்திற்கும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
  • இறந்தவர்கள் உயிரோடிருக்கும்போது, உங்களால் அவர்களைப் பார்ப்பதற்கோ, அவர்களுடன் பேசுவதற்கோ அல்லது நேரத்தைப் பகிர்வதற்கோ முடிவதில்லை. அவர்கள் மீது கோபமடைகிறீர்கள். ஆனால் அவர்கள் இறந்த பின்பு, அவர்களுடன் பேசுவதற்காகச் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அங்கே இ-மெயில் வசதியில்லை.
  • மனம் தன்னைப் பல்வேறு விஷயங்களுடன் அடையாளப்படுத்திக் கொண்டதால், தெய்வீக நிலைக்குச் செல்லும் ஏணியாக இருக்கவேண்டிய மனம், துரதிர்ஷ்டவசமாக நரகத்திற்குச் செல்லும் படிக்கட்டுகளாய் மாறிவிட்டது.
  • உங்கள் அன்புக்குரியவரையும் குழந்தையையும் எப்படிப்பட்ட உணர்வோடு பார்க்கிறீர்களோ அதே உணர்வோடு வானத்தையும் மரத்தையும், மண்ணையும் பாருங்கள். பார்க்கும் ஒவ்வொன்றையும் அதே உணர்வோடு பாருங்கள். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தோடும் உங்களுக்குத் தீவிரமும் ஈடுபாடும் இருந்தால் மனம் துன்பமானதல்ல, அது ஓர் அழகான சர்க்கஸ்.

"மரணம் அப்புறம்?" புத்தகத்தை ஆன்லைனில் பெற இங்கே க்ளிக் செய்யவும்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.