மலைவேம்பு ஏன் நட வேண்டும்?!
வரும் தலைமுறையினர் ஆக்ஸிஜனை விலைக்கு வாங்காமல் சுவாசிக்கவும், தண்ணீரை பாட்டிலில் மட்டும் வாங்கிப் பருகாமல், ஆறு குளங்களில் கண்டு ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வாழவும் மரம் நடுவது மிக அவசியம். எந்த மரக்கன்றை நட்டாலும் ஆக்ஸிஜன் நிச்சயம். மலைவேம்பை நட்டால் ஆக்ஸிஜனோடு கைநிறைய பணமும் நிச்சயம். மலைவேம்பை பற்றிய சில அரிய தகவல்கள் இங்கே உங்களுக்காக!

வரும் தலைமுறையினர் ஆக்ஸிஜனை விலைக்கு வாங்காமல் சுவாசிக்கவும், தண்ணீரை பாட்டிலில் மட்டும் வாங்கிப் பருகாமல், ஆறு குளங்களில் கண்டு ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வாழவும் மரம் நடுவது மிக அவசியம். எந்த மரக்கன்றை நட்டாலும் ஆக்ஸிஜன் நிச்சயம். மலைவேம்பை நட்டால் ஆக்ஸிஜனோடு கைநிறைய பணமும் நிச்சயம். மலைவேம்பை பற்றிய சில அரிய தகவல்கள் இங்கே உங்களுக்காக!
Subscribe
ஐந்தாம் வகுப்புப் புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ள "மரம் நடுவோம்! மழை பெறுவோம்!" என்ற வாசகம் முதல் "மரங்கள்... வரங்கள்! வளர்ப்போம், வாருங்கள்!" என்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகள் வரை மரங்களின் முக்கியத்துவத்தை நமக்கு எப்போதும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், பெருகி வரும் மக்கள் தொகையின் அளவுக்கு ஏற்ப, தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை இல்லை என்பதே இன்னும் மாறாத உண்மையாக உள்ளது.
இந்நிலையில், சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் நாற்றுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு பலவகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. அவற்றுள் மலைவேம்பும் ஒன்று. இங்கே மலைவேம்பைப் பற்றி சில தகவல்கள்!
மலைவேம்பின் மகத்துவம் என்ன?!
வளர்ப்பதற்கு பலவகை மரங்கள் இருந்தாலும் இங்கே நாங்கள் மலைவேம்பிற்கு 'லைக்' (Like) போடுவது ஏனென்றால், மலைக்க வைக்கும் அதன் மகத்துவங்களால்தான். நட்ட வேகத்தில் வானந்தொடத் துடிக்கும் அதன் வளர்ச்சி வேகமும், பக்கக் கிளைகளின்றி நெடு நெடுவென வளரும் அதன் தன்மையும் அதில் முக்கிய அம்சம். நடப்பட்ட 3 முதல் 4 ஆண்டுகளில் காகிதம் செய்வதற்கும் தீக்குச்சி செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; 5 முதல் 6 ஆண்டுகள் ஆகிவிட்டால், பிளைவுட் தயாரிப்பதற்கு தயாராகிவிடும். 7 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து விட்டாலோ மரச் சாமான்கள் செய்துவிடலாம்.
பொதுவாக, மலையோர மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் மட்டுமே முளைக்கும் தன்மை கொண்ட மலைவேம்பு விதைகள், முளைப்பதில் மிக மிகச் சோம்பேறிகள்தான் என்றாலும், முளைத்து கன்றாகி விட்டாலோ அதன் வளர்ச்சி வேகம் அபாரமானது. ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளில் தரமான மலைவேம்பு விதைகளைத் தேர்ந்தெடுத்து கன்றுகளாக்கி தமிழகம் முழுக்க விநியோகிப்பதற்காகக் காத்திருக்கிறோம். கிடைப்பதற்கு அரிதான இந்த மரக்கன்றுகள் மிகக் குறைந்த விலையில் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் வழங்கப்படுவது அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
'மீலியேசி' பத்தி கொஞ்சம் யோசிங்க!
'மீலியேசி'ய நம்ம வணிக நோக்கத்துல ஏக்கர் கணக்கில் கூட நட்டு பயன் பெற முடியும். என்ன திடீர்னு மீலியேசினு ஏதோ ஒரு மரத்தப்பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கன்னு நினைக்கிறீங்களா?!தாவரவியல் படி மலைவேம்பு 'மீலியேசி' குடும்பத்தைச் சார்ந்தது. நமக்குத் தாவரவியல் பெயர் முக்கியமில்லையென்றாலும்,அதை எப்படி பயிர் செய்து வளர்ப்பது என்பது மிகவும் முக்கியமானது.
வடிகால் வசதிகொண்ட, ஓரளவுக்கு மண்வளம் மிக்க பகுதிகளில் செழித்து வளரக் கூடிய இந்த மலைவேம்பை, ஏக்கருக்கு 400 செடிகள் வீதம் நட்டால் (10 அடிஜ் 10 அடி), ஒரே வருடத்தில் 35 செ.மீ சுற்றளவில் 20 அடி உயர மரங்கள் கொண்ட மலைவேம்புத் தோப்பாக மாறிவிடுகிறது. 5 அல்லது 7 வருடங்கள் கழித்து வெட்டும்போது ரூ.15 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இது தவிர மரங்களுக்கிடையில் ஊடுபயிராக மற்ற பயிர் வகைகளையும் நட்டு பலன் பெற முடியும்.
ஏக்கர் கணக்கில் நிலம் இல்லாதவர்கள் நமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என சென்று விட வேண்டாம். வைரஸை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட இந்த மலைவேம்பு இலைச் சாறு, பெண்களின் கருப்பை கோளாறுகளுக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. உங்கள் வீட்டு முற்றத்திலோ அல்லது கொல்லைப் புறத்திலோ ஒரு மலைவேம்பு இருக்கட்டுமே!
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்
இத்திட்டத்தின் மூலம், தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யபபடுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலைகளில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ. பே. 94425 90062