மகோகனி மரங்கள் தரும் மகத்தான பலன்கள்!
‘மகோகனி’ என சொல்லப்படும் மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது.

நம்முடைய ஒரு பகுதி நுரையீரல் மரங்களில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது என சத்குரு நமக்கு அவ்வப்போது நினைவூட்டுகிறார். சுற்றுச்சூழல் நலன் காக்கவும் வரும்கால சந்ததியினர் சுகமாக சுத்தமான காற்றை சுவாசிக்கவும் மரங்களை நட்டு பசுமைப் பரப்பை அதிகரிப்பது அவசியமாகிறது. அதேசமயத்தில் பொருளாதார ரீதியாகவும் மரம் வளர்த்தல் அதிக பயனை தருகிறது. அந்த வகையில் டிம்பர் வேல்யூ என சொல்லப்படும் அதிக பருமனுள்ள பெரிய மர வகைகளுக்கு சந்தையில் மதிப்பு அதிகம் உள்ளது. மரங்கள் வளர்ப்பு லாபம் நிறைந்த விவசாயமாக தற்போது வளரத் தொடங்கியிருக்கிறது.
உதாரணமாக, தேக்கு, செம்மரங்கள், மகோகனி போன்ற மரங்கள் மனிதனுக்கு குடியிருப்புகளாக, கடலில் செல்ல கப்பல் தயாரிக்க உதவும் மூலப்பொருளாக, மேசைகள், நாற்காலிகள் போன்ற மரச்சாமான்கள் செய்ய உதவக் கூடியவைகளாக உள்ளன.
இவற்றுள் ‘மகோகனி’ என சொல்லப்படும் மரம் வீட்டின் நிலைக்கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றில் பயன்படுவதோடு கப்பல் கட்டும் பணியில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கருவிகள், பென்சில்கள் செய்யவும் ஏற்றது. இத்தகைய பலன்தரும் மரங்கள் பற்றாக்குறை ஏற்படும் போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், இம்மரங்களை நாமே நம் ஊர்களில் நட்டு வளர்க்க முடியும், மரங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும்போது மழை பொழிவும் அதிகம் ஏற்படும்; விவசாயமும் செழிக்கும்.
Subscribe
மேற்கிந்திய தீவுகளை தாயகமாக கொண்ட, ‘மீலியேசி’ எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்த மகோகனி, மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் மரங்களில் ஒன்றாக உள்ளது.
அதிக நிழல் விழாத மரமாக இருப்பதால் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் நடுவதன் மூலம், மண் வளம், நீர் வளம் மேம்படுவதோடு கணிசமான வருவாயை இம்மரங்கள் ஈட்டித்தரும். 1 ஏக்கருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங்களில் நட முடியும். 10 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். மேலும் இம்மரங்கள் காற்றுத்தடுப்பு வேலியாக செயல்படுவதால், அதிக காற்றினால் பயிர்களும் மற்ற மரங்கள் சேதமாகாமல் காக்கலாம்! நகரங்களில் கட்டிட வளாகங்களில் ஒரு வரிசையாக மகாகொனி மரங்களை நடலாம். இம்மரங்கள் நகரங்களில் மாடிகளில் வசிப்பவர்களுக்கு காற்றை வடிகட்டிக் கொடுக்கும்.
கட்டுமானத்துறைக்கு மரத்தின் தேவைப்பாடு அதிகம் இருப்பதால் வேளாண்காடுகள் வளர்ப்பு நல்ல லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.
ஈஷா பசுமைக் கங்கள் திட்டம்
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.7.00) வழங்கி வருகிறது.
உருவாக்கப்படும் வேளாண் காடுகள்
நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, மகோகனி, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.
ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பார்கள்.
தமிழகமெங்கும் 33 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமை கரங்கள் திட்டம்' அமைத்துள்ளன. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ. பே. 94425 90062