ஈஷாவில் நடந்தவை…
ஈஷாவில் இந்த வாரம் நிகழ்ந்த அழகிய இரு நிகழ்வுகள் இங்கே உங்களுக்காக...

மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு முகாம்
ஈஷா அரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தின் மூலம் ஏப்ரல் 21 முதல் 23 வரை சேலம் மற்றும் கோயம்புத்தூரில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், மாணவ மாணவிகளின் மாற்று அறிவுத்திறனை வெளிக்கொணரும் வகையில் கலை, கைவினைப் பொருட்கள், யோகா மற்றும் சதுரங்க விளையாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
ஈஷாவில் விவசாயிகள் சந்திப்பு
ஏப்ரல் 23ம் தேதியன்று, ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.பிரவேஷ் ஷர்மா அவர்களின் தலைமையில், ஈஷாவில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மட்டுமல்லாமல், வேலாயுதம்பாளையம், கோபி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் சுமார் 90 விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயம் சார்ந்த அனைத்து வகையான பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதோடு திரு.பிரவேஷ் ஷர்மா அவர்களால் அதற்குரிய தீர்வுகளும் வழங்கப்பட்டன.
Subscribe