Wisdom
FILTERS:
SORT BY:
வெற்றியோ தோல்வியோ, நீங்கள் 100% விளையாடத் தயாராக இருந்தீர்களானால், வாழ்வெனும் விளையாட்டிற்கு நீங்கள் உண்மையாகவே தயாரானவர் என்று பொருள்.
அன்புக்கு காப்பீடு இல்லை. அன்பை உயிர்ப்புடன் வைத்திருக்க விழிப்புணர்வு வேண்டும்.
எதிர்வினை என்பது ஒருவரது கடந்தகால ஞாபகப்பதிவுகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் செய்வது. பதில்வினை என்பது இந்தக் கணப்பொழுதில் விழிப்புணர்வாக செய்வது. பதில்வினை ஆற்றக் கற்றுக்கொள்ளுங்கள், எதிர்வினையல்ல.
பிரபஞ்சத்தில் நிகழும் அசைவுகள் அனைத்தும் மேலோட்டமானவை. உண்மையானது எப்போதும் அசைவின்றி இருக்கிறது.
அன்பு காட்டவும், உதவி செய்யவும், உயிரை உணரவுமான உங்கள் ஆற்றலுக்கு எல்லையில்லை. எல்லை என்பது உடல் மற்றும் மனதின் செயல்பாட்டில் மட்டுமே உள்ளது.
பரிவர்த்தனைகளில் இருந்து பொருள்கடந்த தன்மைக்கு நகர்வது, மனிதர்கள் எடுக்கவேண்டிய அத்தியாவசியமான படி. அப்போதுதான் மனிதராய் இருப்பதன் உண்மையான மதிப்பை உணரமுடியும்.
உங்களுக்கு தன்னிலை மாற்றம் நிகழவேண்டும் என்றால், அதன் பெரும்பகுதி உங்கள் உடலில் நடக்கவேண்டும், ஏனென்றால் உடல்தான் மனதை விட அதிக ஞாபகப்பதிவுகளை சுமக்கிறது.
உங்களை நீங்களே உணராதபோது மட்டும்தான் பிறர் கருத்துகள் உங்களுக்கு முக்கியமாகிறது.
ஆன்மீக செயல்முறை என்பது சமூகரீதியான செயல் அல்ல; அது உங்களுக்குள் நீங்கள் செய்யும் விஷயம்.
"பயன்படுத்தி தூக்கியெறியும்" மனப்பான்மையை ஒழிப்பது, மாசுபடுதலைக் குறைப்பதைப் பற்றியது மட்டுமல்ல, படைப்பு முழுவதையும் மதிப்பதைப் பற்றியது. அனைத்தும் உயிருள்ள பூமியிலிருந்து வருகிறது. அதை பொறுப்புடன் பயன்படுத்தக் கற்றுக்கொள்வோம்.
தெய்வீகம் என்பது சொர்க்கத்திலிருந்து கீழிறங்கி வந்த விஷயமில்லை - அது ஒரு ஏணி, அதில் ஏறி நீங்கள் ஒரு உயர்ந்த சாத்தியத்திற்கு பரிணமிக்க முடியும்.
வாழ்க்கை என்பது வரமோ சாபமோ இல்லை, அது வெறுமனே ஒரு நிகழ்வு. அதில் நீங்கள் நன்றாக சவாரி செய்தால் அழகாகவும் அற்புதமாகவும் ஆகிறது, மோசமாக சவாரி செய்தால் அசிங்கமாகவும் சித்திரவதையாகவும் ஆகிறது.