Wisdom
FILTERS:
SORT BY:
உங்கள் தற்போதைய இருப்பின் எல்லைகளை நீங்கள் கடக்க விரும்பினால், உங்கள் இதயத்தில் பித்து நிலை வேண்டும், ஆனால் மூளையில் முழுமையான சமநிலை வேண்டும்.
இந்தியாவின் இளம் சக்தியை மனித அறிவாற்றல், ஆற்றல் மற்றும் இணைத்துக்கொள்ளும் மனிதத்தன்மையின் மகத்தான வெளிப்பாடாய் மாற்றுவதற்கான நேரமிது, இதுதான் பாரதத்தின் தனிச்சிறப்பு. நாம் ஒன்றிணைந்து விழிப்புணர்வான உலகினை உருவாக்குவோம்.
உங்கள் நெஞ்சம் ஆனந்தத்தில் நிறைந்து இருக்கும்போது எவருக்கும் தீங்கு செய்யத் தோன்றாது, ஏனென்றால் எதுவும் உங்களுக்கு ஒரு அச்சுறுத்தலாகத் தோன்றாது.
கற்பனை என்பது ஒரு திட்டமாகவோ, ஒரு கனவாகவோ பயன் தரலாம். ஆனால் இப்போது இங்கு இருப்பதை மட்டுமே நீங்கள் அனுபவத்தில் உணரமுடியும்.
வாழ்க்கை என்பது நல்லது மற்றும் கெட்டது என்ற கருத்துகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பிரம்மாண்டம், இத்தகைய கருத்துகள் மனோரீதியானதை நிஜம் என்று தவறாகப் புரிந்துகொள்வதால் எழுகின்றன.
ஒரு மனிதராக, உங்கள் சூழ்நிலைகளை வடிவமைத்துக் கொள்ளும் சக்தி உங்களிடம் உள்ளது. அதை விழிப்புணர்வாக வடிவமைக்கும் பொழுது நீங்கள் விரும்பும் வாழ்க்கையை உருவாக்கலாம்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு இடத்தில் வாழ்ந்தால், மனித அமைப்பை உருவாக்கும் அடிக்கற்களை அதிவேகமாக மாற்றமடையச் செய்யமுடியும்.
இந்த படைப்பிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆழ்ந்த நன்றியுணர்வை உங்கள் அனுபவத்தில் உணர்வீர்களாக.
கல்வி என்பது உற்பத்தி செய்யும் இறுக்கமான செயல்முறையாக இருக்கக்கூடாது. அது படைப்பாற்றலையும் உள்ளார்ந்த அறிவாற்றலையும் மனிதத்தையும் அழித்துவிடும். ஊட்டமளிக்கும் கல்வியே விழிப்புணர்வான உலகிற்குத் தேவைப்படுகிறது.
உங்களுக்கு ஆறுதல் தருவதற்காக நான் இங்கு இல்லை. உங்களை விழித்தெழச் செய்யவே நான் இங்கு இருக்கிறேன்.
இன்னொருவர் செய்வதை உங்களால் செய்ய முடியாமல் இருக்கலாம் - அதனால் என்ன. உங்களால் செய்ய முடிந்ததை நீங்கள் சிறந்த முறையில் செய்யுங்கள், வாழ்க்கையில் அதுதான் முக்கியம்.