ஈஷா கிராமோத்சவம் கிராமிய இந்தியாவின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவாகும். இதில் பாரம்பரிய கிராம வாழ்க்கையைக் கொண்டாட்டமாய் மாற்றுவதற்காக நடத்தப்படும் விளையாட்டுகளும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும், கிராம மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கை முறையையும் மேம்படுத்துவதோடு, கிராம சமூகத்தை ஒன்றிணைத்து புத்துணர்வூட்டுகிறது.