சத்குரு சொன்ன குட்டிக்கதைகள்

நகைச்சுவை விரும்பிகளுக்கு, சுவாரஸ்யம் ததும்பும் சத்குரு சொல்லும் இரண்டு ஜோக்குகள். சங்கரன் பிள்ளை இல்லாமலே களைகட்டுகிறது இன்றைய ஜோக்குகள். படித்துவிட்டு கமென்டிடுங்கள், பகிர்ந்திடுங்கள்!
 

நகைச்சுவை விரும்பிகளுக்கு, சுவாரஸ்யம் ததும்பும் சத்குரு சொல்லும் இரண்டு ஜோக்குகள். சங்கரன் பிள்ளை இல்லாமலே களைகட்டுகிறது இன்றைய ஜோக்குகள். படித்துவிட்டு கமென்டிடுங்கள், பகிர்ந்திடுங்கள்!

சத்குரு:

இடம் மாறிய பிச்சைக்காரர்

புதுடெல்லியில் ஒரு பிச்சைக்காரர் 20 வருடங்களாக ஒரே இடத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு, வரும் வருமானத்தில் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார். திடீரென ஒரு நாள் அவர் அங்கிருந்து இடம் மாறி பழைய டெல்லி பகுதியில் பிச்சை எடுக்கத் துவங்கினார். மக்கள் அவரைப் பார்த்து, "இருபது வருடங்களாக புதுடெல்லியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்துவிட்டு, திடீரென பழைய டெல்லிக்கு மாறியதன் காரணம் என்ன?" என்று கேட்டனர். அதற்கு அவர், "என் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்தபோது, வரதட்சணையாக புதுடெல்லியை என் மருமகனுக்குக் கொடுத்துவிட்டேன்" என்றார்.

யாருக்கு தூக்க மாத்திரை?

ஹேமா தனது குடும்ப மருத்துவரிடம் சென்று, தன் கணவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். "எங்களது 20 வருட திருமண வாழ்வில் முதல் பத்து வருடங்கள் சிறப்பாக இருந்தன. அவரும் மிக நல்லவராக இருந்தார். அடுத்த பத்து வருடங்களில் அவர் மிகவும் பதட்டமானவராக, எதற்கெடுத்தாலும் கோபப்படுபவராக மாறிவிட்டார். அவரால் நான் இருக்கும் அறையில் உட்காரக் கூட முடிவதில்லை. அவருக்கு நான் என்ன மருத்துவம் செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

மருத்துவர் அவரை முழுமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, "உங்கள் கணவருக்குக் கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். எனவே நான் சில தூக்க மாத்திரைகளைக் கொடுக்கிறேன். இதைச் சாப்பிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்," என்றார். அதற்கு ஹேமா, "மிக்க நன்றி டாக்டர். இந்த மாத்திரைகளை அவருக்கு நான் எந்தெந்த வேளைகளில், எவ்வளவு கொடுக்க வேண்டும்?" என்று கேட்டார். மருத்துவரோ, "மாத்திரை அவருக்கல்ல; உங்களுக்குத்தான். நீங்கள் தூக்க மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் அவருக்கு சிறிதாவது ஓய்வு கிடைக்குமே," என்றார்.