Life Quotes in Tamil: வாழ்க்கையை அற்புதமாய் வாழ்ந்திட... சத்குருவின் வாசகங்கள்!
வாழ்க்கையில் நீங்கள் எந்த கட்டத்தில் இருந்தாலும் பயம், பதற்றம், துன்பம் போன்ற எதிர்மறை தாக்கங்களைத் தவிர்த்து, ஆழமாய் வாழ்வை புரிந்துகொண்டு அற்புதமாய் வாழ்ந்திட வழிகாட்டும் சத்குரு வாசகங்களின் ஒரு தொகுப்பாக இந்தப் பதிவு அமைகிறது.
ArticleJul 14, 2021
முழுமையாய் வாழ வழிகாட்டும் சத்குருவின் குருவாசகங்கள்! (Life Quotes in Tamil)
உங்கள் இதயத்தில் அன்பிருந்தால், அது உங்கள் வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். அன்பிற்கு அந்த மதிநுட்பம் உண்டு.
வேதனை சூழுமோ என்ற பயம் உங்களுக்குள் இல்லாதபோது, வாழ்க்கையை எப்படி முழுமையாய் வாழ முடியுமோ அப்படி வாழ்வீர்கள்.
வாழ்க்கையின் நோக்கத்தை அறிய விரும்பினால், உங்கள் உடல், மன எல்லைகளைக் கடந்து பார்க்க வேண்டும்.
உங்கள் உடல் சொல்லும் விதத்திலும், உங்கள் புத்தி சொல்லும் விதத்திலும் மட்டுமே நீங்கள் சென்றால், உங்கள் வாழக்கை ஒரு சர்க்கஸ் போலாகிவிடும். தெய்வீகம் செயல்பட துவங்கினால் உங்கள் வாழ்க்கை நாட்டியமாகிவிடும்.
உங்கள் வாழ்க்கை உங்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடாய் இருக்குமானால், எவருடனும் உங்களுக்கு முரண்பாடு இருக்காது.
உங்கள் எண்ணங்களும் உங்கள் உணர்ச்சிகளும் உங்களை எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கச் செய்யலாம். ஆனால் அவை வாழ்வின் சிறிய பகுதி மட்டுமே. அவை வாழ்க்கை அல்ல.
இந்த படைப்பில் உள்ள அனைத்தும் இயல்பான புரிதலோடும், பேரறிவுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் உங்கள் வாழ்க்கை மட்டும் தன்னிச்சையாக நடந்துவிடுமா என்ன?
ஆசை என்பது முடிவில்லாத விளையாட்டு என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையை இன்பமான ஒரு விளையாட்டாக விளையாடலாம்.
வாழ்க்கைக்கு எது அவசியமோ, எது வேலை செய்யுமோ அதன் அடிப்படையில் நீங்கள் முடிவுகள் எடுக்க வேண்டும். உங்கள் விருப்பு வெறுப்புகளின்படி முடிவு செய்யக் கூடாது.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
வாழ்க்கையைப் பற்றிய உயிர்போகும் கவலை தேவையில்லாதது. அது வெறும் நாடகம்தான்.
நீங்கள் மாற்றத்தை எதிர்த்தால், வாழ்க்கையையும் எதிர்க்கிறீர்கள்.
நீங்கள் வாழ்க்கையை மேம்போக்காகப் பார்த்தால் அது கொடூரமானது. நுட்பமாகப் பார்த்தால் அது அழகானது. அதையே ஆழமாகப் பார்த்தால், அது அற்புதமானது.
ஒரே மாதிரி வாழ்க்கை சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் இருப்பதில் பாதுகாப்பு இருக்கிறது, ஆனால் அதில் புது சாத்தியங்கள் இல்லை, வளர்ச்சி இல்லை.
இந்த உயிரின் ஆனந்தப் பரவசத்தை நீங்கள் உணரும் வரை வாழ்க்கை நிறைவு பெறாது.
வாழ்க்கையை அதன் ஓட்டத்தில் விட்டால், வாழ்க்கை அழகானதாக இருக்கும், அதனை பிடித்து வைத்தால் வேதனையில் முடியும். இதுவே உயிரின் சுபாவம்.
நீங்கள் இங்கே இருப்பது வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவா இல்லை அதை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதற்காகவா?
வாழ்க்கை என்பது ஒரு குறிப்பிட்ட அளவு காலமும் ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியும் தான். இவற்றை ஒவ்வொருவருடைய நல்வாழ்வுக்காக எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் விஷயமே அடங்கியிருக்கிறது.
உள்ளதை உள்ளபடியே பார்க்கும் தன்மை, வாழ்க்கையை சிரமமில்லாமல் வாழ்வதற்கான சக்தியையும் திறனையும் கொடுக்கும்.
இதை அடைந்தால் போதும் என்று எதுவும் இல்லை. வாழ்க்கை எல்லையில்லா சாத்தியங்கள் நிறைந்தது.
எல்லோருக்கும் இணையம் மூலமாக உலகைப் பற்றி எல்லாமும் தெரிகிறது, ஆனால் யாருக்கும் வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரிவதில்லை.
வாழ்க்கை நித்தமும் உருமாறிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் அதைக் குறித்து என்ன கருத்து கொண்டிருந்தாலும் அது தவறாகவே இருக்கும்.
நல்ல வாழ்க்கை போதும், எனக்கு வாழ்வின் அற்புத மூலத்தை உணர வேண்டும் என்று துடிப்பவர்களுக்குத்தான் ஆன்மீகம்.
வாழ்க்கை என்றால் ஈடுபாடு. ஈடுபாடு இல்லாத இடத்தில் வாழ்க்கையும் இல்லை.
வாழ்வதைவிட இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையை மேலோட்டமாய் வாழ்வதும், ஆழமாய் வாழ்வதும் உங்கள் கைகளில்
வாழ்க்கை உங்களுக்கு வெளியே இல்லை. நீங்கள்தான் வாழ்க்கை.
வாழ்க்கை உங்கள் அனைத்துக் கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் உங்கள் கருத்துக்களுக்குள் வாழ்க்கையை அடக்க முடியாது.
நம் வாழ்க்கை அழகாவது, நாம் கனக்கச்சிதமாக இருப்பதால் அல்ல. நாம் எது செய்தாலும் அதில் இதயப்பூர்வமாக நம்மைக் கொடுப்பதால்தான் நம் வாழ்க்கை அழகாகிறது.