Question: கோபத்திற்கு வெளிச்சூழ்நிலை காரணம் இல்லையென்று குறிப்பிட்டிருந்தீர்கள் இதை பற்றி விளக்கம் கூறுங்கள்?

சத்குரு:

நீங்கள் யார் மீதும் கோபப்படவில்லை. நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள். உங்கள் கோபத்திற்கும், இன்னொருவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. நீங்கள் பாறை மீது கோபமாயிருக்கிறீர்களோ, உங்கள் குரு மீது கோபமாய் இருக்கிறீர்களோ, கடவுள் மீது கோபமாக இருக்கிறீர்களோ கோபம் என்றால் கோபம்தான். இது இன்னொன்றோடோ இன்னொருவரோடோ செய்வதற்கு ஏதுமில்லை. இதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் விருப்பு, வெறுப்புகள் வலிமையாகிறபோது உங்கள் அடையாளங்கள் ஆழமாகியபோது நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு எதிராக போகிறீர்கள்.
உங்கள் கோபம் பிறரோடு எந்தவிதத்திலும் தொடர்புடையதில்லை. முழுக்க முழுக்க உங்களோடு தொடர்புடையதுதான். உங்கள் கோபம் இன்னொருவரோடு நிகழ்வது என்று நினைப்பதால்தான் நீங்கள் திரும்ப திரும்ப கோபப்படுகிறீர்கள். அது உங்களை மட்டுமே சார்ந்தது என்று நீங்கள் அறிந்திருப்பீர்களேயானால் அது இவ்வளவு நேரம் உங்களிடம் இருந்திருக்காது.

எனவே ஏதோ ஒன்றைப் பற்றி கோபப்பட்டு வருத்தப்படுவதென்பது நான் சொன்னாலும் சரி, பிறர் சொன்னாலும் சரி, இது ஓர் ஆழமான விருப்பு, வெறுப்பின் விளைவாக வருவது. இந்த ஆழமான விருப்பு, வெறுப்பு என்பது ஒரு குறிப்பிட்ட மனநிலை, உணர்வுநிலை அல்லது வாழ்க்கை முறையின் வெளிப்பாடு அல்லது அடையாளம். இதுதான் வாழ்வதற்கான சிறந்த வழி. இதுதான் சிந்திப்பதற்கும், உணர்வதற்குமான வழி என்று நீங்கள் கருதுவதால் நிகழ்வது. அதற்கு யாரும் ஒத்துவராவிட்டாலும் உங்களுக்குக் கோபம் வருகிறது. உங்கள் விருப்பு, வெறுப்புகள் வலிமையாகிறபோது உங்கள் அடையாளங்கள் ஆழமாகியபோது நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு எதிராக போகிறீர்கள். "இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்று சொன்னால் புறக்கணிப்பும் வளர்கிறது. எனவே விடுதலைக்கான வழி எல்லாவற்றையும் உங்களுக்குள்ளே சேர்த்துக் கொள்வதே தவிர, சிலவற்றை விலக்குவதல்ல. ஒன்றை விலக்குவதன் மூலம் நீங்கள் மறுபடியும் சிக்கிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்வதின் மூலம் நீங்கள் விடுதலை அடைகிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.