கம்யூனிச நாடான ரஷ்யாவிற்கு சென்ற மார்க் ட்வெயின், அங்கு கம்யூனிசம் எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதை பரிசோதித்த சுவாரஸ்ய கதை உங்களுக்காக!

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மார்க் ட்வெயின் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மிகப் பிரபலமான ஒரு வரலாற்று இயலாளர், பயணி.

கம்யூனிசம் பற்றிக் கேள்விப்பட்டு ரொம்ப உற்சாகமாக இருந்தார் மார்க் ட்வெயின். தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களிடம் பகிர்ந்துகொள்வது எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைத்திருந்தார். இந்த உலகத்தில் இதைவிட சிறந்த ஒன்றைக் கேட்டுவிட முடியுமா என்று புளகாங்கிதம் அடைந்தார். கம்யூனிசப் பெரும் புரட்சி நடந்திருந்த ரஷ்யாவிற்குப் பயணப்பட முடிவு செய்தார்.

கிராமச் சாலைகள் வழியே நடந்துபோனார். ஒரு வயதானவர் கக்கத்தில் இரு கோழிகளைப் புதைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்து ஓடிச்சென்ற மார்க், “தோழரே, நீங்கள் உண்மையான கம்யூனிஸ்டா?” என்றார். அவர் ‘‘ஆம்!’’ என்றார்.

‘‘உங்களிடம் இரு வீடுகள் இருந்தால், இல்லாதவர் ஒருவருக்கு ஒன்றைத் தந்து விடுவீர்களா என்ன?’’
‘‘ஆம்! நிச்சயமாக. நான் ஒரு கம்யூனிஸ்ட்!’’

‘‘உங்களிடம் இரு வாகனங்கள் இருந்தால் அதில் ஒன்றை இல்லாதவருக்கு அளிப்பீர்களா?’’
‘‘நிச்சயமாக, நான் ஒரு கம்யூனிஸ்ட்.!’’

கேள்வி பதில் நீண்டது. இறுதியாக மார்க் ட்வெயின்... “நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை என்றால், ‘‘உங்களிடம் இருக்கும் இரு கோழிகளில் ஒன்றினை இல்லாதவர் ஒருவருக்கு அளிப்பீர்களா?”

“என்ன இது மடத்தனமாக கேள்வி கேட்கிறீர்கள்? என்னிடம் இருப்பதே இந்த இரு கோழிகள்தான்!” என்றார் கோழிக்காரர்.