சத்குருவின் பார்வையில் மானசரோவர்

நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் இளவரசியை தூக்கிச் சென்றார்கள், அவருடன் திருமணம் நடந்தது, அது நடந்தது இது நடந்தது என பலவிதமான கதைகளைக் கேட்டிருக்கிறோம்.. மிகவும் ரசிக்கும்படியும், அதேசமயம் வியப்பாகவும் இருக்கும். ஆனால் அவற்றை நம்பும் வழக்கம் மட்டும் என்னிடம் இல்லை. அந்தக் கதைகளிலிருக்கும் ஒரு வார்த்தையை கூட நான் நம்பியதில்லை. இந்தக் கதைகளின் இயல்பான தன்மை பிடித்திருந்ததால், பலதரப்பிலிருந்தும் வந்துசேர்ந்த கதைகள் நம்மிடம் நிறையவே இருக்கிறது. அவற்றின் பின்னால் நிறைந்திருக்கும் கற்பனை வளம் நமக்கு பிடித்த ஒன்று. ஆனால் நாம் முதன்முதலாக மானசரோவர் சென்று பார்த்தபோது, இப்படியும் நடக்கக்கூடும் என்று இதுவரை நம்பிக்கை கூட வைக்காத செயல்கள் அங்கு நடந்தது. ஒருவேளை சிறுவயதில் கேட்ட அந்தக் கதைகள் எல்லாம் உண்மையில் நடந்தவைதானோ என்ற எண்ணமும் இதனால் தோன்றியுள்ளது. இதைப் பற்றி நாம் பேசுவதே வேடிக்கையாக இருக்கிறது. இதுவரையில் காரண அறிவிற்கு பொருந்தும் வகையில் மட்டுமே நான் பேசி வந்திருக்கிறேன். தர்க்கரீதியாக யாராலும் இதில் குறை காண இயலாது. காரண அறிவிற்கு பொருந்தும் வகையில் வெளிப்படையாக வெளிப்படையாக பேசும் குரு என்று உலகம் முழுவதும் பெயர் எடுத்துள்ள நிலையில், நாம் பார்த்ததை பேசினால்- அதிலும் குறிப்பாக மானசரோவர் பற்றி பேசும்போது இதுவரை நாம் அடைந்திருக்கும் பெயருக்கே கூட சோதனையாக அமையலாம். இதைப் பற்றி நாம் பேசுவது வேற்றுகிரகவாசிகளைப் பற்றி அதீத ஆர்வமுள்ளவர் பேசவது போல உங்களுக்கு தோன்றவும் கூடும்.

பல வகைகளிலும் ஆன்மீக செயல்முறைகளின் ஆதாரப்புள்ளியாக இந்த இடம் விளங்கி வருகிறது. ஆச்சரியமூட்டும் மாய விஞ்ஞானம் பல வழிகளிலும் இங்கிருந்தே பிறந்திருக்கிறது.

நம் இந்திய தேசத்தின் சமஸ்கிருத வேதங்களில் இந்த பூமிக்கு சம்பந்தமற்றவர்கள் இங்கு வருவதைப் பற்றியும், நம் மக்களுடன் அவர்கள் பழகியது பற்றியும் பல எண்ணற்ற குறிப்புகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் அதீதமான கற்பனைவளம் என்று இதுவரை அப்படியே ஒதுக்கி இருக்கிறோம். கதை சொல்வதில் இந்தியர்கள் வல்லவர்கள் அல்லவா. இந்த உலகிலேயே மிகச்சிறந்த கதைகள் நம்மிடம்தானே இருக்கிறது. கதைக்குள்ளே ஒரு கதை, அந்த கதைக்குள் மற்றொரு கதை, அந்த கதைக்குள் இன்னும் ஒரு கதை, அந்த கதைக்குள்ளும் ஒரு கதை என ஒரு கதை.. இப்படியாக மகாபாரதம் போன்ற நீளமான கதை உலகில் வேறு எதுவும் இல்லை. எனவே இதை கதை சொல்வதில் நமக்கிருக்கும் திறமை என்றே கருதி பாராட்டி வந்திருக்கிறோம். அவை உண்மையாக இருக்கும் என்றல்ல. இவையெல்லாம் உண்மை என்று நாம் நினைத்ததுமில்லை. ஆனால் இந்த உலகம் முழுவதும் நீங்கள் பார்த்தால் கிட்டத்தட்ட இதே போன்ற கதைகள் இருக்கிறது. உண்மையாக ஏதாவது ஒன்று நடக்காமல் உலகம் முழுவதும் இப்படி ஒரேவிதமான கதை எல்லோராலும் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட இதே போன்ற கதைகள் பைபிளில் இருக்கிறது. குறிப்பாக கிரேக்க கலாச்சாரத்தில் இதே விதமான கதைகள் பேசப்படுகிறது. அதில் வரும் பெயர்களுக்கும் நம் கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களின் உச்சரிப்பும் கிட்டதட்ட ஒரேவிதமாக இருக்கிறது. ரிக் வேத காலத்தில் இருந்தே நட்சத்திர பயணம், நட்சத்திரத்திலிருந்து வந்தவர்கள், நட்சத்திர கப்பல் என பல கதைகள் இருக்கிறது. சமஸ்கிருத வேதத்தில் பேசப்படும் இன்னொரு பொதுவான அம்சம் விண்வெளி மக்கள் பற்றியது, அல்லது வான்வழியாக பயணம் செய்பவர்கள் பற்றியது. அவர்கள் இந்த பூமிக்கு வந்தது பற்றியும், இங்குள்ள சமுதாயத்திற்கும் அவர்கள் உதவியது பற்றியும் பல கதைகள் இருக்கிறதுதானே. இதே போன்ற கதைகளும் வார்த்தை பிரயோகங்களும் சுமேரிய கலாச்சாரத்திலும், குறிப்பிட்ட அரபு கலாச்சாரங்களில் மற்றும் வட ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. தென் அமெரிக்காவில் இதே போன்ற கதைகள் இருக்கிறது. வட அமெரிக்காவில் இருந்த கலாச்சாரங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டதால் அங்கிருந்த கதைகளைப் பற்றி நமக்கு தெரியவில்லை. அவரவர் கலாச்சாரத்தில் கிட்டத்தட்ட ஒரேவிதமான கதைகளையும் வார்த்தைகளையும் மக்கள் கொண்டிருக்கிறார்கள். நாம் இப்படிப்பட்ட பல கதைகளை கேட்டிருந்தாலும், அவை எல்லாமே மனித மனதின் அதீதமான கற்பனை என்றே நினைத்திருந்தோம்.

மானசரோவரில் இந்த உயிர்கள் பெரும் எண்ணிக்கையில் அதுவும் குறிப்பாக அதிகாலை 2.30 மணிமுதல் 3.45 மணிவரை மிகதீவிரமாக நடமாடுகின்றன. நேரம் பார்த்து வேலை செய்வதைப் போல மிகச்சரியாக துவங்கி, 3.45 மணிக்கு துல்லியமாக முடிகிறது.

தேதிஸ் கடலின் மிச்சமே மானசரோவர் ஏரி. முன்பு கடலாக இருந்த பகுதி இன்று 14,900அடி உயரத்தில் இருக்கிறது. இந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் ஏரியின் தண்ணீர் இனிய சுவைக்கு மாறியிருந்தாலும், கடற்பகுதியின் குணநலன்களை நினைவுபடுத்தும் மிச்சங்களை இன்றும் பார்க்க முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, வேறு ஒருவிதமான உயிர் பரிமாற்றம் அங்கே தொடர்ந்து நடந்து வருகிறது - நாம் அங்கு செல்லத் துவங்கி பல ஆண்டுகள் ஆனபின்னும், மானசரோவர் செல்ல வேண்டும் எனும் ஈர்ப்பு தொடர்ந்து இருந்தே வருகி்றது. எதிர்பாராதவிதமாக, அங்கே நம்மால் சிறிது நேரமே இருக்க முடிகிறது. அதுவும் பெரும் திரளான மக்கள் கூட்டத்துடன் செல்லும்போது, "குளிர்கிறது, சுவாசிக்க போதுமான ஆக்சிஜன் இல்லை" என இன்னும் பலவாறாக உடல் சௌகரியங்களிலேயே சிக்கிக்கொண்ட மக்களையும் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கி்றது. ஆனால், நாம் எவ்வளவு குறைவாக கவனம் செலுத்தியிருந்தாலும், அது பலவழிகளிலும் நமக்கு பலனளித்திருக்கிறது.

நாம் ஏற்கனவே பலமுறை கூறியிருப்பதைப்போல, நான் ஆன்மீகக்கல்வி எதுவும் கற்கவில்லை, எந்த புனித நூல்களும் தெரியாது, எந்த போதனைகளும் தெரியாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்த உயிர் (தன்னை சுட்டிக்காட்டியபடி) மட்டும்தான். அதன் மூலத்திலிருந்து உச்ச இயல்புவரை இந்த உயிரைப்பற்றி முழுமையாக தெரிந்திருப்பதால், மற்ற எல்லா உயிர்களும் எப்படி இருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது.

மானசரோவரில் நமக்கு காணக்கிடைப்பதும் உயிர்தான், ஆனால் நாம் ஏற்கனவே அறிந்திருக்கும் அதே வகையில் அவை இல்லை. அடிப்படையாக, உயிர் தனித்தன்மையுடன் இருக்கும் என்பதை அறிந்திருக்கிறோம். அதுவே உயிர்கள் இணையும்போது அதன் தனித்தன்மை தொலைந்துவிடும். நமது ஆன்மீக செயல்முறைகளின் அடிப்படையும் இதுவே. இங்கே பூமியிலுள்ள உயிர்கள், ஒன்று, விழிப்புணர்வுடன் இருக்கிறது, அல்லது விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. ஆனால் மானசரோவரில் நாம் பார்த்த உயிர்கள் இந்த வரையறையை உடைக்கின்றன. அவை தனித்திருக்கும் அதே நேரத்தில் இணைந்தும் இருக்கிறது. கவனமின்றி அதன் போக்கில் செல்வது போல தெரிந்தாலும், அவை மிக கவனமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தமுறை அவை மிகமிக விழிப்புணர்வுடன் இருக்கின்றன என்பதை நாம் 100% உறுதியுடன் சொல்ல முடியும். பெரும்பாலான மனிதர்களைவிட மிக அதிக கவனத்துடன் இருந்தாலும், அவை செலுத்தப்படும் பாவனையில் நகர்ந்து செல்கின்றன. அந்த உயிர்களைப்பற்றி விவரிக்கும் அளவுக்கு நம்மிடம் மொழி இல்லை, ஏனெனில் காரண அறிவிற்கு உட்பட்ட எல்லா அடிப்படைகளையும் அவை மீறுகிறது.

மானசரோவரில் இந்த உயிர்கள் பெரும் எண்ணிக்கையில் அதுவும் குறிப்பாக அதிகாலை 2.30 மணிமுதல் 3.45 மணிவரை மிகதீவிரமாக நடமாடுகின்றன. நேரம் பார்த்து வேலை செய்வதைப் போல மிகச்சரியாக துவங்கி, 3.45 மணிக்கு துல்லியமாக முடிகிறது. நமது யோகக் கலாச்சாரத்தில் ஏற்கனவே அதிகாலை 3.40 முதல் 3.45 மணிவரையான நேரத்தை பிரம்மமுகூர்த்தம் என்றும், நாம் கண்விழிக்க ஏற்ற நேரம் என்றும் வழங்கி வருகிறோம். நம் ஆசிரம பிரம்மச்சாரிகள் பலரும் இந்த நேரத்தில் எழுந்து தங்கள் சாதனாவை செய்கிறார்கள். எனது 15 வயதிலிருந்தே நான் எங்கிருந்தாலும், உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் சரி், அதிகாலை 3.45 மணியாகும்போது சில நிமிடங்களுக்காவது விழிப்பு வந்து விடுகிறது. அப்படியே எழுந்து கொள்வதும் உண்டு, சிலசமயங்களில் மீண்டும் தூங்கிவிடுவதும் உண்டு. ஆனால் எப்போதுமே 3.45 மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது. மானசரோவரில் சரியாக 3.45 மணிக்கு நேரத்தை கடைபிடிப்பதைப்போல அந்த உயிர்களின் அனைத்து செயல்களும் நின்றுவிடுகிறது. அவைகளைப் பற்றிய அனைத்துமே நமக்கு தெரியாவிட்டாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்திருந்ததைவிட, இப்போது இன்னும் தெளிவாக இருக்கிறது.

அடிப்படையில், சிவனைப் பற்றி பேசப்பட்டுள்ள அனைத்து கதைகளும், அவர் இந்த பூமியைச் சேர்ந்தவர் இல்லை என்பதையே குறிக்கிறது. சிவ சூத்திரங்களில் கூட சிவன் யக்‌ஷ ஸ்வரூபி என்று போற்றப்படுகிறார். இவையெல்லாம் உண்மையாக இருக்கக்கூடும் என்றுகூட இதுவரையில் நாம் இவற்றை கருதியதில்லை.

குறிப்பாக இந்த முறை, நமக்கு வேறு ஒரு வகையில் பலனளிக்கும் விதமாக மானசரோவர் தன்னை வெளிப்படுத்தி கொண்டது. பல்வேறு கலாச்சாரங்களிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிரோட்டமாக இருந்துவரும் ஆன்மீக செயல்முறை இதுவே. இமயமலையின் குறிப்பிட்ட பகுதிகளுக்கும் திபெத்திற்கும் ஆன்மீகப் பாதையில் இருப்போர் யாத்திரை மேற்கொண்டு, அங்கிருந்தபடியே தங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் குறிப்பிட்ட சிலரை (to meet certain beings who have always been there, guiding them.) சந்திக்கும் வழக்கம் இருந்து வந்ததுள்ளது. ஆனால் இன்று இவை வெறும் நம்பிக்கையாக, ஒரு சடங்காக மாறி விட்டிருக்கலாம். நமது பாரத தேசத்தின் யோகிகள் எப்போதுமே இவ்வகையான யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதைப்பின் பற்றி புத்தமத துறவிகளும் இமையமலையின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு புனிதப் பயணமாக சென்று கடந்தகாலத்தை சேர்ந்த தங்கள் குருமார்களை சந்திக்கிறார்கள். சிறுகுழுக்களாக உள்ள மற்ற மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த மக்களிடையேயும் இந்த வழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த துரிஸ் மக்கள் தங்கள் குருமார்கள் இமயமலைப் பகுதியில் இருந்தே வந்ததாக நம்புகிறார்கள். அவர்களும் இமயமலைக்கு பயணம் செய்வதைத் தொடர்ந்து வருகிறார்கள்.

ஏரியின் நீர்ப்பரப்புக்கு கீழே உள்ள ஆழமான இடத்தில் நமது காரண அறிவின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று நடக்கிறது. அது என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டியுள்ளது. அந்த மிக ஆழமான பகுதியில் பலவகையான உயிர் செயல்முறைகள் நடக்கிறது.

பலவகைகளிலும் ஆன்மீக செயல்முறைகளின் ஆதாரப்புள்ளியாக இந்த இடம் விளங்கி வருகிறது. ஆச்சரியமூட்டும் மாய விஞ்ஞானம் பலவழிகளிலும் இங்கிருந்தே பிறந்திருக்கிறது. கடந்த 800 முதல் 900 ஆண்டுகளில் பாரத மக்கள் பல மாற்றங்களை சந்தித்திருக்கிறார்கள். ஆனால் எப்போதுமே பாரத தேசம் முழுவதும் வணங்கி வழிபடப்பட்டு வந்த அடிப்படையான கடவுள் என்றால் அது சிவன்தான். சிவனுக்கு ஆயிரக்கணக்கான கோவில்களும், சிவனைப் பற்றி அதைவிட அதிகமான கதைகளும் சொல்லப்பட்டு வருவதை நாம் அறிவோம். ஆனால் சிவனது குழந்தைப் பருவம் பற்றிய ஒரு கதைகூட வழக்கத்தில் இல்லை. சிவனைப் பற்றிய எந்த கதைகளிலும் அவரது தாய்தந்தை வழி மரபும் இல்லை, வயோதிகமும் இல்லை, கல்லறையும் இல்லை. நமது கலாச்சாரத்தில், சிவன் இங்கு பிறக்கவில்லை என்பது உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. அவர் வேறு எங்கிருந்தோ நம்மிடம் வந்து சேர்ந்தார். எப்போதுமே அவருடன் இருக்கும் அவரது நண்பர்கள் பூதங்கள் என்றும் கணங்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு ஒழுங்கு முறைபடுத்தப்பட்ட உருவ வடிவமும் மனநிலையும் இல்லை. மனிதர்களைப் போல தோற்றமளிக்காத இவ்வாறான உயிர்களுடனேயே எப்போதும் சிவன் இருந்தார். மனிதர்கள் சிவனை வணங்கினாலும், அவருக்கு நெருக்கமான இடத்தில் மனிதர்கள் இல்லை. அவரது குழந்தையை தன்னில் தாங்கும் அளவுக்கு எந்தப் பெண்ணும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் கதை வடிவில் சொல்லப்பட்டுள்ளது. பார்வதிதேவியோ சதிதேவியோ அவரின் பிள்ளைகளை சுமக்க இயலவில்லை. சிவ மைந்தர்கள் இருவருமே தாந்திரீக செயல் முறையிலேயே தங்கள் உடலைப் பெற்றனர். சந்தனக் குழம்பில் இருந்து கணபதி உருவாக்கப்பட்ட கதையை நாம் நன்றாகவே அறிவோம். சுப்ரமணியர் - முருகன் - கந்தன் என பல பெயர்களை கொண்ட கார்த்திகேயர் ஆறு அப்ஸரஸ் பெண்களின் கருவில் வளர்ந்து உடல் பெற்று பிறந்தவர். அப்ஸரஸ் என்ற பெயர், அவர்கள் இந்த பூமியை சேர்ந்தவர்கள் இல்லை என்பதையே மீண்டும் குறிக்கிறது. ஆறு உடல்களும் ஓர் உடலாக ஆறுமுகப் பெருமானாக ஒன்று சேர்க்கப்பட்ட நீண்ட கதைக்குள் நாம் செல்லப்போவதில்லை. அடிப்படையில், சிவனைப் பற்றி பேசப்பட்டுள்ள அனைத்து கதைகளும், அவர் இந்த பூமியை சேர்ந்தவர் இல்லை என்பதையே குறிக்கிறது. சிவ சூத்திரங்களில் கூட சிவன் யக்‌ஷ ஸ்வரூபி என்று போற்றப்படுகிறார். இவையெல்லாம் உண்மையாக இருக்கக்கூடும் என்றுகூட இதுவரையில் நாம் இவற்றை கருதியதில்லை. ஆனால் நாம் மானசரோவருக்குச் சென்றதும், அங்கு பார்த்ததும், உணர்ந்ததும் இவையனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரு மிகப்பெரும் உண்மை நிகழ்வாக நம்முன் நிற்கும்போது உள்ளுக்குள் ஓர் நடுக்கத்தையே ஏற்படுத்துகிறது.

அடிப்படையாக, நீல வண்ணத்தை கொண்ட பொருளையே பயன்படுத்துவதாக தெரிகி்றது. அந்த இடமும் ஒரு புனிதமான இடம் போலவே வைக்கப்படுகிறது. நமது கலாச்சாரத்தில், குறிப்பிடத்தக்க கடவுளர்கள் அனைவருமே நீலவண்ண மேனியுடையவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தமுறை நாம் மானசரோவர் சென்றபோது, தன்னைப்பற்றிய வேறு ஒருவிதமான நிஜத்தை நம்மிடம் வெளிப்படுத்தி கொண்டது. விவரிக்க முடியாத அளவுக்கு வியப்பும் ஆச்சரியமுமான ஒன்று அங்கே நடக்கிறது. ஏரியின் நீர்ப்பரப்புக்கு கீழே உள்ள ஆழமான இடத்தில் நமது காரண அறிவின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று நடக்கிறது. அது என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டியுள்ளது. அந்த மிக ஆழமான பகுதியில் பலவகையான உயிர் செயல்முறைகள் நடக்கிறது. அதில் சில உயிர்கள் நமக்குத் தெரிந்த முறையில் இருக்கிறது, பலவும் நமக்கு தெரியாதவையே. அவர்கள் அங்கு எதைச் செய்யும்போதும் அதற்கு அடிப்படையாக, நீல வண்ணத்தைக் கொண்ட பொருளையே பயன்படுத்துவதாகத் தெரிகி்றது. அந்த இடமும் ஒரு புனிதமான இடம் போலவே வைக்கப்படுகிறது. நமது கலாச்சாரத்தில், குறிப்பிடத்தக்க கடவுளர்கள் அனைவருமே நீலவண்ண மேனியுடையவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இங்கே நினைவுபடுத்த தேவையில்லைதானே. யோக மரபில் எவர் நடையிட்டிருந்தாலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதனாவை மேற்கொள்ளும்போது, அவர்களது உடலிலிருந்து நீலவண்ணமே வெளிப்பட்டு பரவுகிறது. மானசரோவரில் நாம் பார்த்ததை வார்த்தை வடிவில் வெளிப்படுத்துவது மிகச் சிரமமாகவே உள்ளது, ஏனெனில் அது நமது காரண அறிவிற்குள் அடங்கவில்லை. நிச்சயமாக அது உயிர்தான், ஆனால் அது நாம் அறிந்திருக்கிற வகையில் இல்லை.

  • யட்சர்கள்: மனித சஞ்சாரமற்ற இடங்களில் வசிப்பவர்களாக நம்பப்படுகின்ற விண்ணுலக மனிதர்கள்.
  • கணங்கள்: இந்தியப் புராணங்களின்படி, சிவனுக்கு ஊழியம் செய்துகொண்டு, கைலாசத்தில் வாழ்பவர்கள்.
  • தேவர்கள்: கடவுள், திருவுருவம் என்பதற்கான சமஸ்கிருத பதம். இந்திய புராணங்களில் கடவுளர் அல்லது விண்ணுலக மனிதர்கள்.
  • மகாபாரதம்: இந்தியாவின் இருபெரும் சமஸ்கிருத இதிகாசங்களுள் ஒன்று.