மஹாமந்திரம்
மஹாமந்திர உச்சாடனமான “ஆம் நமஹ் சிவாய” மந்திரம் பற்றியும் அதனை எவ்விதத்தில் உச்சரிப்பது என்பதையும் சத்குரு எடுத்துரைக்கிறார்!
ArticleNov 3, 2017
ஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை
சத்குரு:
சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி தங்களுக்குள் தேவையான அளவுக்கு ஷக்தி நிலையை ஏற்படுத்த முடியாதவர்களாகவே பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். தங்களை தாங்களே செயல்பாட்டுக்கு கொண்டுவர 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு மந்திரத்தின் துணை தேவையாக இருக்கிறது. மந்திர உச்சாடனம் இல்லாமல் அவர்களால் தியானத்தில் நிலைத்திருக்க முடிவதில்லை.