அனாதி - ஆதியில்லா ஆனந்தம்
2010ஆம் ஆண்டு கோடை காலத்தில் அமெரிக்காவில் அமையப்பெற்ற ஈஷா மையமான ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், ஒரு 3 மாதகால நிகழ்ச்சியை சத்குரு நிகழ்த்தினார். 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி ஆதியில்லாதது எனப் பொருள்படும் வகையில் ‘அனாதி’ என அழைக்கப்பட்டது!
பங்கேற்பாளரின் பகிர்வு!
என்னுடைய மனமானது உண்மையில் அனாதியை தொட இயலாது. அங்கே ஒரே ஒரு பிணைப்பு கூட இல்லையென்றால் அப்போது நான் சொல்லலாம் “ஆஹா ஆம் இதுதான் அனாதி!”என்று. புத்த பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா போன்ற அற்புத கொண்டாட்டங்கள், நீட்டிக்கப்பட்ட பகல்நேரங்களில் சத்குருவுடன் சத்சங்கள், இரவு நேரங்களிலும் சத்குரு தரிசனம் என பற்பல ஆசீர்வாதங்கள் கிடைக்கப் பெற்றாலும், இவையெல்லாம் அனாதி ஆகாது!
“ஆஹா சத்குரு என்னவொரு தீவிரம் மிக்க தன்மை” என்ற கண்ணோட்டமே என்னிடம் இருந்தது. நானும் ‘உறுதிமிக்க ஒரு யோகி’ ஆவதற்காக முனைப்புடன் இருந்தேன். ஆனால், இது என்னவொரு முட்டாள்தனம்! அனாதி அனுபவம் முற்றிலும் மாறுபட்டது, அது நான் நினைத்ததுபோல ஒரு பேரிடியாக இருக்கவில்லை. அது ஒரு பேரானந்த வெடிப்பாகவோ அல்லது உணர்தலின் மாபெரும் துவக்கமாகவோ இருக்கவில்லை. நிலையான நின்றெரியும் நெருப்பாக இருந்த அந்த உச்ச சக்தியின் ஊடாக நான் தொடர்ந்து தீண்டப்பட்டேன். சத்குருவால் சொல்லப்படுவதுபோல அது ஒரு குழுமையான ஜீவாலையாக ‘cool flame’ இருந்தது.
நிகழ்ச்சியின் இறுதிநாளில் சத்குரு சென்றபிறகு, சத்குரு எங்களுக்கு வழங்கியவற்றின் ஒரு மீள்பார்வையை எனக்குள் திரும்ப பார்த்தேன். அந்த நாள் முழுவதும் அந்த புதிய சாதனாவை மேற்கொள்ளுமாறு நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம். மாலைப்பொழுதில் ஹாலில் ஒருசிலர் தங்கள் பயிற்சிகளை முடித்துவிட்டு வெளியேறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து செல்லும்போது நான் வியந்துபோனேன். ஒவ்வொருவரையும் நான் பார்க்கும்போதும், ஒருவர் தவறாமல் அனைவரின் முகத்திலும் ஒரு பிராகசம் மிளிருவதைப் பார்த்தேன். அவர்களைச் சுற்றி ஒரு வெளிச்சம் ஒளிர்வதையும், அந்த ஹால் முழுவதும் அது பரவியிருப்பதையும் பார்த்தேன். “அட கடவுளே அவர்கள் அனைவரும் ஜொலிக்கிறார்களே!” என மனதிற்குள் பிரம்மித்தேன்.
இப்போது சில வாரங்களுக்குப் பின், அனாதி நிகழ்ச்சி வேண்டுமானல் நிறைவுற்றிருக்கலாம், ஆனால் அந்த தன்மை இப்போதும் உயிர்ப்புடன் இருந்து எனக்குள் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருப்பதை உணர முடிகிறது. இப்போது எனக்கு அனைத்துமே மிக இலகுவாகிப்போனது. நான் என்னுடன் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் அதிசயிக்கத்தக்க விதமாக விடுபட்டு சுதந்திரமாக இருப்பதை உணர்கிறேன்.
நான் மென்மையாக நடக்கும்போதும், பேசும்போது, நகரும்போதும் அனாதி இருக்கிறது. பிறரை நான் அன்புடன் பார்க்கும்போதும் வரவேற்கும்போதும் அனாதி இருக்கிறது. என் மனதில் உதிக்கும் சிந்தனைகளிலும் அது உள்ளது. அனைத்துமே மகிழ்வாகிப்போனது! அடுத்தவர் இருக்கிறார்கள் என நினைத்து நான் பாத் ரூமில் கூட பாட தயங்குவேன். ஆனால், தற்போது நான் சமையலறையிலும், துவைக்கும்போதும் என எப்போதும் எங்கேயும் பாடுகிறேன். நான் பாடலால் நிறைந்துள்ளேன்.
பல்வேறு தடைகளும் பிணைப்புகளும் முன்முடிவுகளும் என்னிடம் தகர்ந்துவிட்டதை நான் உணர்ந்தேன். விருப்பம் மற்றும் தேவை சார்ந்த எந்தவொரு உணர்வும் உண்மையில் எனக்கில்லை. என் மனதில் ஏதேனும் ஆசை பிறந்தாலும், அது என்னுடன் ஒட்டாமல் உள்ளது. ஏதோ ஒன்றைக் குறித்த பயம் அல்லது வெறுப்பு போன்ற உணர்வுகள் என்னிடம் இல்லை. அடுத்தவரை கவரும் விதமாக நடந்துகொள்ள வேண்டுமென்ற உந்துதல் என்னிடம் இல்லை. அனைத்துமே ஆனந்தம் தரும் சூழலாகவோ அல்லது தேவைப்பட்டால் கையாளக்கூடிய சூழலாகவோ இருக்கிறது. நான் பிரச்சனையில்லா ஆளாக உள்ளேன்.
அனைத்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் என் முன்னே வரும் எந்தவொன்றையும் இலகுவாக சந்திக்கும்படியாக எடுத்துக்கொள்ளும் நான், வாழ்க்கையில் வெகுசாதராணமாக மிதந்து செல்வதாக உணர்கிறேன். வாழ்க்கை எனக்கு எப்படி இந்த அளவிற்கு இலகுவானது? அது முற்றிலும் அற்புதமதான்!
ஒரு ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு பார்த்தால், என்னுடைய குழப்பம், சிக்கல்கள், பயம், பதற்றம், கோபம் போன்ற விஷயங்களை பெற்றிருந்ததை நினைத்து வியக்கிறேன். அந்த குப்பைகளை எல்லாம் நான் எங்கே பெற்றேன்? விழிப்புணர்வற்ற நிலையில் நான் சேகரித்து வளர்த்த அந்த முட்டாள்தனங்களை உண்மை என்று நம்பியிருந்தேன். எனது மனம் தற்போதுகூட சிக்கலை ஏற்படுத்த தேடிக்கொண்டிருக்கும். ஆனால், அங்கே அதற்கு தீனிபோட ஏதுமில்லை. எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் பிரச்சனைகளை உருவாக்குவதன் மூலம்தான் அது தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது என்பதை நான் உணர்கிறேன். இதை நான் உணர்ந்தவுடன், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு என்னால் சும்மா இருக்கமுடிகிறது.