“காவேரி இல்லாமல் போனால், குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈஷா மக்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், எங்கு பார்த்தேன் என்பதை என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. நீண்ட காலத்திற்கு முன்னால், அவர்கள் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தனர், அதை நானும் கேட்டிருக்கிறேன். இப்போது, ஈஷா அறக்கட்டளையானது விவசாயிகளுக்கு உறுதுணையாக மிகக் கடினமாக உழைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு இயக்கத்துடன் கைகள் கோர்ப்பதில் எந்தத் தவறும் இல்லை, அது உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மையானது. நாம் அனைவரும் கூடிச்சென்று, அவர்கள் கூறும் ஆலோசனையைச் செயல்படுத்துவோம்.”

காவேரி இல்லாமல் போனால், குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை.

இந்த வார்த்தைகள் நரேந்திராவை ஆழமாகத் தொட்டுவிட்டன. அவர் பகிர்கிறார், “ஒரு தாலுக்காவின் முன்னாள் போர்டு மெம்பர் இதைக் கூறியது - அதுவும் எங்கள் பயணத்தின் முதல் கிராமத்தில் - என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இனி வரவிருக்கும் நாட்களின் ஒட்டுமொத்த பயணமும் விலைமதிப்புள்ளதாக அப்போது தோன்றியது.” காவேரி கூக்குரலுக்காக விவசாயிகள் நலத்திட்ட பரப்புரை பேரணியின் ஒரு பகுதியாக ஏறக்குறைய அடுத்த ஒரு மாதத்திற்கு ட்ரக் வண்டியுடன் ஒவ்வொரு கிராமமாக இந்தத் தன்னார்வலர் பயணிப்பார்.

ஒரு கோலாகலக் கொடியசைப்பு

ஜூலை 31, 2019 – அன்று, காவேரி கூக்குரலின் இந்த பகுதி, இந்தப் புதிய விடியலுக்கான முயற்சிக்கு காரணகர்த்தாவாக உள்ள சத்குருவின் தலைமையில், கொடியசைப்புடன் கோலாகலமான துவக்கம் கண்டது. இதன் துவக்கமாக 28 ட்ரக் வண்டிகள் தன்னார்வத்தொண்டர்களைச் சுமந்துகொண்டு கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் கிராமங்களை நோக்கிப் பயணித்து, இரண்டு மாநிலங்களின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, ஆயிரக்கணக்கான விவசாயிகளைச் சந்திக்கிறது. சத்குருவின் வார்த்தைகளில், திட்டத்தின் நோக்கத்தை இந்த வாகனங்கள் சுமந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளைச் சந்தித்து, 5-7 வருடங்களில் அவர்களது வருவாயை 3-8 மடங்கு பெருக்குவதற்கு உதவி செய்யக்கூடிய வேளாண்காடுகளை வளர்த்தெடுப்பதின் இலாபகரமான பலன்களைக் குறித்து தன்னார்வத் தொண்டர்கள் அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

ஆக. 5, 2019 அன்று இந்த முன்னெடுப்புக்கு, மிக முக்கிய மைல்கல் நாட்டப்பட்டது. மைசூர் மகாராஜா, யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையார் அவர்கள், அரண்மனை வடக்கு வாயிலில், கொடே ஆஞ்சனேய சுவாமி கோவில் அருகில் கர்நாடகா பேரணியினை கொடியசைத்துத் துவக்கினார். “இந்த நிகழ்வுக்கென்றே அலங்கரிக்கப்பட்டதுபோல், கோவில் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. கோவிலுக்கு உள்ளே நாங்கள் நுழைந்ததும், பூசாரிகள் வாகனங்களுக்கு வரவேற்பு பூஜை ஒன்று நடத்தினர். மிகவும் உற்சாகமான சூழலில் நிகழ்ச்சி தொடங்கியது.” அங்கிருந்த ரைசா என்ற ஒரு ஈஷா தன்னார்வலர், சந்தோஷத்துடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

காவேரியுடன் சங்கமித்தல்

on-the-farmers-trail-of-cauvery-calling-action-now-van

ஒவ்வொரு ட்ரக் வாகனத்துடனும் ஒரு தன்னார்வலர் குழு துணை நிற்கிறது. ஈஷா நலத்திட்டத்தின் சுற்றுச்சூழல் முன்னெடுப்பான, பசுமைக் கரங்கள் திட்டத்தில் நீண்ட காலம் செயல்பட்டுள்ள ஒருசிலரும் குழுவில் இணைந்துள்ளனர். புதிய தன்னார்வலர்கள் பலரும் நகரவாசிகள் என்பதால், அவர்கள் இதற்கு முன்பு கிராமங்களுக்கே சென்றிராதவர்கள். ஆனால் விவசாயிகளைச் சந்திப்பதில் அவர்களுக்கு இருக்கும் விருப்பம், உண்மையாகவே ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. அவர்களது ஈடுபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், எல்லாக் குழுக்களுக்கும் காவேரியின் கிளை ஆறுகளின் பெயர்களை – அரக்காவதி, லோகபவானி, ஹேமாவதி, ஷிம்ஷா, கபினி, லக்ஷ்மண தீர்த்தா, கபிலா, ஹொன்னுஹொலே - வைத்திருக்கின்றனர்

காவேரிக்கான களத்தில் காவலர் கைகொடுக்கிறார்

விவசாயிகளுடனான முதல் சந்திப்பில் எழுந்த உத்வேகத்தை ஒரு தன்னார்வலர் பகிர்கிறார்:

on-the-farmers-trail-of-cauvery-calling-action-now-pic1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“அந்தக் கிராமத்திற்குள் ட்ரக் நுழைந்ததும், எல்லாத் தரப்பு மக்களும் சூழ்ந்துகொள்ளத் தொடங்கினர். ட்ரக்கில் வீடியோ திரை இருப்பதைக் கண்டு, திரையை அனைவரும் பார்க்கும்படியான ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு கூட்டத்தினர் துணை செய்தனர். காவேரி கூக்குரல் வீடியோவைப் பார்த்து முடித்த பிறகு, அவர்களது உற்சாகம் வேறொரு நிலையை எட்டியது. மக்கள் மிகவும் ஆர்வம் அடைந்து, காவேரி கூக்குரல் திட்டம் மற்றும் வேளாண்காடு தொடர்புடைய கேள்விகளை கேட்கத் தொடங்கினர். கிராம மக்களின் ஆர்வம் நதிவீரர்களுக்கு பெரும் தூண்டுதலான ஒன்றாக இருந்தது. ஏனென்றால், குறிப்பாக இவர்கள் வாகனத்துடனேயே பயணித்து, மக்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிப்பதற்கான உத்வேகம் கொண்டவர்கள்.”

on-the-farmers-trail-of-cauvery-calling-action-now-pic2

“காவல்துறை அதிகாரி ஒருவர், பரப்புரையின் கையேட்டை வைத்துக்கொண்டு அவரது எண்ணங்களை விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டிருந்ததைப் பார்த்தபோது நான் ஆச்சரியம் அடைந்தேன். நமது செயல்களில் இத்தனை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், விவசாயிகளுடன், அடிப்படையிலேயே மிகச் சரியான ஒரு தொடர்பு தற்போது உருவாக்கப்பட்டிருப்பதை நான் அறிந்துகொண்டது அந்தத் தருணத்தில்தான்,” என்று வினிதி என்ற மற்றொரு தன்னார்வலர் பகிர்ந்துகொண்டார்.

“நமக்கு பருவமழை தேவை!”

பருவமழையை எங்களால் வரவழைக்க முடியாது, அதனால்தான் நமக்கு மரங்கள் தேவை என்பதை அவர்களுக்குக் கூற நாங்கள் விரும்பினோம்!

முன்னாள் தாலுக்கா தலைவர் தானே முன்வந்து கூட்டத்தினரிடம் பேசியவுடன், விவசாயிகள் இந்த செயல் திட்டத்தில் ஒன்றிணைய தயாராகிவிட்டனர். அவர் கூறினார்,” ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே இதைக் கூறியுள்ளது – 2022-2024-ம் வருடங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படப்போகிறது. ஆகவே, இப்போதே நாம் சூழ்நிலையை சரிசெய்ய வேண்டும், சரியா? குடிநீரை நாம் சேமிக்கவில்லையென்றால், அது நமது வாழ்க்கையை ஆபத்தில் தள்ளுவதற்கு ஒப்பானது, அப்படித்தானே? எனவே, மேற்கொண்டு தேவையானதை செய்வோம்!”

“நமக்குப் பருவமழை தேவை!” அவருக்கு வலதுபுறம் இருந்த விவசாயி அவசரமாகக் கூறினார்.

on-the-farmers-trail-of-cauvery-calling-action-now-pic3

“இந்த வருடம் பருவமழையே வரவில்லை, சுத்தமாக வரவில்லை! அது குடகுக்கு வரவில்லை. வெறும் 2 நாட்கள் நேற்றும், அதற்கு முன்தினமும் பெய்தது, அவ்வளவுதான். ஆனால் பாருங்கள், வட கர்நாடகத்திலும், மகாராஷ்ராவிலும் வெள்ளமாக இருக்கிறது,” என்று வேறொரு விவசாயி எழுந்து கூறினார்.

“இந்த வருடம் பருவமழையே வரவில்லை, சுத்தமாக வரவில்லை! அது குடகுக்கு வரவில்லை. வெறும் 2 நாட்கள் நேற்றும், அதற்கு முன்தினமும் பெய்தது, அவ்வளவுதான். ஆனால் பாருங்கள், வட கர்நாடகத்திலும், மகாராஷ்ராவிலும் வெள்ளமாக இருக்கிறது,” என்று வேறொரு விவசாயி எழுந்து கூறினார்.

“பருவமழையை எங்களால் வரவழைக்க முடியாது, அதனால்தான் நமக்கு மரங்கள் தேவை என்பதை அவர்களுக்குக் கூற நாங்கள் விரும்பினோம்!” – ஒரு தன்னார்வலர் இப்படிப் பகிர்ந்து கொண்டார்.

பயிர்த்தொழில் – இதயத்தை பிளக்கும் ஒரு செயல்பாடு

மக்கள் ஆற்றாமையும், நம்பிக்கை நிறைந்தவர்களாகவும் ஒருசேர இருந்த நிலையில், காவேரி கூக்குரலின் அசைக்கமுடியாத உறுதி, அவர்களுக்கு ஒரு ஆசிர்வாதமாக வந்தது. “நம்பிக்கை இழந்த ஒருவர், தன் வலியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஒரு தருணத்தில், அவர், தன் கண் முன்னே, திடீரென்று திரையில் நம்பிக்கையின் கீற்று ஒளிர்வதைக் காண்பது போன்றது அது.” அந்த சூழலைக் கவனித்த மற்றொரு தன்னார்வலர் சூர்யாவின் பகிர்தல் இது.

"இவ்வளவு விவசாயிகளையும் அவர்களது துயரத்தையும் முதன்முதலாகப் பார்க்கிறேன். “நமது நாகரீகத்தின் அடித்தளமாகவே இருக்கும் பயிர்தொழில் இப்போது இதயத்தைப் பிளக்கும் செயலாக மாறிவிட்டது,” என்று நதிகள் மீட்போம் பேரணியின்போது, சத்குரு கூறியதுதான் அப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. நதிகள் மீட்புக்கான நேரம் இது,” என்றார் ரைசா.

“சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வின் ஒரு பாகமாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்,” என்று கூறினார் அர்க்காவதி – தனது பழைய பெயரை மறந்து, காவேரியின் கிளை நதியின் பெயரில் தான் அறியப்படுவதில் பெருமகிழ்ச்சி கொள்பவர் இவர்!

ஆசிரியர் குறிப்பு: காவேரி கூக்குரலுக்கு எவரும் துணை நிற்கலாம். அதில் ஈடுபடுவதற்கான சில வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

ஒரு மரக்கன்றுக்கு ரூ.42 வழங்குங்கள்

தன்னார்வத்தொண்டில் பங்குபெற

ஒரு க்ரௌட்ஃபண்டிங்(Crowd Funding) பக்கம் ஆரம்பிக்கலாம்

காவேரி நதிக்கரையோர விவசாயிகளுடன் தொடர்புகொள்ளுங்கள். எங்களுடன் இணைந்திருங்கள்!