ஆரம்பத்துல எனக்கு தெரிஞ்ச ஆட்களுக்கு நாட்டு சர்க்கரையை நேரடியா விற்பனை செஞ்சேன். இயற்கை முறையில தயாரிக்கப்பட்ட சர்க்கரைனால விற்பனை அமோகமா பல்கி பெருகுச்சு. ஒன்னு இரண்டாச்சு, இரண்டு நாளாச்சு, நாளு பதினாறாச்சு. விற்பனைக்காக நான் எந்த விளம்பரமும் பண்ணல.

இப்போ தினமும் 500 கிலோ வரைக்கும் நாட்டு சர்க்கரை சில்லரை முறையில விற்பனை செய்றேன். மக்களே நேரடியா தோட்டத்துக்கு தேடி வந்து வாங்கிட்டு போறாங்க. ஈரோடு மட்டுமில்லாம திருப்பூர், கோயம்புத்தூர் ஏன் சென்னையில இருந்து கூட வந்து வாங்கிட்டு போறாங்க. எவ்வளவு சர்க்கரை தயார் பண்ணாலும் அதை விக்குறதுல எனக்கு எந்த சிரமும் வந்தது இல்ல.

விவசாயி தன்னோட பொருட்களை விக்குறதுக்கு வியாபாரிய நம்பி இருந்தா ஜெயிக்க முடியாது. விவசாயியே வியாபாரியாவும் மாறணும். அப்போதான் ஜெயிக்க முடியும்

பாலேக்கர் ஐயா சொன்ன மாதிரியே 8 அடி இடைவெளியில கரும்பு நட்டுருக்கேன். ஒரு ஏக்கர்ல 5 டன் நாட்டு சர்க்கரை கிடைக்குது. ஒரு கிலோ 60 ரூவானு விக்குறதுனால ஒரு ஏக்கர் வைச்சுருந்தாலே ரூ.3 லட்சம் மதிப்புக்கு நாட்டு சர்க்கரை விக்கலாம். எல்லா செலவும் போக ஒன்றரை லட்சம் வரைக்கும் லாபம் பார்க்கலாம். நாட்டு சர்க்கரையோட சேத்து அடுத்து பன்னாரி-ல ஒரு கரும்பு ஜூஸ் கடை வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு ஏக்கர்ல போட்டிருந்த நெல் வயல்ல இருந்து 3000 கிலோ வெள்ளை பொன்னி அறுவடை பண்ணேன். அத அரிசியா மாத்தி கிலோ 75 ரூவாக்கு விற்பனை செஞ்சேன்.

இதுதவிர, 5 ஏக்கர்ல போட்ருக்க கிளைரிசெடியால இந்த மாசம் மிளகு கொடி ஏத்திருவேன். அது 3 வருசத்துக்கு அப்பறம் காய் காய்க்க ஆரம்பிச்சுரும். அப்பறம், அந்த மிளகையும் நேரடியா விற்பனை பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன். இப்பவே மிளகு கிலோ 800 ரூபாய்ல இருந்து 1000 ரூபாய்க்கு போதுகு. அதுனால மிளகுல இருந்து தனியா ஒரு நல்ல வருமானம் பார்க்க முடியும் என்று, தன் நேரடி விற்பனை குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

நாட்டு சர்க்கரை மற்றும் அரிசி தவிர்த்து, வாழை, பூசணிக்காய், அரசாணிக்காய் போன்ற பிற விளைப்பொருட்களை மொத்தமாக வியாபாரம் செய்கிறார். கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது கதளி வாழை கிலோ ரூ.60 ல் இருந்து ரூ.70 வரை விற்பனையானதாக அவர் தெரிவித்தார்.

விளைப் பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வரும் நிலையில், “விவசாயி தன்னோட பொருட்களை விக்குறதுக்கு வியாபாரிய நம்பி இருந்தா ஜெயிக்க முடியாது. விவசாயியே வியாபாரியாவும் மாறணும். அப்போதான் ஜெயிக்க முடியும்” என்கிறார் இயற்கை விவசாயி சோமசுந்தரம்.

கரும்பு பயிரிட சில டிப்ஸ்:

  • நிலத்தை நன்கு உழுதுவிட்டு வரிசைக்கு வரிசை 8 அடி இடைவெளி விட்டு ஒரு பரு கரணையை 2 அடிக்கு ஒன்று என்று நட வேண்டும்.
  • இப்படி 8 அடி இடைவெளியில் நடும்போது ஏராளமான பயன்கள் கிடைக்கும். கரும்புகளுக்கு நல்ல காற்றோட்டமும், சூரிய ஒளியும் கிடைக்கும். கரணைக்கான செலவும் நடவு கூலியும் குறையும். நிறைய தூர்கள் வெடித்து கரும்பு நன்கு உயரமாக வளரும்.
  • கரும்புக்கு இடையில் பல தானியங்களை விதைத்து 60 நாட்கள் கழித்து மடித்து உழ வேண்டும். இதன்மூலம், நிலத்துக்கு தேவையான கனிம சத்துக்குள் கிடைக்கும்.
  • விற்பனை திறனுக்கேற்ப நிலங்களை பிரித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் கரும்பு நடுவது அவசியம். அவ்வாறு நட்டால்தான் வருடம் முழுவதும் கரும்பு கிடைக்கும்.
  • இயற்கை இடுப்பொருட்களான ஜீவாமிர்தம் மற்றும் மூங்கில் ஈயத்தை மாதந்தோறும் பயன்படுத்த வேண்டும்.

விதை விதைப்போம்...

 

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

நன்றி: தினத்தந்தி

(குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது)

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!