பகுதி - 1


பகுதி 2

வேர்க்கடலைfoodtoavoid-tamilblog-peanuts

 • இவைகள் தன்னளவில் ஒரு முழுமையான உணவுகள்.
 • இது சமைக்கப்படாமல் பச்சையாகச் சாப்பிடப்பட்டால், ஒரு முழு அளவிலான உணவாக இருப்பதால், இந்தியாவில் அனேக யோகிகளும் வேர்க்கடலையை 100% உணவாகக் கொள்கின்றனர்.

குறிப்பு: வேர்க்கடலையை குறைந்தபட்சம் ஆறு மணி நேரங்களுக்கு நீரில் ஊறவைக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் பித்தம் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட அம்சங்களை இது போக்கிவிடுகிறது. வேர்க்கடலையை ஊறவைக்காமல் உட்கொண்டால், அது தலைசுற்றல், வாந்தி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.

கொள்ளுப்பயறு

foodtoavoid-tamilblog-horsegram

 • இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச்சத்துடன், புரதச்சத்து கொண்ட வளமான மரக்கறிகளுள் ஒன்றாக சிறந்த உணவாக இருக்கிறது.
 • இருப்பினும், இதிலுள்ள சுன்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் ஒருவிதமான இரசாயனக் கலவையில் இருப்பதால், உடலினால் அவற்றை உள்ளபடியே கிரகிக்கமுடியாது.
 • கொள்ளுப்பயறை முளைவிடச்செய்தால், இரும்பு மற்றும் சுண்ணாம்புச்சத்துக்களின் கிரகிப்பு அதிகமாவதால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு கூடுகிறது. முளைகட்டிய கொள்ளு மிக எளிதாக செரிமானமும் ஆகிறது.

குறிப்பு: கொள்ளுப்பயறானது உடலின் உஷ்ணத்தை அதிகரிப்பதால், மேகமூட்டமான, மழைக்காலங்களில் ஏற்படும் இருமல் மற்றும் ஜலதோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உதவுகிறது. இருப்பினும், கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது, கொள்ளு உடலின் உஷ்ணத்தை மேலும் அதிகமாக்கினால், முளைகட்டிய பச்சைப்பயறை உண்பதன் மூலம் அதை ஈடுகட்டவேண்டும்.

தீட்டப்பட்ட தானியங்கள்: ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நீக்கப்பட்டவை

ஒரு தானியம் இயற்கையாகவே மூன்று அம்சங்களை உள்ளடக்கிக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

foodtoavoid-tamilblog-wheatkernel

 • எண்டோஸ்பெர்ம்: விதையின் உணவுப் பகுதி
 • முளை:இது தாவரத்தின் கருப்பகுதியைக் கொண்டது.
 • உமி:முளை மற்றும் விதையின் உணவைச் சூழ்ந்திருக்கும் பாதுகாப்புக் கவசம்.

எண்டோஸ்பெர்ம் அதிக மாவுச்சத்து கொண்டது

முளைத்து எழுகின்ற விதைக்கான பெருமளவு சக்தியை வழங்கும் எண்டோஸ்பெர்மின் முதன்மையான அம்சம் மாவுச்சத்து. இருப்பினும், வைட்டமின்கள், நார்ப்பொருள் அல்லது ஃபைடோகெமிக்கல்-கள் எண்டோஸ்பெர்ம் – இல் குறைவாகவே உள்ளது.

உமி மற்றும் முளையில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன

இதற்கு மாறாக, உமி மற்றும் முளைப் பகுதியானது, பி-வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், ஃபைடோகெமிக்கல்-கள் உள்ளிட்ட பெரும்பான்மையான ஊட்டச்சத்துகளுடனும், சுண்ணாம்பு, மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களுடனும் வளமாக இருக்கின்றன.

தானியங்களை தீட்டுவது ஊட்டச்சத்துக்களை நீக்குகிறது

நடைமுறையில், தானியங்கள் விற்பனைக்கு வருவதற்கு முன், அதன் நயத்திற்காகவும், நீண்ட காலம் கெடாமலிருக்கவேண்டிய அவசியத்திற்காகவும், foodtoavoid-tamilblog-foodgrainsஅவைகள் தீட்டப்படுகின்றன. தானியங்கள் இயந்திரங்களில் தீட்டப்படுவதால், உமியும், முளையும் பிரித்தெடுக்கப்பட்டு, பயனற்றதாகிறது. எண்டோஸ்பெர்மின் மாவுச்சத்து மட்டும் தங்குகிறது. இதன் விளைவாக பெரும்பாலான ஊட்டச்சத்துகள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்ட தானியமாக மட்டும் நமக்கு கிடைக்கிறது.

இன்றைக்கு சந்தையில் விற்கப்படுகின்ற பெருவாரியான தானியங்கள், ஏதோ ஒருவிதமான செயல்முறையில் பதப்படுத்தப்படுகின்றன. பச்சரிசி மற்றும் பச்சரிசி மாவு போன்றவை இதற்கான பொதுவான உதாரணங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

மாற்றுவித முழுதானியங்கள்

இன்றைய நாட்களில் சிவப்பரிசி, முழுகோதுமை போன்ற தானியங்கள் அதிகம் கிடைக்கின்றன. இதய நோய், புற்றுநோய், உடற்பருமன், டைப் 2 நீரிழிவு மற்றும் தீராத வியாதிகள் ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கான பல சத்துக்கள் முழுதானியங்களில் மிக அதிகமாக உள்ளன. தானியத்தைத் தீட்டும் செயல்முறையில், ஏறக்குறைய முற்றிலும் நீக்கப்பட்டுவிடும் இத்தகைய சத்துக்கள் முளையிலும், உமியிலும் காணப்படுகின்றன.

நமது தினசரி உணவு ஒன்றிரண்டுக்கும் அதிகமான தானியங்களை உள்ளடக்கியதாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது முக்கியமானது. நமது உணவுகளில் முக்கியமாக இடம்பெறவேண்டிய, ஆயினும் எப்போதும் புறந்தள்ளப்படுகின்ற பலவிதமான உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட தானியங்கள் கிடைக்கின்றன.

கேழ்வரகு

 • ராகி – என்று இந்தி மொழியில் அறியப்படும் இந்த தானியம், சிறுதானியங்களுள் மிக உயரிய ஊட்டச்சத்து கொண்டதாகக் கருதப்படுகிறது.foodtoavoid-tamilblog-foodgrainfingermillet
 • கேழ்வரகின் புரதத்தில் மிக அதிகமான உயிரியல்தன்மை இருப்பதால், அது எளிதாக உடலில் கலந்துவிடுகிறது.
 • உடலின் ஆரோக்கியத்துக்கு மிகவும் அத்தியாவசியமான பலவிதமான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இத்தகைய சில அமினோ அமிலங்கள், பெரும்பாலான மற்ற தானியங்களில் போதுமான அளவுக்கு இல்லை.
 • உணவுத் தாதுக்கள் குறிப்பாக, சுண்ணாம்புச்சத்து, மற்ற தானியங்களில் உள்ளதைவிட ஐந்திலிருந்து முப்பது மடங்கு வரை, இதில் அபரிமிதமாகக் கிடைக்கிறது.
 • ஃபாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தும் மிக அதிகளவில் உண்டு.

குறிப்பு: கேழ்வரகில் ரொட்டி, தோசை, கஞ்சி, பிஸ்கட் மற்றும் லட்டு கூடத் தயாரிக்க முடியும்.

கம்பு

 • பஜ்ரா – என்று இந்தியில் கூறப்படும் இந்த தானியம் மிக அதிகளவு வைட்டமின் – பி, foodtoavoid-tamilblog-pearlmilletமற்றும் உணவுத் தாதுக்களாகிய பொட்டாசியம், ஃபாஸ்பரஸ், மாங்கனீசு, இரும்பு, சிங்க், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.
 • அதில் க்ளூட்டன் இல்லாத காரணத்தால், கோதுமை ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்றது.
 • அரிசி, கோதுமையை விட கம்பு ஊட்டச்சத்தில் உயரியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியானது, மனித வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு, கோதுமை உணவைவிட கம்பு மற்றும் பருப்பு வகைகள் சிறந்தவை என்று எடுத்துரைக்கிறது

தேனீர்/ காபி: காலப்போக்கில், தாக்குப்பிடிக்கும் சக்தியைக் குலைக்கிறதுfoodtoavoid-tamilblog-teacoffee

தேனீரும், காபியும் நரம்புகளைத் தூண்டக்கூடியவை. நரம்பைத் தூண்டும் பானங்கள் சிறிது நேரத்துக்கு சக்தியளிப்பதைப் போன்ற ஒரு உணர்வை உருவாக்குகின்றன, ஆனால் பிறகு உடலின் சக்திகள் வடிந்துவிடுகிறது. மிக அதிகமான நரம்புத் தூண்டிகளை எடுத்துக்கொள்வது நாளடைவில் உடலின் தாங்கும் திறனைக் குலைப்பதுடன், ஆற்றலைச் சேமித்துக்கொள்ளும் உடலின் திறனையும் பாதிக்கிறது.

மாற்றுவித ஆற்றலளிக்கும் பானங்கள்

பூசணி

 • காலையில் ஒரு குவளை பூசணிச்சாறு அருந்துவது, உங்களுக்கு மிகவும் சக்தியூட்டுவதாக இருப்பதுடன், நரம்புகளை மிகவும் அமைதியாக வைத்திருக்கவும் செய்கிறது.
 • தினமும் பூசணிச்சாறு அருந்துவதால் ஒருவரது அறிவுத்திறங்கள் மகத்தான அளவுக்கு மேம்படுகிறது.

எலுமிச்சை – இஞ்சி தேனீர் தயாரிப்பு

இந்த எலுமிச்சை – இஞ்சி தேனீர் உங்களை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் உணரச்செய்கிறது, கஃபீன் இரசாயனத்தின் பக்கவிளைவுகள் இல்லாமல்:

 • 4.5 கோப்பை நீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும்.
 • நீர் கொதித்துக்கொண்டிருக்கும்போது, 2 – அங்குலம் இஞ்சித் துண்டையும், சுமார் 25 – 30 துளசி இலைகளையும் ஒன்றாக நசுக்கிக் கொள்ளுங்கள்.
 • 2 – தேக்கரண்டி மல்லி விதைகளையும் (விரும்பினால்), மேற்கூறிய கலவையையும் கொதிக்கும் நீருடன் சேர்க்கவும்.
 • மேலும் 2 – 3 நிமிடங்களுக்குக் கொதிக்கவிடவும்.
 • பிறகு வடிகட்டி, சுவைக்கு 1 – தேக்கரண்டி எலுமிச்சைச் சாறும், வெல்லமும் சேர்த்து, ஆவி பறக்க பரிமாறுங்கள்!

https://www.youtube.com/watch?v=Kvc0BVWLM0s&t=2s

நீங்கள் உண்ணும் உணவெல்லாம் விருந்தாகட்டும்! ஒவ்வொரு உணவும் மருந்தாகட்டும்!

ஈஷா ருசி புத்தகத்தை E-download செய்துகொள்ளலாம் இந்த நூலில் சேலட்கள், ஜுஸ்கள், கஞ்சி, களி வகைகள் மற்றும் சாத்வீக உணவு வகைகள் என 200க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் புகைப்படத்துடன் தெளிவாக தரப்பட்டுள்ளன. உணவு பற்றி சத்குரு அவர்களின் கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.