ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் தவிர்க்கவேண்டிய உணவுகள் - பகுதி 1


சர்க்கரை: கலோரிகள் ஏதுமில்லை, ஊட்டச்சத்தும் இல்லை

வரலாற்றின்படி, கரும்பிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றிலிருந்து நேரடியாக அதன் சுத்திகரிக்கப்படாத, கச்சாப்பொருள் வடிவிலேயே சர்க்கரை பயன்படுத்தப்பட்டது. foodtoavoid-tamilblog-sugarசுத்திகரிக்கப்பட்ட சாறானது கொதிக்க வைக்கப்பட்ட பிறகு திடமான படிமங்களாகிறது. இவை சன்னமான துகள்களாக உடைக்கப்படுவது. சர்க்கரை என்ற பெயரில் உணவாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், இன்றைக்கு சந்தைப்படுத்தப்படும் சர்க்கரையானது, இரசாயன செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் – கூறுவதற்கேற்ப, அப்படிப்பட்ட சர்க்கரையானது “ஜீரோ கலோரிகள்” அளிக்கின்றது. ஏனென்றால் சுத்திகரிப்பு முறைகளினால் ஏறக்குறைய எல்லா தாதுச்சத்துகளும் மற்றும் வைட்டமின்களும் அகற்றப்பட்டு, சர்க்கரையின் ஊட்டச்சத்து வெகுவாகக் குறைந்துவிடுகிறது.

இயற்கை சர்க்கரையும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையும்

பழங்கள், காய்கள் மற்றும் பால்பொருட்களில் இயற்கையாகவே அடங்கியுள்ள சர்க்கரைக்கும், குளிர்பானங்கள், உணவு மற்றும் பழரசங்களில் சேர்க்கப்படும் செயற்கை அல்லது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கும் உள்ள வித்தியாசத்தை ‘தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்‘ எடுத்துரைக்கிறது. அதிகமான சர்க்கரை உட்கொள்ளுவதால், அதெரோஸ்லெரோஸிஸ் (இருதயக் குழல்கள் இறுகிவிடுதல்), நீரிழிவு கட்டுப்பாடு போன்றவை மோசமடைந்து, ஊட்டச்சத்துக் குறைபாடுகள் நேரிடக்கூடும் என்று அவர்களது அறிக்கை கூறுகிறது.

சர்க்கரைக்கு மாற்றுப்பொருட்கள்

வெல்லம்

foodtoavoid-tamilblog-jaggery

  • சர்க்கரையின் மூலப்பொருளான, சுத்திகரிக்கப்படாத வெல்லமானது பண்டைகாலங்களில் பயன்படுத்தப்பட்டது. இன்றைக்கும் கூட இந்தியாவிலும், தெற்கு ஆசியாவிலும் உணவுப்பொருட்களில் இனிப்புக் கூட்டுவதற்கு வெல்லம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • கரும்புச்சாற்றில் காணப்படும் தாதுக்கள், மற்ற ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்களை அது தன்னகத்தே கொண்டுள்ளது. பண்டைக்கால இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில், வெல்லமானது வறட்டு இருமல், செரிமான சக்தி போன்றவற்றுக்கும், பெரும்பாலான ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும் நிவாரணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • பண்டைக்கால இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில், வெல்லமானது வறட்டு இருமல், செரிமான சக்தி போன்றவற்றுக்கும், பெரும்பாலான ஆரோக்கியக் குறைபாடுகளுக்கும் நிவாரணமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பு: சில வகையான வெல்லத்தில் இன்று சூப்பர் ஃபாஸ்பேட் சேர்க்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் வசீகரமாகத் தோன்றுவது சூப்பர் ஃபாஸ்பேட் வெல்லம். அது தவிர்க்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, “அழகற்ற”, கருமையாகத் தோன்றும் வெல்லத்தைப் பயன்படுத்தவும்.

தேன்

  • தேன் அற்புதமானதும், சர்க்கரைக்கு இயற்கையான மாற்றாகவும் இருக்கிறது.
  • தினசரி தேன் உட்கொள்வது, குறிப்பாக அதிகமான சளித் தொந்தரவு மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.foodtoavoid-tamilblog-honey
  • தேன் இருதயத்திற்கும், மூளைக்கும் சிறந்தது என்பதுடன், அது மனத்திறனைக் கூர்மைப்படுத்துகிறது.
  • தேன் குளிர்ந்த நீருடன் கலந்து எடுத்துக்கொள்ளப்படுகிறதா அல்லது இளஞ்சூடான நீருடன் கலந்து எடுத்துக்கொள்ளப்படுகிறதா அல்லது நேரடியாக உட்கொள்ளப்படுகிறதா என்பதைப்பொறுத்து, அது மனித உடலின் மீது பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
  • தேனை வெந்நீருடன் கலந்து தினமும் உட்கொள்ளும்போது, இரத்த ஓட்டத்தில் சிவப்பு இரத்த அணுக்கள் அதிகரிப்பதுடன், இரத்தசோகையை குணப்படுத்தும் வண்ணம் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது.

குறிப்பு: தேன் சமைக்கப்படக் கூடாது. சமைப்பது தேனை விஷமாக்குகிறது. தேனை இளஞ்சூடான நீரில் கலக்கவேண்டும். கொதிக்கும் சுடான நீரில் கலக்கக்கூடாது. ஒரு வயதுக்குக் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு தேன் கொடுக்கக்கூடாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பால்: பெரும்பாலான பெரியவர்களால் செரிக்க முடியாதது

foodtoavoid-tamilblog-milkமூன்று வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு மட்டும்தான், பால் முழுமையாகச் செரிப்பதற்குத் தேவையான இரசாயனங்கள் சுரக்கின்றன. உலகத்தின் சில பகுதிகளைத் தவிர, பரவலாக உலகின் பெரும்பான்மையான பெரியவர்களுக்கு பால் பெரும்பாலும் செரிமானமாவது இல்லை. செரிமானமடையாத பால், சளியை உருவாக்குவதுடன், சோம்பலையும் ஏற்படுத்துகிறது. ஆம், பாரம்பரியமாகவே பால் வளமான சுண்ணாம்புச்சத்து கொண்டதாக நம்பப்பட்டு வந்துள்ளது. ஆனால் அதைப்போன்ற மற்ற பல பொருட்களில் சுண்ணாம்புச்சத்து கிடைக்கின்றது.

பாலின் மாற்று உணவுகள்

தினசரி சுண்ணாம்புச்சத்து தேவைக்கான உணவுகளாக, முழு தானியங்கள் (கீழ்க்கண்டவாறு), பயறு வகைகள், கொட்டைகள் போன்றவை பாலுக்கு சிறந்த மாற்றாக உள்ளன.

உணவின் ஆனந்தம்

உங்களது தினசரி உணவு நல்ல சரிவிகித சமமாக இருப்பதை நீங்கள் உறுதிசெய்துகொள்வது முக்கியமானது. அதைப்போலவே, நீங்கள் உண்ணும் உணவைப்பற்றி அதிகம் குழப்பிக் கொள்ளாமல் இருப்பதும் முக்கியமானது என்பதையும் நீங்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

“உணவுப் பித்தராகிவிடாதீர்கள் – “நான் இதைச் சாப்பிடமாட்டேன், நான் அதைச் சாப்பிடமாட்டேன். நான் இப்படிச் சாப்பிடவேண்டும், நான் அப்படிச் சாப்பிடவேண்டும்.” அப்படி இல்லை, ஆனந்தமாகச் சாப்பிடுவது என்பது சரியானபடி சாப்பிடுவதைவிட அதிக முக்கியமானது. உணவு உங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதுவே முடிவு செய்யும் காரணியல்ல. சாப்பிடுவதில் உள்ள உண்மையான ஆனந்தம் என்னவென்றால், வேறொரு உயிரினம் உங்களின் ஒரு பகுதியாவதற்கு, உங்களுடைய உயிருடன் இணைந்து கலந்து, நீங்களாகவே மாறுவதற்கு விருப்பத்துடன் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். ஏதோ ஒரு விதத்தில், அவராக இல்லாத வேறொன்று அவரின் ஒரு பகுதியாக இருப்பதற்கான விருப்பத்துடன் இருப்பதை அறிவதுதான் ஒரு மனிதர் உணரக்கூடிய மாபெரும் இன்பம்.” - சத்குரு

ஆகவே, உங்களை சக்தியால் நிரம்பச்செய்யும் உணவுகளின் மீது கவனம் செலுத்துவதுடன், உங்களை சோம்பலுக்கு உள்ளாக்கும் உணவுகளைத் தவிர்க்க முயலுங்கள். வரவிருக்கும் ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வாழ்த்துகிறோம்!

நீங்கள் உண்ணும் உணவெல்லாம் விருந்தாகட்டும்! ஒவ்வொரு உணவும் மருந்தாகட்டும்!

ஈஷா ருசி புத்தகத்தை E-download செய்துகொள்ளலாம் இந்த நூலில் சேலட்கள், ஜுஸ்கள், கஞ்சி, களி வகைகள் மற்றும் சாத்வீக உணவு வகைகள் என 200க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் புகைப்படத்துடன் தெளிவாக தரப்பட்டுள்ளன. உணவு பற்றி சத்குரு அவர்களின் கருத்துக்களும் இதில் இடம் பெற்றுள்ளன.