சர்க்கரை நோய்க்கு தீர்வாகும் நாவல்!

குறிப்பிட்ட சீசன்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நாவல் பழங்களில் அடங்கியுள்ள பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்!
sakkarai-noiku-theervaagum-naaval
 

tea-kadai-sketchகிரீன் டீ, லெமன் டீ, ஜிஞ்சர் டீ, மசாலா டீ என பலவகை தேநீர் கிடைப்பதாக அந்த டீக்கடையில் விளம்பரப்பலகை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கூடவே நான் வியப்புடன் உற்று நோக்கும் விதமாக ‘நாவல் பழடீகிடைக்கும்' என்றும் எழுதியிருந்தது.

நாவல் பழம் என்றாலே பள்ளிப்பருவத்தில் இடைவேளை நேரங்களில் எட்டணா கொடுத்து பள்ளிக்கூட கேட்டிற்கு வெளியே கடை விரித்திருக்கும் குருவம்மாள் பாட்டியிடம் கைநிறைய வாங்கிக்கொண்டு, அவற்றை கால்சட்டையில் போட்டு ஒவ்வொன்றாய் எடுத்து சுவைத்த அனுபவங்கள் மனதில் வந்துபோனது.

“நாட்டுச்சர்க்கரை போட்டு ஒருநவாப்பழ டீ கொடுங்க!” என்றேன். தேநீரை ருசிபார்த்துக்கொண்டே பள்ளி நினைவுகளை அசைபோடலாமென டீக்கடை பெஞ்சில் அமர்ந்தேன். நான் டீயை குடித்து முடிப்பதற்கும் உமையாள் பாட்டியின் அலைபேசி அழைப்புவருவதற்கும் சரியாக இருந்தது.

umayalpati“என்னப்பா எங்கே இருக்க…?” எதிர்முனையில் பாட்டி அவசரமாக எங்கேயோ கிளம்பிக்கொண்டிருப்பது குரலில் தெரிந்தது.

‘என்ன கொண்டு போய் பஸ்ஸ்டாண்டுல விட்டுறேன்?!” உமையாள் பாட்டியின் கோரிக்கையை என்னால் எப்படி மறுக்கமுடியும்?! பாட்டி வீட்டிற்கு விரைந்தேன்.

பாட்டியை பத்திரமாக பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு புறப்படலாமென நினைத்தபோது, அங்கே ஒருதள்ளு வண்டியில் நவாப்பழங்கள் என் கண்களைப் பறித்தன.

பாட்டியின் பஸ் வருவதற்கு இன்னும் 20 நிமிடங்கள் ஆகும் என்பதால், அதற்குள் பாட்டியிடம் நவாப்பழம் குறித்த தகவல்களைக் கேட்டறியலாம் என தோன்றியது!

ப்ளாஸ்டிக்பைகள் பயன்படுத்தாத அந்தத் தள்ளுவண்டி கடைக்காரர், அழகாக ஒரு தேக்கு இலையில் ஒருகைப்பிடி நாவல் பழங்களை மடித்துக்கொடுக்க, அதை ருசித்தபடியேபாட்டியிடம் நாவல் பற்றிய ஆரோக்கிய நன்மைகளை அறிந்துகொண்டேன்.

  • துவர்ப்புச் சுவையுடைய நாவல் பழங்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை.
  • நாவல் பழங்களில் கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், தாமிரம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
  • குறிப்பாக நாவல் பழங்களிலுள்ள கால்சியம் எலும்புகளுக்கு பலம் தருவதுடன், இதிலுள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்கிறது.

vellai-naaval-pazham

வெள்ளை நாவல் என்ற வகையைச்சேர்ந்த பழங்கள் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகிறது. மேலும் உடல் சூட்டை குறைத்து இரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது.

jambu-naaval-pazham

இன்னொரு வகையான ஜம்பு நாவல், வாதநோய் மற்றும் தாகத்தை கட்டுப்படுத்துகிறது. இம்மரத்தின் பழங்கள் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகிறது. இதில் உள்ள ஜாம்புலின் எனும் பொருள் ஸ்டார்ச்(starch) சர்க்கரையாக ஆவதைத் தடுக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவுகட்டுக்குள் வருகிறது. உடலில் புதிய செல்களை புதுப்பிக்கும் திறன்கொண்ட ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதில் அதிகமாக உள்ளதால், தோல் அரிப்பு போன்ற சரும பிரச்னைகளுக்கு தீர்வாகிறது. இந்த நாவல் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் வயதாகும் செயல்முறை தாமதமாகிறது.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் போன்ற உபாதைகளுக்கு நாவல் பழங்கள் நல்ல தீர்வாகின்றன.

  • பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், வெள்ளைப்படுதல் போன்ற உபாதைகளுக்கு நாவல் பழங்கள் நல்ல தீர்வாகின்றன.நாவல் பழங்களை கஷாயம் வைத்து குடித்தால் வாயுத் தொல்லை சரியாகும்.
  • நாவல் பழங்களை பிழிந்து சாறெடுத்து, 3 டீஸ்பூன் நாவல் பழ சாறுடன் 3 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து காலை & மாலை இருவேளை குடித்துவந்தால், சிறுநீர் கழிக்கும்போது உண்டாகும் எரிச்சல் தணியும்.
  • நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பசியைத் தூண்டுவதோடு, பல் மற்றும் ஈறுகளை சுத்தம் செய்கிறது.

நாவல் பழங்கள் மட்டுமல்லாமல் அதன் கொட்டைகள், வேர்கள், இலைகள் மற்றும் மரப்பட்டைகள் என அனைத்துமே பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டவை என்பதை உமையாள் பாட்டி சொல்ல கேட்டறிந்தேன்.

பாட்டி தகவல்களை சொல்லி முடிக்கும்போது பஸ்ஸும் சரியாக வந்துசேர்ந்தது. பாட்டி மட்டுமல்லாமல் அங்கே அவரது நட்பு வட்டாரங்கள் குழுவாக அந்த பஸ்ஸில் ஏறுவதைக்கண்டபோது, இவ்வளவு ஏற்பாட்டுடன் எங்கே செல்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினேன்.

“பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு பாட்டிகள்லாம் சேந்து ஆன்மீக டூர் போறோம். முதல்ல நம்ம திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரத்தான் தரிசிக்கிறோம். ஸ்தலவிருட்சம் ஜம்பு நாவல். நீயும் எங்களோட ஜாயின் பண்றயா?” என ஜன்னல் வழியே உமையாள் பாட்டி கேட்க, பாட்டிகளோடு ஆன்மீகப் பயணம் செய்யும் அளவிற்கு எனக்கு பொறுமை போதாது என்பதால், அடுத்த முறை நிச்சயம் வருவதாக சொல்லிவிட்டு புறப்பட்டேன்.

நம் கலாச்சாரத்தில் மரங்களை ஸ்தல விருட்சங்களாக வைத்து அவற்றை போற்றி வந்தது, அதன் மகிமைகளை ஆழமாக உணர்ந்திருந்ததால் தான் என எனக்கு உறுதியாக தோன்றியது.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1