32 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் தங்கள் உள் வளர்ச்சிக்காக ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்தலத்தில் 7 மாதங்கள் தங்கி வாழ்ந்திட இணைந்துள்ளார்கள்.

ஆன்மீக சாதனை மற்றும் குதூகலம் என்ற இந்த இரு சொற்கள் ஒரே வாக்கியத்தில் மிகச்சரியாகப் பொருந்துவதாகத் தெரியவில்லை. பெரும்பாலான மக்களுக்கு, ஆன்மீக சாதனை எனும் சொல் உடலை கொடுமைக்குள்ளாக்கும் தோரணையில் கோவனமணிந்த துறவி போன்ற காட்சியையும் எதிலும் ஆர்வமற்ற, சுற்றியுள்ளவற்றுடன் ஈடுபாடில்லாதவர்கள் போன்ற காட்சிகளையுமே மனம்உருவாக்குகிறது. சாதனா பாதையின் இந்த இரண்டு மாதகால பயணத்தில், இப்படிப்பட்ட தவறான கருத்துக்களை முற்றிலும் சிதைத்து விடும்படியே பங்கேற்பாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியும்.

ஆன்மீக சாதனை என்பது வாழ்க்கையில் ஆழமான ஈடுபாட்டைக் காண்பதைப் பற்றியது. இதைப் பல வழிகளில் ஊக்குவிக்க முடியும். ஆனால் கொண்டாட்டங்களும் விளையாட்டுகளும் மிகவும் குதூகலமான அணுகுமுறையாகும்!

பண்டிகைகளில் ஈடுபடுவது மிகவும் எளிதானது

“நான் ஆசிரமத்தில் இருந்த முதல் சில வாரங்களில், சேறும் சகதியும் பட்டு என் உடைகள் அடிக்கடி அழுக்கடைந்தன. இதனால் நான் மிகவும் கோபப்பட்டேன், ஏனென்றால் ஒவ்வொரு முறையும் நான்தானே என் துணிகளைத் துவைக்க வேண்டும். துவைத்து இரண்டு மணி நேரத்திலேயே அவை மீண்டும் அழுக்கடைந்துவிடும்! பின்பு ஒருநாள் ஒரு கொண்டாட்டத்திற்காக நாங்கள் விளையாட்டு மைதானத்திற்கு சென்றோம், நான் சேறும் சகதியும் சேர மிக ஆர்வமுடன் விளையாடினேன். அனைவருமே பெரும்மகிழ்ச்சியுடன் பங்கேற்றதால் நான் முழுமையாக விளையாடினேன், அதில் ஈடுபடுவது மிகவும் எளிதானதாக இருந்தது. அதன்பிறகு உண்மையில் என் சட்டையை நன்கு துவைக்க முயற்சி செய்தேன், ஆனால் அது சகதியின் நிறத்திலேயே இருந்தது. பின்பு அதைப் பார்த்து சிரித்துக் கொண்டேன். "சரி, இதற்கு மேல் என்ன செய்ய முடியும், இதை இப்படியே விட்டுவிட வேண்டியதுதான்!!" – பாரன், 35, மெல்போர்ன் 

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic1

நவராத்திரி - ஒரு கலாச்சார விருந்து

2010ல் சத்குரு சக்திவாய்ந்த மற்றும் உக்கிரமான பெண் தன்மையான லிங்கபைரவி தேவியை பிரதிஷ்டை செய்தார். தெய்வீக அதிர்வு மற்றும் நல்வாழ்வின் ஆதாரமான தேவியின் இருப்பு, ஆசிரம வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பலவிதத்தில் வண்ணக் கோலமிட்டுள்ளது.

நவராத்திரியின் சக்திமிகுந்த, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில், லிங்கபைரவி தேவி கோவிலில் நடைபெற்ற “நவராத்திரி சாதனை” என்பது பைரவியின் அருளைப் பெறுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு செயல்முறையாகும். பெரும்பாலான சாதனா பாதை பங்கேற்பாளர்களுக்கு, இந்த ஒன்பது நாட்களும் பெரிய அளவிலான ஆசிரம கொண்டாட்டங்களில் பங்கேற்கும் முதல் அனுபவமாகவே இருந்தது. பண்டிகையின் உற்சாகங்கள் எந்த அளவுக்கு அவர்களுக்குள் உயிரூட்டியது என்பதைப் பற்றி பலர் பகிர்ந்து கொண்டனர்.

தேவியின் பரவச தரிசனம்

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic2

“நவராத்திரியின் முதல் நாளிலேயே, முழு ஆசிரமமுமே தேவியின் சிவப்பு நிற சால்வையணிந்து எழில் கோலம் கொண்டதாகக் காட்சியளித்தது. ஈஷா நடத்தும் எந்தவொரு நிகழ்வின் போதும் குடிகொண்டிருக்கும் வழக்கமான உற்சாகம் காற்றிலே மின்சாரமாகப் பரவியது. தீர்த்தகுண்டத்தில் நீண்ட நேரம் நீராடிய பிறகு, மாலை நேரம் நாங்கள் லிங்கபைரவி தேவியின் கோவிலை நோக்கி விரைந்தோம். கோவில் முழுவதும் அரிசி, மஞ்சள், குங்குமம், தேங்காய் மற்றும் பெயர் தெரியாத பல அர்ப்பணப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கோவிலில் கலை நிகழ்ச்சிக்காக வந்திருந்த இசைக்கலைஞர்கள், மெல்லிசைக் கச்சேரிக்காகத் தங்கள் இசைக் கருவிகளை தயார்செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே சென்றதும் மெல்லிய சலங்கை ஒலி, நடனக் கலைஞர்களின் வருகையை அறிவித்தது.

இறுதியாக மூடியிருந்த திரைச் சீலைகள் விலக்கப்பட்டன. அப்போது, அனைத்து விழாக் கொண்டாட்டங்களையும் கடந்து, பைரவி தேவி தனது கருவறையில் எழுந்தருளி பிரமாண்டமான தெய்வீகக் காட்சி தந்தாள். அவளுடைய பத்து கைகளும் வண்ணமிகு வளையல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வழக்கமாக நடுநிசியின் கருவண்ணத்தில் இருக்கும் அவளது திருமேனி குங்குமச் சிவப்பு நிறத்திலே மின்னியது. அவள் தனது உண்மையான ரூபத்தை இப்போது வெளிப்படுத்துவதைப் போல நான் உணர்ந்தேன். நவராத்திரி பூஜையின் அதிர்வு தொடர்ந்து அதிகரித்து, மேலும் தீவிரமடைந்து தேவி ஆரத்தியிலே உச்சக்கட்டத்தை அடைந்தது. விழா முடிந்து, நான் வெளியேற எழுந்தபோது, முற்றிலும் தேவியின் பரவசக் களிப்பில் இருப்பதாக உணர்ந்தேன்.” – சாரக், 22, மகாராஷ்டிரா, இந்தியா

கர்பாவின் கர்ப்பத்திலே!

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic3

குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனம், நவராத்திரி இரவுகளில் முழு ஆர்வத்துடன் நிகழ்த்தப்பட்டது. சாதனா பாதை பங்கேற்பாளர்கள் தங்கள் நேரத்தை சிறிதும் வீணாக்காமல் இந்த விழாக்களில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அக்டோபர் 4ம் தேதி இரவில், அனைவரும் கர்பா நடனத்தின் படிகளைக் கற்றுக்கொண்டு நடனமாடுவதற்காக வண்ணமயமான உடையணிந்து, திறமையான நடனக் கலைஞர்களைப் போல காட்சியளித்தனர்.

எல்லாவிதத்திலும் முழுமையாக ஈடுபட்டு, பற்றற்ற நிலையில் செயலாற்றுவதே ஆசிரம வாழ்க்கையின் ஒரு முக்கிய அம்சமாகும். இதில் கர்பா நடனம் எவ்விதத்திலும் விதிவிலக்கல்ல. உண்மையில் நடனம் நமக்கு முழு ஈடுபாட்டையும் ஒருவித வளைந்துகொடுக்கும் தன்மையையும் கற்றுக்கொடுக்கிறது. ஆன்மீக செயல்முறையில் பற்றற்ற நிலையில் செயலாற்றுவதற்கு இது ஒருவரைத் தயார் செய்கிறது.

கொண்டாட்டங்களில் எனக்கு பிடித்த பகுதி

"கொண்டாட்டங்களிலே சுவாமிகள் இங்கே டிரம்ஸ் வாசிக்கும்போது, அது என்னை என் தாயகத்திற்கே அழைத்துச் செல்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு ஆப்பிரிக்கத் தாளம் போலவே உள்ளது. இதுதான் உண்மையில் கொண்டாட்டங்களில் எனக்குப் பிடித்த பகுதியாகும். மக்கள் இசைக்குத் தகுந்தவாறு அசைந்தாடத் தொடங்கும்போது நான் மிகவும் உற்சாகமடைகிறேன், ‘ஆம்! இதைத்தான், இந்த அம்சத்தைத்தான் மிகவும் விரும்புகிறேன்.” – சிபுசிசோ, 24, தென்னாப்பிரிக்கா

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எப்படி நடனமாடுவது என்றுகூட எனக்குத் தெரியாது...

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic4

“நான் நவராத்திரியின் ஒன்பது நாட்களைக் கொண்டாடுவது இதுவே முதல்முறையாகும். இந்தக் கொண்டாட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நான் முழுமையாக அனுபவித்து வருகிறேன். முதல் நாளிலே நாட்டுப்புற இசை இசைத்தபோது நடனமாடுவதை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. பாரம்பரிய நடனம் மற்றும் இசையை நான் ரசிப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. எனக்கு நடனமாடுவது எப்படி என்று கூடத் தெரியாது, ஆனால் ஒவ்வொரு இரவும் நான் கர்பா நடனமாட ஆதியோகி ஆலயத்திற்குச் சென்றுவிடுவேன். ”- எலிசா, 38, ஒடிசா, இந்தியா

காலைநேர ஆன்மீகப் பயிற்சிகளில் எந்த சமரசமும் இல்லை

“ஒவ்வொரு இரவும் கர்பா நடனமாடுவது உட்பட அனைத்து செயல்பாடுகளிலும் நான் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்! அதன் அனுபவங்கள் முற்றிலும் மகிழ்ச்சியானதாகவும், சில சமயம் களைப்பு அல்லது மனச்சோர்வு தருவதாகவும் உள்ளன. ஆனால் இச்செயல்முறையில் இருந்து கற்றுக்கொள்வதற்கு பல விஷயங்களும் உள்ளன. நான் அனைத்து செயல்பாடுகளிலும் என்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளேன். அதேநேரத்தில், நாளிறுதியில் ஏற்படும் களைப்பு என் காலைநேர ஆன்மீகப் பயிற்சியில் இடையூறு செய்ய நான் எப்போதும் அனுமதிப்பதில்லை. இதுவே ஒரு வெற்றியென நான் உணர்கிறேன்!” – சீத்தல், 42, உத்தரபிரதேசம், இந்தியா

சத்குரு ஜெயந்தி

“சத்குரு ஜெயந்தி அன்று, நான் பிக்ஷா ஹாலில் சேவை செய்து கொண்டிருந்தேன், மதிய உணவுக்கு 3000 பேர் வரை எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்பதைக் கேட்டு திகைப்படைந்தேன். ஆரம்பத்தில் கொஞ்சம் பசியுடன் இருந்தேன், மைசூர்பாக்கைப் பார்த்தேன், பரிமாறப்பட வேண்டிய பலவகையான உணவுகள் என்னை மேலும் பசியடையச் செய்தன! ஆனால் மக்கள் உள்ளே வருவதைக் கண்டதும், அவர்களுக்கு நான் சேவை செய்யத் தொடங்கியதும், அவர்களின் பசியே எனக்கு முதன்மையாகத் தோன்றியது, நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் சேவை செய்யத் தொடங்கினேன். எனது சொந்த குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சேவை செய்வதைப் போலவே உணர்ந்தேன். மரக்கன்று பராமரிப்பு சேவையில் என்னுடன் பணிபுரிந்த சில பெண்கள், அழகாக உடையணிந்து உணவு உண்ண வந்திருந்தனர். மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு பரிமாறினேன். இவ்வாறு அனைவருக்கும் உணவு பரிமாறியது என் வாழ்க்கையில் மிகுந்த நெகிழ்ச்சியான ஒரு தருணமாகவே இருக்கும்.”– சைத்ரா, 24, கர்நாடகா, இந்தியா

விளையாட்டுத்தனமான யோகா

வாழ்க்கையை விளையாட்டுத்தனமாக வாழக் கற்றுக்கொள்ளும்போது, ஒருவர் தன்னைச்சுற்றி சுயமாக எழுப்பிக்கொண்ட சுவர்களை அடையாளங்களை துறப்பது இயல்பாகவும் எளிமையாகவும் நிகழ்கிறது. விளையாட்டுத்தனமான அதேசமயம் முழு ஈடுபாடு கொண்ட வாழ்வின் இணையற்ற உதாரணமாக ஸ்ரீகிருஷ்ணனின் வாழ்க்கையைக் கருதலாம். எனவே, கிருஷ்ண ஜெயந்தியை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடியது மிகமிகப் பொருத்தமானதே! 

கிருஷ்ணனின் இனிமை

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic5

“கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டம் எனக்கு ஒரு சிறப்புவாய்ந்த நாள். ஏனென்றால் ‘கிருஷ்ணா’ என்ற ஒலியைக் கேட்கும்போதெல்லாம் நான் உள்நிலையில் உணரும் இனிமையானது, என்னுள் குளிர்ந்த, நறுமணமுள்ள தென்றலைப் போல வருடுகிறது. குறிப்பாக, எனக்குள் எதிர்ப்பையும் சவாலையும் தரக்கூடிய செயல்களே, மிகுந்த விளையாட்டுத்தனத்துடன் அணுக வேண்டியவைகள் என்பதை நான் உணர்ந்தேன்.” – மிகுஸ், 32, ரிகா, லாட்வியா

நான் முழுமையாக நடனமாடினேன்

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic6

“கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் மிகவும் அழகாக இருந்தன. அன்றைய தினம் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள், முழுமையாக அக்கணத்திலே நிலைபெறச் செய்து, என்னை என்னுள் மலரச் செய்தன. நான் ஒரு குழந்தையைப் போல, வயிறு குலுங்கச் சிரித்தேன். அந்த கொண்டாட்டங்களில் விளையாடிய போது எனக்குள் இருந்த குழந்தைத்தனத்தை என்னால் அனுபவிக்க முடிந்தது. நான் முன்பு எப்போதும் நடனமாடாததைப் போல முழுமையாக நடனமாட முடிந்தது. அது மிகவும் வண்ணமயமாக இருந்தது. என்னுள் இருந்த குழந்தையின் விளையாட்டுத்தனத்தை என்னால் உணர முடிந்தது.”– டினாலி, 31, மகாராஷ்டிரா, இந்தியா

விளையாட்டுக்கள் - ஈஷாவின் ஒன்றான அங்கம்

சத்குரு நடத்திய முதல்நிலை யோகா வகுப்பிலேயே விளையாட்டுக்கள் ஈஷாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. மக்களுக்குள் உள்ள தேவையற்ற வெறுப்புணர்வுகளை உடைப்பதற்கும், மக்களை மகிழ்ச்சியுடன் ஒன்றிணைப்பதற்கும் இது ஒரு உன்னதமான வழி. ஒரு எளிமையான விளையாட்டு கூட அளப்பரிய உற்சாகத்தையும் ஆர்வத்தையும் நமக்கு அளிக்கும். ஏனென்றால், முழுமையான ஈடுபாடு இல்லாமல் எந்த ஒரு விளையாட்டையும் விளையாடுவது சாத்தியமற்றது!

முழுமையான ஈடுபாடு என் மனதை அமைதிப்படுத்தியது

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic7

"நலந்தா மைதானத்தில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகள், நான் குழந்தைப் பருவத்தில் விளையாடியதையும், களங்கமற்றுத் திரிந்ததையும் எனக்குள் நினைவூட்டின. கோ-கோ, செயின்-செயின் போன்ற ஓடியாடி விளையாடும் விளையாட்டுகளை நான் மிகவும் ரசித்தேன். இவை எனக்குள் புத்துணர்வையும் விழிப்பையும் ஏற்படுத்தி, மற்ற பிற செயல்களைச் செய்வதற்காக என்னைத் தயார் செய்தன. நான் விளையாடிக் கொண்டிருந்த அந்த குறிப்பிட்ட தருணத்தில், வேறு எதுவும் என் மனதை ஆக்கிரமிக்காத அளவில் மிகந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். மற்ற பங்கேற்பாளர்கள் கூட ஈடுபாடற்று விளையாடியதாக எனக்குத் தோன்றவில்லை. யாராவது சிலர் விளையாடாவிட்டாலும்கூட, எங்களை உற்சாகப்படுத்தி, விளையாட்டை ரசித்து மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள்.” – பூர்ணிமா, 30, கர்நாடகா, இந்தியா 

டமரு சேவை

மக்கள் தங்கள் ஆன்மீகப் பாதையைத் தொடர்வதற்காகவே ஆசிரமம் தேடி வருகிறார்கள். இது ஒருங்கிணைந்து செயல் செய்வதற்கான புத்துயிரூட்டக்கூடிய வித்தியாசமான சூழலை அமைத்துக் கொடுக்கிறது. திறமை அல்லது ஆற்றலை வைத்து மட்டுமே ஒருவரை அளவிடும் கார்ப்பரேட் பணியிடத்தைப் போல் அல்லாமல், இங்கு ஒருவர் முழுமையான விழிப்புணர்வு நிலையில் இருந்து செயலாற்றவும், தன்னை முழுமையாக அர்ப்பணிப்பதற்காக, சேவையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic9

ஆனால் நீங்கள் எப்போதாவது சேவையின் செயல்வேகத்திலே சிக்கிக்கொள்ள நேர்ந்தால், ஆயுதம் போன்ற பெரிய மத்தளங்களை சுமந்தபடி (பெரும்பாலும் தற்காலிக) இசைக் கலைஞர்களின் உற்சாகமான இசைக்குழு உங்களை நாடிவரும் – இத்தகைய மத்தள இசை உங்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதற்கும், உங்கள் தினசரி செயலில் தொற்றிக்கொள்ளும் சலிர்ப்பைத் தகர்த்தெறிவதற்கும் உதவும்.

இது வெறுமனே மற்றொரு பணியிடம் அல்ல

“நான் சேவை செய்து கொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி மத்தள இசை வாசிப்பதை, நேரடியாக நான் முதன்முதலில் கேட்டபோது, மிகவும் உற்சாகமடைந்தேன். அவர்கள் சரியான நேரத்தில் வந்து, நண்பகல் நேரம் மனதோரம் குடிகொள்ளும் ஒருவித மந்தநிலையில் இருந்து என்னை எழுப்பி, மனதில் புத்துணர்ச்சி அளித்தார்கள். எல்லாவற்றையுமே சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதை அது எனக்கு நினைவூட்டியது. மேலும், எனது குழுவில் உள்ள ஒவ்வொருவருமே இயல்பாகவே ஒருவித மேம்பட்ட நிலைக்கு வந்திருந்ததை நான் கவனித்தேன். இது ஒவ்வொரு பணியிடத்திலும் கட்டாயம் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம்.” – ஹார்லூவ்லின், 28, ஒன்டாரியோ, கனடா

ஒரு வித்தியாசமான கொண்டாட்டம்

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic8

“ஆசிரமத்தில் நடைபெறும் கொண்டாட்டங்கள் அனைத்தும், நான் எனது ஊரில் கண்ட அனைத்து கொண்டாட்டங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டவை. கலாச்சார வேறுபாடு என்பது ஒரு முக்கியமான அம்சம் என்று நான் நினைக்கிறேன். மேற்கத்திய உலகில், நடைபெறும் எல்லா விழாக்களிலும் ஒவ்வொருவரும் தனிநபர்களாகவே நடந்து கொள்கிறார்கள். உணவுடன் எப்போதும் மதுவும் சேர்ந்தே பரிமாறப்பட வேண்டும். எல்லோரும் தங்கள் சிறிய குழுக்களில், தங்களுக்குத் தெரிந்தவர்களுடன் மட்டுமே சேர்ந்து இருப்பார்கள். 'இவர்களை எனக்குத் தெரியும், இவர்களுடன் நான் பேசுவேன், இவர்களுடன் மட்டுமே உறவாடுவேன், ஆனால் அவர்களுடன் பேசமாட்டேன்' என்றவரே இருக்கின்றனர். ஆனால் இங்கே ஆசிரமத்தில் அப்படி இல்லை. எல்லோரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக ஒன்றிணைந்து விழாவைக் கொண்டாடுகிறார்கள்” – பரன்

பௌர்ணமி இரவு இசை நிகழ்ச்சி

ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் ஆசிரமத்தில் மின்விளக்குகள் அணைக்கப்படுகின்றன. எனவே அனைவரும் வெளியே வந்து பௌர்ணமியின் இதமான குளிர் ஒளியில் நனையலாம். மேலும், ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும், லிங்கபைரவியின் பிரம்மாண்டமான மகாஆரத்தி நிகழ்ச்சி தியானலிங்கத்திற்கு எதிரே நடைபெறும். இதற்குப் பிறகு, ஈஷாவின் பிரத்யேகமான இசைக் குழுவினரின் மனங்கவர் இசை நிகழ்ச்சி கொண்டாட்டத்திற்கு உயிரளிக்கிறது.

சாதனா பாதை 2018ன். பங்கேற்பாளரான ஸ்டீவன் இந்த மாத விழாவில் தான் பெற்ற அழகிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்:

life-in-sadhanapada-do-spiritual-people-have-all-the-fun-ishablog-pic10

“சாதனா பாதைவின் போது, உண்மையில் பௌர்ணமி நாட்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும், வெளியில் உள்ள மைதானத்தில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து உணவு சாப்பிடுவோம், லிங்கபைரவி தேவியின் பிரம்மாண்டமான ஒரு ஊர்வலம் இருக்கும், அதில் ஒரு அற்புதமான அக்னி நடனமும் அடங்கும். அது மிக அருமையாக இருக்கும்!” – ஸ்டீவன், 22, ஜெர்மனி

வாழ்வை சீரியஸாக அணுகாமல், கொண்டாட்டமாக அணுகுவதற்கு கறுக்கொள்ளுதல்

சத்குரு: “நீங்கள் எல்லாவற்றையும் கொண்டாட்டம் என்ற வகையில் அணுகினால், முழு ஈடுபாட்டுடன் வாழ்ந்தாலும் வாழ்க்கையைப் பற்றி பற்றற்ற நிலையில் இருக்கக் கற்றுக்கொள்வீர்கள். இப்போது பெரும்பாலான மனிதர்களுடனான பிரச்சனை என்னவென்றால், ஏதாவது ஒன்றை முக்கியமானது என்று அவர்கள் நினைத்தால், அதை அவர்கள் மிகத் தீவிரமாக பற்றிக் கொள்கிறார்கள். இது அவ்வளவு முக்கியமானதல்ல என்று நினைத்தால், அவர்கள் அதைப் பற்றி அலட்சியமாக இருந்து விடுகிறார்கள் - தேவையான ஈடுபாட்டை அவர்கள் அதிலே காண்பதில்லை. நமது நாட்டில், ‘ஒருவர் மிகவும் சீரியசாக இருக்கிறார்’ என்று யாராவது சொன்னால், அவருடைய அடுத்த கட்டம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நிறைய பேர் இத்தகைய சீரியசான நிலையிலேயே உள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவமான ஒரே ஒரு விஷயம் மட்டும்தான் நிகழும். மீதமுள்ளவைகள் எல்லாம் அவர்களைக் கடந்து சென்றுவிடும். ஏனென்றால், அவர்கள் பற்றிக்கொண்டிருக்கும் விஷயங்களைத் தவிர, வேறு எதிலும் எந்த அளவிலும் ஈடுபாடோ அர்ப்பணிப்போ கொள்வதில்லை. அதுதான் பிரச்சனை”

அடுத்து வருவது…

ஆன்மீக சாதனை அதன் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ள இந்நேரம், பங்கேற்பாளர்கள் மிகவும் சீருடனும், சமநிலையுடனும் மாறி வருவதை நாம் கவனிக்கிறோம், இப்போது சாதனையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது!

ஆசிரியரின் குறிப்பு: சாதனா பாதை பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் அடுத்து வரவிருக்கும் சாதனா பாதை நிகழ்ச்சிக்காக முன்பே பதிவு .செய்துகொள்ளுங்கள்