32 நாடுகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், தங்கள் உள் வளர்ச்சிக்காக ஈஷா யோக மையத்தின் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலத்தில் 7 மாதங்கள் தங்கி இருக்கிறார்கள்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்…

அடுத்த ஆண்டு நீங்கள் 7 மாதங்கள் ஒரு ஆசிரமத்தில் வாழ இருக்கிறீர்கள் என்று 2018ம் ஆண்டின் பிற்பகுதியில் யாராவது உங்களிடம் கூறியிருந்தால், நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள்?

“வாய்ப்பே இல்லை! வங்கிக் கணக்கை உயர்த்துதல் மற்றும் எனது சமூக சூழலை மேம்படுத்துதல் போன்ற பல திட்டங்கள் என்னிடம் உள்ளன. நான் சரியான பாதையில் இப்போது சென்றுகொண்டு இருக்கிறேன், இதுபோன்ற எதற்கும் எனக்கு நேரம் இல்லை. நான் இன்னும் பணக்காரனாகவில்லையே.” - சிராக், 34, மகாராஷ்டிரா

"நான் கண்டிப்பாக சிரித்திருப்பேன் அல்லது புத்திசாலித்தனமாக ஏதாவது சொல்ல முயற்சித்திருப்பேன். அணுக முடியாத தொலைவில் உள்ள ஒன்றாகவே இதை நான் பார்த்திருப்பேன். எனக்கு வாழ்க்கையில் வேறுபல திட்டங்கள் இருந்தன, மேலும் ஞானமடைவதற்கான படி எடுப்பது என்பது எதிர்காலத்தில் எப்போதோ மேற்கொள்ளப்பட வேண்டிய குறிக்கோளாக இருந்தது.” - தனிஷ்க், 22, மேற்கு வங்கம்

"என் பதில், உங்கள் புத்தி பேதலித்து விட்டதா?' என்பதாக இருந்திருக்கும். ஆனாலும் மிகச் சரியான ஒரு இடத்தில் தங்கியிருந்து புத்துணர்வு பெறுவதுடன், புன்னகையுடனும் திறந்த மனத்துடனும் செயல்செய்து எனது தன்முனைப்பைக் குறைப்பதற்கான ஒரு தளமாக இதைக் கருதி, ஓர் ஒப்பற்ற பாக்கியமாகவே உணர்ந்திருப்பேன்." - பூனம், 23, மகாராஷ்டிரா

எதிர்காலத்திற்குத் திரும்புதல்

7 மாதங்கள் சாதனா பாதையின் ஓர் அங்கமாகத் தங்கி இருக்க முடிவு செய்வது பெரிய ஒரு பொறுப்பேற்றுக்கொள்ளுதல் ஆகும். பங்கேற்பாளர்களை இந்தப் பாதையை தேர்வு செய்ய எது வழிவகுத்திருக்கக்கூடும்?

isha-blog-article-Life-at-Sadhanapada-reflecting-on-2019-back-to-future

"நான் மஹாசிவராத்திரி - 2019ல் பங்கேற்றேன். அந்த நேரத்தில், சாதனா பாதை டி-ஷர்ட்டுகளை அணிந்த ஒரு சில தன்னார்வலர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வந்தனர். எதிலும் குறை காணும் என் மனம், 'உண்மையில் இந்த மாதிரியான நிகழ்ச்சிக்காக யாராவது 7 மாதங்கள் ஆசிரமத்தில் செலவிடுவார்களா? இவர்கள் புத்தி அற்றவர்களாக இருக்கவேண்டும் அல்லது இவர்கள் வாழ்க்கையில் செய்வதற்கு வேறு நல்ல விஷயங்கள் இல்லை போலும். முட்டாள்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்!’ என்றவாறு நினைத்தது. அடுத்த 3 மாதங்களில், நான் இங்கேயே வந்துவிட்டேன், இப்போது இங்கு வந்திருப்பது மிகப்பெரும் பாக்கியம் என உணர்கிறேன்.” - சதீஷ், 27, தெலுங்கானா

“நான் சாதனா பாதைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது மேகத்தில் மிதப்பதைப் போல உணர்ந்தேன். ஆனால், பதட்டமாகவும் இருந்தது. ஆசிரமத்திற்கு வருவது இதுவே என் முதல் தடவையாகும், வீட்டை விட்டு வெகுகாலம் பிரிந்திருப்பதும் இதுவே முதல் முறை. கண்ட கண்ட நொறுக்குத் தீனிகள் சாப்பிடாமல், ஒழுங்கு முறையான வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தினால், ஒரு மாதத்திற்குள்ளேயே நான் வீட்டிற்கு ஓடிவந்து விடுவேன் என்று என் அம்மா என்னிடம் பந்தயம் கட்டினார்கள். இப்போது ஐந்து மாதங்கள் ஆகிவிட்டன. என் அம்மா எனக்கு 2000 ரூபாய் தர வேண்டும்!” - கிருதி, 21, ஜார்க்கண்ட்

isha-blog-article-Life-at-Sadhanapada-reflecting-on-2019-back-to-future-1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“நான் மஹாசிவராத்திரி 2019 கொண்டாட்டங்களில் கலந்துகொண்டேன். அன்றிரவு முதல்முறையாக ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ கண்டபோது, பரவசமடைந்தேன். உள்நிலையில் ஏதோ ஒரு மாற்றம் உண்டானது, கண்கள் கலங்கின. இந்த இடத்துடன் இனம் புரியாததோர் வகையில் இணைந்திருப்பதை உணர்ந்தேன். அதை விளக்க முடியாது. அந்த நேரத்தில், ‘நான் இங்கே சில மாதங்கள் தங்கி இருக்க விரும்புகிறேன்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன், உடனடியாக சாதனா பாதைக்குப் பதிவு செய்தேன்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில், தியானலிங்க பிரதிஷ்டை நாளில் நான் ஆசிரமத்தில் இருந்தேன். நாள் முழுவதும் காலை 6 மணி முதல் தியானலிங்கத்திற்கு உள்ளேயே அமர்ந்திருந்தேன் - உட்கார்ந்து, தியானித்து, பல்வேறு ஆன்மீக மந்திரங்களைக் கேட்டு, மிகுந்த ஆற்றலை உணர்ந்தேன். மாலை 6 மணி வரை நான் சாப்பிடவில்லை, தண்ணீர் குடிக்கவில்லை, எவ்வித ஓய்வும் எடுக்கவில்லை.

எனது குடும்ப உறுப்பினர்கள் சமீபத்தில் ஆசிரமத்திற்கு வந்தனர். நாங்கள் ஒன்றாக தியானலிங்கத்திற்குச் சென்றோம், ஒரே இடத்தில் அசையாமல் அரை மணி நேரத்திற்கு மேல் என்னால் உட்கார முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை!”- மிதாலா, 41, மகாராஷ்டிரா

2019 – உண்மையான உள்நிலை மாற்றமா அல்லது உளவியல் மாற்றமா?

நிலைத்த, ஆழ்ந்த உள்நிலை மாற்றத்தை ஒவ்வொருவருக்குள்ளும் கொண்டுவருவதற்காகவே சாதனா பாதையின் சக்திவாய்ந்த செயல்முறைகள் சத்குருவால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை உண்மையிலேயே வேலை செய்தனவா? இங்கே சில பிரதிபலிப்புகளைக் காண்போம்.

isha-blog-article-Life-at-Sadhanapada-reflecting-on-2019-tranformation

"சேதமடைந்த டேப் ரெக்கார்டரைப் போல, எனது கடந்த கால விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசி என்னைச் சுற்றி இருப்பவர்களை சலிப்படையச் செய்து வந்தேன். ஆனால், இப்போது நான் அவ்வாறு இல்லை; என் நண்பர்கள் இப்போது என்னைப் பார்த்தால் நிச்சயமாக ஆச்சரியப்படுவதுடன் நிம்மதியடைவார்கள். எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாது, என் சொந்த இயல்பிலேயே நான் இப்போது மிகவும் ஆனந்தமாக இருக்கிறேன். மிகவும் நன்றியுள்ளவளாகவும், துடிப்பானவளாகவும் உணர்கிறேன். மேலும் ஒருவித அமைதி மற்றும் சமநிலை சார்ந்த உணர்வு மேலோங்கி உள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் மிகவும் மகிழ்ச்சியாகவே கடந்து செல்கிறது. மேலும், நானே என்னை பார்த்து சிரிக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். என் முகத்தில் இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப் புன்னகைக்காக, சாதனா பாதை நிகழ்ச்சி நடக்க உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.” - சுமதி, 35, கர்நாடகா

“சமீப காலமாகவே, எனது குடும்பத்தினரும் உறவினர்களும் நான் எவ்வளவு எளிதில் கோபப்படுகிறேன் என்பதை எனக்குச் சுட்டிக்காட்டி வந்தனர். நான் எனது கிரியாவை தவறாமல் செய்து கொண்டிருந்தேன், ஆனாலும் என் முன்கோபத்தை என்னால் முழுமையாகத் தணிக்க முடியவில்லை. நான் சாதனா பாதையில் இணைந்தேன். இந்தப் படி எடுப்பதை உண்மையில் என் அம்மா ஆதரிக்கவில்லை. தீபாவளியன்று, நான் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது, ஒரே ஒரு நாளுக்குள் வீட்டிற்கு சென்று ஆசிரமத்திற்குத் திரும்பினேன். என்னுள் வித்தியாசமான ஏதோ ஒன்றை என் அம்மா கவனித்தார்கள். எங்களுக்கு இடையிலான மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. எங்கள் தொலைபேசி உரையாடல்கள் நேர்மறையான விதத்தில் முடிவடையத் தொடங்கின. 7 நாள் ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். என் அம்மா ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன், ஏனென்றால், இந்த வகுப்புதான் எனக்குள் ஒரு ஆழமான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. வகுப்பில் கலந்து கொண்டபிறகு, ஓர் நாள் என் அம்மா "நமஸ்காரம்" என்று சொல்லி தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன், ஒரு மகனாக என்னுடைய இன்றியமையாத பொறுப்பை இப்போது நிறைவேற்றியதாக உணர்ந்தேன்.” - நவநீதமுத்து, 35, தமிழ்நாடு

"கடந்த ஐந்து மாதங்களில், எனக்குள் ஒரு கணம்கூட கோபமோ விரக்தியோ இல்லை. இது ஒரு முன்கோபியாக என்னை அடையாளம் கொண்டுள்ள எனது குடும்பத்தினரை கட்டாயம் ஆச்சரியப்படுத்தும்.” - ஜெயகணேஷ், 24, ஹைதராபாத்

"எனது குடும்பத்தினரும் நண்பர்களும் இப்போது என் நரைத்த கூந்தலைக் கண்டு அதிர்ச்சியடைவார்கள், நான் குளிர்ந்த நீரில் குளிக்கப் பழகிவிட்டேன், இது உண்மையில் நான்றாகவே உள்ளது... உண்மையில் இது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது! மேலும், தேவைப்படும் போது கனிவாக ஆனால் உறுதியாக ‘இல்லை’ என்று சொல்லக் கற்றுக்கொண்டேன் என்பதும் உண்மையே. பெரும்பாலான நேரங்களில் எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக நான் சூழ்நிலைகளுக்கு ஒத்தவாறு பொறுப்புடன் நடக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். வெறுமனே மக்களைப் பற்றிய கருத்துக்களை உருவாக்காது, அவர்களுக்குள் உள்ள சிறந்த விஷயங்களைக் காண வேண்டுமென்று முயற்சி செய்கிறேன்.” - பூனம், 53, மகாராஷ்டிரா

கொண்டாட்டங்களைக் கொண்டாடும் விதம்…

“2018ம் ஆண்டில், நான் எனது அறையில் அமர்ந்து வரவிருக்கும் புத்தாண்டுக்காக தியானம் செய்தேன். இந்த ஆண்டு நான் ஆசிரமத்தில் இருப்பதால், எனது விருப்பம் நிறைவேறியதாக உணர்கிறேன். 2019ம் ஆண்டில், இந்த மகத்தான சக்தி சூழலில் இருக்கும் ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டமான நாள்தான்!" – ஹர்ஷிதா, 26, லக்னோ

“2018-19ல், நான் எனது புத்தாண்டை மதுவுடன் (wine) கொண்டாடினேன். இந்த ஆண்டு தெய்வீகத்துடன் (divine) கொண்டாடுகிறேன்!” – கார்த்திகே, 25, ராஜஸ்தான்

“நான் இந்த முறை புத்தாண்டு தினத்தைக் கொண்டாட விரும்பவில்லை. ஒவ்வொரு நாளையும் ஒரு புத்தாண்டு தினமாகக் கொண்டாட, அளப்பரிய தெய்வீக ஆற்றல் என்னுள் பாய்ந்தெழ விரும்புகிறேன். நான் தினமும் செய்யும் பயிற்சிகள் என்னை அந்த நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.” - அபிநவ், 28, மும்பை

2020 - இனி எங்கே போக இருக்கிறோம்?

எதிர்வரும் ஆண்டின் அனைத்து சவால்களையும் சாத்தியங்களையும் எதிர்கொள்ள சாதனா பாதை திட்டம் பங்கேற்பாளர்களை எவ்வாறு தயார்படுத்தியுள்ளது? வரவிருக்கும் ஆண்டில் அவர்கள் என்ன செய்வதாக உள்ளனர்?

isha-blog-article-Life-at-Sadhanapada-reflecting-on-2019-where-do-we-go

“இந்த ஆண்டு எவ்வாறு தொடங்குகிறது என்பது முக்கியமல்ல, இந்த இடத்தில் இப்போது நான் இருக்கிறேன் என்பதே மிகவும் புத்துணர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது சராசரி உலக அனுபவத்திற்கெல்லாம் அப்பாற்பட்டது. காலை எழுந்ததும் புனிதமான வெள்ளியங்கிரி மலையைக் கண்டு, தியானலிங்கத்தை தரிசித்து, பயிற்சிகளை செய்வது என்பது எனக்கு ஒரு கனவு போல் தோன்றுகிறது. இதற்கு முன் நான் வாழ்க்கையை அணுகிய விதமும், இப்போது வாழ்க்கையை அனுபவிக்கும் விதமும் அடிப்படையிலேயே மாறுபட்டுள்ளன. நான் 6 ஆண்டுகளாக புகைப்பழக்கத்திற்கு அடிமையாய் இருந்தேன், இப்போது அதிலிருந்து விடுபட்டுள்ளேன். நான் ஒருபோதும் யோகா அல்லது உடற்பயிற்சி என எதையும் செய்ததில்லை, ஆனால் இப்போது நான் எனது எல்லா பயிற்சிகளையும் முறையாகத் தொடர்ந்து செய்ய உறுதி கொண்டுள்ளேன். அதனால் இப்போது நான் காலத்தில் பறந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது. நிச்சயமாக என் வாழ்க்கை ஒரு உயரிய இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.” - பிரஜ்வால், 22, உத்தரபிரதேசம் 

“எல்லாவற்றிற்கும் மேலாக - சமநிலை” என்று சத்குரு கூறுகிறார். பிறழாத சமநிலைதான் நான் வேண்டுவது. யோகத்தில் என்னை நிலைபெறச் செய்ய விரும்புகிறேன், அதன் பின்னரே தேவையான செயலைச் செய்ய விரும்புகிறேன். உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒருதுளியாவது ஆன்மீகத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சத்குருவின் கனவின் ஒரு அங்கமாக பணியாற்ற நான் விருப்பம் கொண்டுள்ளேன். நான் சரியான திசையில்தான் செல்கிறேன் என்பதை அறிவதில் ஆவல் கொண்டுள்ளேன். நான் யோகத்தை உணர்ந்தறிய விரும்புகிறேன். அதில் ஒன்றாய்க் கலந்திருக்க விரும்புகிறேன்.” - சிராக், 34, மகாராஷ்டிரா

“நான் சாதனா பாதைக்கு வந்ததிலிருந்தே, என்னை முழுக்க முழுக்க யோகப் பயிற்சிகளுக்கு அர்ப்பணித்தேன். அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி காலை 9:40 மணி வரை இரண்டு-மூன்று மாதங்கள் இடைவிடாது செய்தேன். எங்களுக்கு கொடுக்கப்பட்ட சேவைகளின் முக்கியத்துவத்தால், சாதனாவுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் சிறிது குறைக்கப்பட்டாலும், எனது அனுபவத்தில் பயிற்சியின் தீவிரம் அதிகரிக்கவே செய்தது. சம்யமா சாதனா வகுப்பில் கலந்துகொண்ட பிறகு, என்னுள் அமைதியும் கவனக்குவிப்பும் அதிகரித்துள்ளன. இப்போதெல்லாம் நாள் முழுவதும், ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வுடனும் உயிர்த்துடிப்புடனும் இருக்கிறேன். இந்த நிலையில்நான் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்படியாவது ஈஷா யோகா ஆசிரியப் பயிற்சி மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுப்பதுதான். உள்நிலை மாற்றத்திற்கான உன்னதமான இந்த வாய்ப்பை மற்ற பலருக்கும் வழங்க நான் விரும்புகிறேன்.”- உமேஷா கே, 27, கர்நாடகா

"வரவிருக்கும் ஆண்டுகளில், சத்குரு நமக்காக அருளியுள்ள அனைத்தையும் நாம் முழுமையாகப் பெற வேண்டும் என்பதே என் விருப்பம்." - பிரஜ்வால், 22, உத்தரப்பிரதேசம்

ஆசிரியரின் குறிப்பு: சாதனா பாதைக்கு பதிவு செய்வதற்கான வாய்ப்பு இப்போது திறக்கப்பட்டுள்ளது.