புதினாவில் சூப்பரா ஒரு சூப்!

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைக் கொண்டு சுவையான ஒரு சூப் செய்யும் ரெசிபி உங்களுக்காக!
 

புதினா மல்லி சூப்

தேவையான பொருட்கள்:

புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
இஞ்சி விழுது - 1 ஸ்பூன்
மிளகாய் - 1
பால் (அ) தேங்காய் பால் - 2 கப்
எலுமிச்சம் பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் - தேவையான அளவு
சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை: புதினா, கொத்தமல்லி தழைகளைச் சிறிதாக நறுக்கவும். எண்ணெயை காயவைத்து புதினா, மல்லித்தழை, இஞ்சி, மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பின் வடிகட்டி அரைக்கவும். அரைத்த விழுதை வடித்த நீருடன் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். காய்ச்சிய பாலில் சோளமாவினை சேர்த்து கரைத்து இதில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். அதில் எலுமிச்சம்பழச் சாறு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

மேலும் பல ஆரோக்கியமான சமையல் குறிப்பிற்க்கு ஈஷா ருசி பக்கத்தை பார்க்கவும்