மிளகு ரசம் வைப்பது எப்படி?
நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிளகு ரசம் மற்றும் தழை ரசம் ஆகிய சுவைமிக்க ரசங்களை எப்படி செய்வது, உங்களுக்குத் தெரியுமா...? இங்கே அதற்கான செய்முறையை தொடர்ந்து படித்தறியலாம்!
மிளகு ரசம்
தேவையான பொருட்கள்:
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
புளி – சிறிதளவு
தக்காளி – 1
மஞ்சள் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
Subscribe
மிளகு, சீரகம், மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதளவு நெய் விட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ள வேண்டும். புளியை கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் விட்டு கடுகு தாளித்து, புளி கரைசல், அரைத்த கரைசல், பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் பொடி, கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நுரை கட்டியவுடன் இறக்கிவிட வேண்டும். சுவையான மிளகு ரசம் ரெடி.
தழை ரசம்
தேவையான பொருட்கள்:
சீரகம், மிளகு, கொத்தமல்லி விதை, தூதுவளை, வேலிப்பருத்தி, வாதநாராயணன், கற்பூரவல்லி, துளசி, திருநீற்றுப்பச்சிலை, காசிதும்பை, கவிழ்தும்பை, வெற்றிலை, குப்பைமேனி, முசுமுசுக்கை
செய்முறை:
இந்த கீரைகளின் கொழுந்தினை மட்டும் பயன்படுத்தவும். இதில் முசுமுசுக்கையை கொஞ்சம் அதிகமா சேர்த்துக்கொள்ளலாம். (அதாவது முதலில் வரும் 4, 6 இலைகள் மட்டும். இதில் ஒன்று, இரண்டு இலைகள் இல்லையென்றாலும் பரவாயில்லை, இருப்பதை வைத்து செய்யலாம்.) இந்த இலைகளை தண்ணீரில் அலசி எடுத்து, நன்கு தண்ணீரை வடியவிடவும். பின்னர் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு லேசாக வதக்கவும். அதில் உப்பு சேர்த்து சிறிது வதக்கி எடுத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றை நல்லெண்ணெயில் வறுக்கவும். இதை வதக்கிய கீரையுடன் சேர்த்து அனைத்தையும் நன்கு விழுதாக அரைக்கவும். அதில் தேவையான அளவு நீர் விட்டு நுரை வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். (இதற்கு தக்காளி, தாளிதம் எதுவும் தேவையில்லை)
குறிப்பு: மிளகின் மருத்துவ குணங்கள் பற்றி உமையாள் பாட்டி வாயிலாக இந்தப் பதிவின் மூலம் அறியலாம்.