maranthayum-kondaada-seitha-shambavi-mahamudra-tamilblog-neelanarayanankrishnanimg

 நீலநாராயணன் கிருஷ்ணன், திண்டுக்கல்

அப்பா நாத்திகவாதி. அன்பும் அமைதியுமானவர். ஆனால் விவேகானந்தர் புத்தகங்களை அவ்வப்போது வாசித்துவிட்டு பிராணாயாமம் செய்து கொண்டிருப்பார்.

அது 2007 ஜனவரி 28, ஈஷாவில் சம்யமா வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரம். திண்டுக்கல்லிலும் ஷாம்பவி 7 நாள் வகுப்பு தொடங்கவிருந்தது. நான் அப்பாவை வகுப்புக்கு அழைத்தேன். அவர் என்னை கூர்ந்து நோக்கினார்.

‘‘பயிற்சியை விட்டுவிடாதே’’ அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை.

என்னடா வழக்கத்திற்கு மாறாக முகம் தெளிவாய் இருக்கே smoking, drinks எல்லாம் நிறுத்திட்டியா என்றார். நான் மெல்லியதாய் புன்னகைத்துக் கொண்டேன். அப்போது நான் தொடர்ந்து 2 மாதங்கள் சக்தி சலன கிரியா பயிற்சியில் இருந்த நேரம். பயிற்சி என்னை இந்த இரண்டு பழக்கங்களில் இருந்தும் முழுமையாய் ஒரு மாதம் விடுவித்திருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேலும், மிக அமைதியாகவும், வெகு நிதானமாகவும் உணரத் துவங்கியிருந்த நேரம் அது. அப்பா என் வேண்டுகோளுக்கு இணங்கி வகுப்பில் சேர்ந்திருந்தார். கிருஷ்ணகுமார் அண்ணாதான் ஆசிரியர், ஆசிரமத்தில் முழுநேர தன்னார்வத் தொண்டர் அவர்.

கடைசியாய் அவர் சொன்ன, எழுதிய வார்த்தை ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் என்பது மட்டுமே...

வகுப்பு அப்பாவுக்கு இதுவரை உணராத வித்தியாசமான ஆனந்த அனுபவமாய் இருந்தது. பந்தாஸ் (பயிற்சியின் ஒரு செயல்முறை) 5 நாட்களில் அவருக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. வகுப்பின் 5ம் நாள் எப்பேர்ப்பட்ட முரட்டு மனிதரும் முழுவதும் இளகி இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இளகிய தருணத்தில்தான் அப்பாவை நானும், என்னை அப்பாவும் ஊடுருவிப் பார்த்தது.

‘‘பயிற்சியை விட்டுவிடாதே’’ அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை. ஆம் பயிற்சியின் முடிவில் 7ம் நாள் தனது ஆனந்த அனுபவங்களை கண்களில் பொங்கிய ஆனந்த கண்ணீரோடு 15 நிமிடங்கள் 65 பேர் அடங்கிய வகுப்பில் பகிர்ந்துகொண்டார், எனக்கான நன்றியையும் சேர்த்து. பின் அமர்ந்தார், கண்களை மூடினார், அப்படியே சரிந்தார். மரணமென்றும் கூறலாம். ஆனால், நான் நிறைவென்பேன்... கடைசியாய் அவர் சொன்ன, எழுதிய வார்த்தை ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் என்பது மட்டுமே...

அப்பாவின் விருப்பப்படி அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரின் மரணம் எனக்கு சிறு துக்கத்தையோ அல்லது ஒரு துளி கண்ணீரையோ வரவழைக்கவில்லை, மாறாக கொண்டாட்டத்தை கொடுத்தது. ஆம், SoundsOfIsha இசையுடன் நான் கொண்டாடிக் களித்தேன்.

ஆம் வலியின்றி இம்சையின்றி அமர்ந்த நிலையில் ஒரு யோகியைப்போல் உடல் துறந்த ஒரு மனிதனின் மரணத்தை கொண்டாடாமல் விடுவது ஆகப்பெரிய தவறு....

சம்யமா வகுப்பில் இருந்த சத்குருவிற்கு அப்பாவின் மரணம் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்யமாவில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சொன்னார்... ஒரு மனிதன் கரைந்து போக தயாராய் இருந்தால் அவனுக்கு 7 நாட்கள் நடக்கும் ஷாம்பவியே போதுமானது... சம்யமா தேவையே இல்லையென்று...

நன்றி ஈஷா

குறிப்பு : அடுத்து வரும் ஷாம்பவி மஹாமுத்ரா - ஏழு நாள் ஈஷா யோகா வகுப்புகள் 

உங்கள் ஊரிலும், அருகாமையிலும் மட்டுமல்லாது உலகெங்கும் நடைபெறும் ஈஷா யோகா வகுப்புகள் பற்றிய விபரங்களைப் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.​