தினசரி அளவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் ஈஷா யோக மையம், தனது வளாகத்திற்குள் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ள எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

மையத்திற்குள் அனுமதிப்பதற்கு முன் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மையத்திலேயே வசிப்பவர்களுக்கும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கூறுகையில், “நான் உட்பட, ஈஷா யோகா வகுப்புகளை நடத்துவதற்கு தொடர்ந்து பயணம் செய்வோர் அனைவரின் பயணங்களும் ரத்துசெய்யப்பட்டு இங்கேயே இருக்கிறோம்” என்றார். மும்பையில் நடத்தவிருந்த இன்னர் எஞ்ஜினியரிங் வகுப்பு மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு ஏப்ரல் முதல் வாரத்தில் மேற்கொள்ளவிருந்த பயணம் உட்பட, அடுத்த சில வாரங்களில் தான் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிகளை சத்குரு ஒத்திவைத்துள்ளார். மையத்திலேயே வசிப்பவர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பயணத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அரசு ஆலோசனைகளின் அடிப்படையில், ஈஷா யோக மையத்திற்கு வரத் திட்டமிட்டிருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, ஈஷா அவர்களுக்கு அனுப்புகிறது. “கடந்த 28 நாட்களில், தொண்டை வலி, சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், தலைவலி, மூக்கு ஒழுகுதல் ஆகிய கோவிட்-19 நோய் அறிகுறிகள் இருந்தாலோ அல்லது மேற்கூறிய அறிகுறிகள் இருப்பவர்களுடன் நெருக்கமாக தொடர்பில் இருந்திருந்தாலோ” இங்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஈஷா யோக மையத்தில் அனைவரும் பொதுவாக பயன்படுத்தப்படும் இடங்கள் அனைத்திலும் கை சுத்திகரிப்பான் வைத்துள்ளதோடு, அனைவரும் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகளை அறிவுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, சுவாச ஆசாரத்தை உறுதிசெய்கிறது. ஈஷா யோக மையத்தில் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பிற செயல்களில் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈஷா யோக மையத்தின் எல்லையில் இருக்கும் 112-அடி ஆதியோகியைக் காண வருவோருக்கும் கை சுத்திகரிப்பான் வழங்கப்படுவதோடு, மையத்தில் பின்பற்றப்படும் அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்படுகிறது.

அனைவரையும் விழிப்பாக இருக்கும்படி அறிவுறுத்திய சத்குரு, எவரிடமும் சளி அறிகுறிகள் எதையும் கண்டால், உடனே மையத்திலுள்ள சிகிச்சையகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் மனிதர்கள் வழியாகப் பரவுவதால், நாம் ஒவ்வொருவரும் இதை எவருக்கும் பரப்பாமல் பார்த்துக்கொள்ள பொறுப்பேற்பது முக்கியம் என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், “நீங்கள் இந்த உறுதிமொழியை ஏற்கவேண்டும்: நீங்கள் இன்னொரு மனிதருக்கு இதைக் கொடுப்பதற்கான காரணமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

உலக சுகாதார நிறுவனம், கோவிட்-19 நோயை, உலகெங்கும் பரவலாகப் பரவும் நோய்த்தொற்றாக அறிவித்துள்ளது. நோயின் மையப்புள்ளியாக விளங்கிய சீனாவின் வுஹான் நகரம், மக்கள் வந்துசெல்வதைத் தடைசெய்த முதலாவது நகரங்களில் ஒன்றாகும். ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 2 பேர் இறந்துள்ளனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.