"இப்படியொரு பள்ளியை பார்த்ததே இல்லை" - மத்திய அமைச்சர் ஆச்சரியம்!

மத்திய தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்யவர்தன் ராத்தோர் அவர்கள் கிராமோத்சவ கொண்டாட்டத்திற்கு பிறகு ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்தார். அவர் பார்த்தவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...
"இப்படியொரு பள்ளியை பார்த்ததே இல்லை" - மத்திய அமைச்சர் ஆச்சரியம்!, Ippadiyoru palliyai parthathe illai - mathiya amaichar acharyam
 

மத்திய தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்யவர்தன் ராத்தோர் அவர்கள் கிராமோத்சவ கொண்டாட்டத்திற்கு பிறகு ஈஷா யோக மையத்திற்கு வந்திருந்தார். அவர் பார்த்தவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...

மாண்புமிகு ராஜ்யவர்தன் ராத்தோர்:

கோவைக்கு நான் செய்யும் முதல் பயணமிது. ஈஷா யோக மையத்திற்கும் இதுவே எனது முதல் வருகை. சத்குரு சிறந்த பணிகளைத்தான் செய்வார் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த மையத்திற்கு வந்தேன். ஆனால், இங்கு நடக்கும் செயல்களைப் பார்த்தபின், இவற்றை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பிரம்மிப்பாக இருக்கிறது.

ஈஷா யோக மையத்தில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும், அவர்கள் அதைச் செய்யும் விதமும், இங்குள்ள சூழலும், இவ்விடத்தின் தோற்றமும் இவ்வுலகத்தை சேர்ந்ததாய் எனக்கு தெரியவில்லை. அத்தனை அற்புதமாய் இருக்கிறது. அமைதியாக இருக்கிறது. பரபரபின்றி சாந்தமாய் இருக்கிறது. அத்தனை மேன்மை, தனித்தன்மையுடன் இம்மையம் இருக்கிறது.

ஈஷா ஹோம் ஸ்கூலிலுள்ள மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் கல்வி கற்கும் சூழ்நிலை அவர்களை பரிபூரண மனிதர்களாய் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அறிவுத்தாகம் கொண்டவர்களாக மாணவர்களை மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்திய கலாச்சார பாணியில் இக்குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்குள் மனிதம் ததும்பிக் கொண்டிருக்கிறது.

ஈஷா சம்ஸ்கிருதி பாடசாலையையும் பார்க்கச் சென்றிருந்தேன். தனிகுணம் உடையதாய், தனித்துவம் வாய்ந்ததாய் இந்தப் பாடசாலை இருக்கிறது. இதுபோன்றதொரு பள்ளியை இதுவரை நான் பார்த்ததே இல்லை. பலவிதமான கலை வடிவங்களில் குழந்தைகள் கற்றுத் தேருவதற்கான வாய்ப்பினை குழந்தைகளுக்கு சம்ஸ்கிருதி ஏற்படுத்தித் தருகிறது. உறுதியான ஒரு சிலரால் இந்தக் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். 7 வயதிலிருந்து பல்வேறு கலைகளில் இக்குழந்தைகள் மெல்ல மெல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். நம் நாட்டில், தனிச்சிறப்பு வாய்ந்த திறமைகளின் சோலையாக இவர்கள் இருக்கப் போகிறார்கள்.

கலைத்திறன் சார்ந்த கல்விக்கு தனிப் பள்ளி துவங்கியது தொலைநோக்கு பார்வையுடைய அற்புதமான கருத்து.

ஈஷா யோக மையத்தில் இருக்கும் தியானலிங்கம் அற்புதம். நான் புனித குளியல் செய்த தீர்த்தகுண்டமும் அற்புதம். இந்த இடத்திலுள்ள ஒவ்வொன்றும் முறையாக காரண அறிவுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்விடத்திற்கு வந்ததில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த இடத்திற்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

சத்குரு அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் உருவாக்கி இருக்கும் அனைத்திற்காகவும் என்னுடைய வாழ்த்துகள். சத்குருவுடன் இணைந்து, முழு ஈடுபாட்டுடன் பணிசெய்யும் அத்தனை துறவிகளுக்கும் வாழ்த்துகள். அவர்கள் செய்யும் பணி அனைத்தும் சிறக்க, நல்ல அதிர்ஷ்டம் கைகூடி வர வாழ்த்துகிறேன். இவர்கள் செய்துவரும் பணிகள் யாவும் மிக மிக முக்கியமானது.