மதுரை இராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் திரு.சிவபிரகாசம் அவர்கள், ஈஷா யோகா வகுப்பிற்குப் பின் தன்னை நெடு நாட்களாக வாட்டி வதைத்த ஆர்த்தரிடிஸிலிருந்து எப்படி விடுப்பட்டார் என்பதையும், அதன் பின் சிவாங்கா விரதமிருந்து வெள்ளியங்கிரி மலை ஏறிய அதிசயத்தையும் இங்கே மெய்சிலிர்க்க நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...

டாக்டர் சிவபிரகாசம்,

மயக்கவியல் நிபுணர், மதுரை இராஜாஜி மருத்துவமனை

'ஆர்த்தரிட்டிஸ்' ன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? நான் ஒரு டாக்டர் என்ற முறையில் புத்தகத்தில் படித்து அந்த நோய் குறித்த தகவல்களை அறிந்திருந்தேன். உண்மையாவே அது வந்த பின்தான் மூட்டுன்னு ஒரு பாகம் என் உடம்பில் இருக்கிறது என்று என் அனுபவத்தில் உணர்ந்தேன்; ஒரு இஞ்ச் கூட அசைய முடியாது; அப்படியே படுத்திருக்கணும். படுத்தா பயங்கரமா வலிக்கும். இயற்கை உபாதைகளுக்குக்கூட எழுந்து போகமுடியாது. அவ்வளவு கடுமையான வலி இருக்கும். மாத்திரை போடாம இருக்கமுடியாது. டெய்லி மாத்திரை, மருந்து சாப்பிட்டு, சாப்பிட்டு உடலளவில் மிகவும் அவதிப்பட்டேன்.

நமக்கு உள்ளே இருந்து வரும் நோய்களுக்கு காரணமும் தீர்வும் நமக்குள்ளேதான் இருக்கிறது என்ற சத்குருவின் வார்த்தைகள் என் வாழ்வில் அப்போது நிஜமாகிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன்.

அந்தக் கொடுமையான சமயத்தில் தான் ஒரு நண்பர் மூலமாக ஈஷாவைப் பத்தி கேள்விப்பட்டேன். அவர் ஈஷா வாலண்டியர். ஈஷாவப் பத்தி நிறைய சொன்னார். அப்புறம் ஒரு வழியா என்ன சம்மதிக்க வச்சு 2013 ஜூலையில் ஆதியோகி ஆலயத்தில் நடந்த சத்குருவோட 3 நாள் யோகா வகுப்புக்கு கூட்டிட்டு போயிட்டார். ஆனால், ‘வகுப்பில் எப்படி உட்காரப்போறோம்?’ என்ற சந்தேகம் எனக்கு இருந்துகிட்டே இருந்துச்சு. அதுவரைக்கும் என்னால கொஞ்சநேரம் கூட உட்காரவும் முடியாது, நிக்கவும் முடியாது.

ஈஷா நண்பரின் அறிவுறுத்தலின்படி சில நாட்களாக தினமும் மூச்சுப்பயிற்சி செய்துவந்தேன். அதோடு சில உடற்பயிற்சியும் பண்ணினேன். அந்தப் பயிற்சிகளால் ஏதோ 3 நாட்கள் உட்கார்ந்து சமாளிச்சுட்டேன்.

சத்குரு ஷாம்பவி மஹாமுத்ரா என்னும் அற்புதப் பயிற்சியை அந்த 3 நாட்களில் கற்றுக் கொடுத்தாங்க.” இந்த ஷாம்பவியை அடுத்த 40 நாட்கள் காலையும் மாலையும் இரண்டு வேளை கட்டாயம் பண்ணணும்; அதற்கடுத்து குறைந்தது ஒரு முறையாவது விடாமல் பண்ணணும்னு” சத்குரு சொன்ன அந்த வார்த்தைகள் என் காதில் தினமும் ஒலிச்சுது. ஒருநாள் கூட தவறாமல் தொடர்ந்து பயிற்சி செய்தேன். முதல் 20 நாட்களிலேயே மருந்து மாத்திரையின் தேவையில்லாமல் இயல்பாக நடக்கும் அளவிற்கு வந்துவிட்டேன். நான் ஒரு டாக்டர் என்பதால் இதை நம்புவது எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

என்னிடம் வரும் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் எழுதித் தருவேன். சீக்கிரமா சரியாகிவிடும் என்று நம்பிக்கை வார்த்தைக் கூறுவேன். பிசியோதெரபி போன்ற வேறு வகை மருத்துவமுறைக்குக் கூட பரிந்துரைப்பேன். ஆனால், இந்த ஒரு கோணத்தில் நான் இதுவரைக்கும் யோசித்ததில்லை. நமக்கு உள்ளே இருந்து வரும் நோய்களுக்கு காரணமும் தீர்வும் நமக்குள்ளேதான் இருக்கிறது என்ற சத்குருவின் வார்த்தைகள் என் வாழ்வில் அப்போது நிஜமாகிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். தொடர்ந்து ஒரு நாள் கூட விடாமல் பயிற்சியைத் தொடர்ந்தேன்.

அதற்கடுத்த மாதம், சிவாங்கா எனும் சாதனாவை சத்குரு வழங்குவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், ‘என்னால் வெள்ளியங்கிரி மலையேற முடியுமா?’ என்ற கேள்வி பெரிய தடையாய் என் முன்னே இருந்தது. ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சில பேரிடம் தொலைபேசியில் பேசினேன். என்னால் விரத நடைமுறைகளைக் கடைபிடித்து மலையேற முடியுமா என்ற என் தயக்கத்தை அவர்களிடம் கூறினேன். ‘நீங்க கவலைப்படாம மாலை போடுங்க. மத்ததெல்லாம் சத்குரு பாத்துப்பாங்க’ என்று அவர்கள் நம்பிக்கை அளித்தனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

arthritisilirunthu-shivanga-varai-1

அந்த 42 நாட்கள் விரதத்தில் ‘சிவ நமஸ்காரம்‘ என்கிற அற்புதப் பயிற்சியை சத்குரு வழங்கியிருந்தார். என்னால் அதை முழுமையாகச் செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அந்த விரத நாட்களில் காலையில் சத்குருவின் வழிகாட்டுதலின்படி தேனில் ஊற வைத்த வில்வ இலைகள் மற்றும் மிளகுகளை சாப்பிட்டேன். அவை உடலில் ஒருவித உறுதியை அளித்தன. ‘சிவநமஸ்காரம்‘ தொடர்ந்து செய்தேன். அப்போதே நாம் மலையேறி விடுவோம் என்கின்ற நம்பிக்கை வந்துவிட்டது. அந்த அளவிற்கு அந்தப் பயிற்சி எனக்கு சக்தியையும் உறுதியையும் தந்தது. வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு முன்பே எங்க ஊருகிட்ட இருக்கிற சதுரகிரி மலைக்குப் பயணமானேன். அந்த மலையை நான் வெகு எளிதாக ஏறி இறங்கினேன். 2013 அக்டோபர் 3ஆம் தேதி அமாவாசையன்று வெள்ளியங்கிரி மலையேறினேன். அந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது. நான் மூட்டு வலியில் அவதிப்பட்டதைப் பக்கத்திலிருந்து பார்த்தவர்கள் அப்போது என்னுடன் பயணித்திருந்தால் அதிர்ச்சியில் மூர்ச்சையாகியிருப்பார்கள். எனக்கு மலையேற்றம் அவ்வளவு எளிதாக இருந்தது.

என் அனுபவத்தின் மூலம் நான் சொல்ல நினைப்பது இதுதான். நீங்கள் ஷாம்பவியைக் கற்றுக் கொள்வதற்கும் சிவாங்கா விரதமிருப்பதற்கும் நோய்வாய்ப் பட்டிருக்கத் தேவையில்லை. வாழ்க்கையை முழுமையாய் வாழ வேண்டும் என்கிற ஆர்வமிருந்தால் போதும்.

சிவாங்கா தீட்சை தகவல்கள்:

  • ஆண்களுக்கான சிவாங்கா சாதனா, 42 நாட்கள் விரதத்தை உள்ளடக்கியது. இதற்கான தீட்சை, வரும் பௌர்ணமி நாளான ஜனவரி 10, 2020 அன்று வழங்கப்பட உள்ளது.
  • அவரவர் ஊர்களில் சிவாங்கா தீட்சையை சாதகர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
  • 42வது நாளான மஹாசிவராத்திரியன்று (பிப்ரவரி 21), வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தியானலிங்கத்தை தரிசித்து அர்ச்சனைகளைச் செய்தபின் வெள்ளியங்கிரி யாத்திரையும் உண்டு.
  • மஹாசிவராத்திரியன்று சத்குருவின் சத்சங்கத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

சிவனருள் பெற மஹாசிவராத்திரியன்று தென் கைலாய தரிசனம் செய்வோம்!

ஆண்களுக்கான சிவாங்கா சாதனா, இருப்பின் அடிப்படை மூலமான ஷிவா அல்லது ஒன்றுமில்லாத தன்மையுடனான ஒருவரின் விழிப்புணர்வு தொடர்பை அதிகரிக்கும் ஒரு சக்திவாய்ந்த 42-நாள் சாதனாவாகும்.

2020 ஜனவரி 10 அன்று உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் தீட்சை வழங்கப்பட உள்ளது. 2020 பிப்ரவரி 21, மஹாசிவராத்திரியன்று ஈஷா யோக மையத்தில் சாதனா நிறைவுறுகிறது.

மேலும் தகவல்களுக்கு, தொடர்புகொள்ளவும் +91 8300083111 or email info@shivanga.org or visit www.shivanga.org.

பதிவுசெய்ய