ஆளி விதை செய்யும் அற்புதங்கள்!
உமையாள் பாட்டி இம்முறை ஆளி விதையினால் (Flax seed) விளையும் நன்மைகளையும் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் அக்கறையுடன் எடுத்துரைக்கிறாள். ஆளி விதை பற்றி பாட்டி கூறும் தகவல்களைக் கேட்ட பிறகு, அது அன்றாடம் நமது பயன்பாட்டில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை!
 
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 7

உமையாள் பாட்டி இம்முறை ஆளி விதையினால் (Flax seed) விளையும் நன்மைகளையும் அதனை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் அக்கறையுடன் எடுத்துரைக்கிறாள். ஆளி விதை பற்றி பாட்டி கூறும் தகவல்களைக் கேட்ட பிறகு, அது அன்றாடம் நமது பயன்பாட்டில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை!

"அடடே...! இந்த கருப்புக் கண்ணாடியில நீ அப்படியே ஹீரோ மாதிரி இருக்குறய்யா..!" எனது கூலிங் க்ளாஸைப் பார்த்து உமையாள் பாட்டி நையாண்டி பேசி சிரித்தாள்.

நம்ம உடல்ல கண்ணு மட்டுமில்ல, ஒவ்வொரு பாகமும் முக்கியமானதுதான். ஏதாவது பிரச்சனை வரும்போதுதான் நாம அதப்பத்தி யோசிக்கிறோம்.

"பாட்டி... பாத்தீங்களா நீங்க கூட என்ன கிண்டல் பண்றீங்க?! எனக்கு ஐ இன்ஃபெக்ஷன் பாட்டி" நான் என் கண்ணாடியை சரிசெய்தவாறே பாட்டியைப் பார்த்து பரிதாபமாகக் கூறினேன்.

"ஏய்யா இன்ஃபெக்ஷன் வர்ற அளவுக்கு கண்ணுல என்னாச்சு...?" பாட்டி எதையோ அஞ்சறைப் பெட்டியில் தேடியவாறே என்னிடம் கேட்டாள்.

"தெரியல பாட்டி...! ரெண்டு நாளா கண்ணு சிகப்பா இருக்கு. கண் எரிச்சல் வேற!"

"ம்... சரி டாக்டரப் போயி பார்க்க வேண்டியதுதானே?!" கேட்டுக் கொண்டே அங்கிருந்த அம்மியை நோக்கி சென்று எதையோ நுணுக்கினாள்.

"நேத்துதான் பாட்டி டாக்டர் கிட்ட போனேன். ஒரு சொட்டு மருந்து குடுத்தாரு. இப்போ கொஞ்சம் தேவலாம். ஆனா இன்னும் கண் எரிச்சல் கொஞ்சம் இருக்கு. சிவப்பு நிறம் இன்னும் மாறாம இருக்கு."

"நைட்டு முழுக்க தூங்காம டிவி பாக்குறது; செல்ஃபோன்ல கேம் விளையாடுறது; காலைல எழுந்த உடனே கண்கள நல்லா கழுவாம விடுறதுனு கண்களப் பத்தி கவனமில்லாம இந்தக் கால இளைஞர்கள் அஜாக்கிரதையா இருக்குறீங்க. ஒரு பிரச்சன வரும்போதுதான் அதுக்கு கவனம் குடுக்குறீங்க."

இந்த உமையாள் பாட்டியினால் எப்படி இவ்வளவு சரியாக நவீன இளைஞர்களைப் புரிந்து வைத்திருக்க முடிகிறது என வியப்பாக இருந்தது.

"நம்ம உடல்ல இந்த கண்கள் எவ்வளவு முக்கியமான விஷயம்னு இப்போதான் புரியுது பாட்டி!" என் கவனமின்மையை உணர்ந்தவனாய் பாட்டியிடம் கூறினேன்.

"நம்ம உடல்ல கண்ணு மட்டுமில்ல, ஒவ்வொரு பாகமும் முக்கியமானதுதான். ஏதாவது பிரச்சனை வரும்போதுதான் நாம அதப்பத்தி யோசிக்கிறோம். சரி... சரி... நான் ஒரு வைத்தியம் சொல்றேன் கேட்டுக்கிறயா?!"

"என்ன பாட்டி இப்படி சொல்றீங்க?! அதுக்காகத்தானே இவ்வளவு தூரம் வந்திருக்கேன், சொல்லுங்க!"

"ஆளி விதையை பொடியாக்கி சுத்தமான தண்ணியில ஊறவைச்சா அது குழம்பாகிடும். அப்புறம், அத வடிச்சு எடுத்து கண்ணில விட்டோம்னா கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிடும்! அப்புறம்... ஆளி விதைய தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே எடுத்து தினமும் சாப்பிடலாம். அது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது! "

"ஆளி விதைய எங்க போய் தேடுறது பாட்டி?!"

"நீ நாட்டு மருந்துக் கடைல கேட்டன்னா குடுப்பாங்க. ஈஷா ஆரோக்கியா மருத்துவமனை தெரியுமா உனக்கு?!"

"ஆமா பாட்டி! கோயமுத்தூர்ல பீளமேட்டுல இருக்குது பாட்டி."

"ஆங் அங்க கூட நீ போய் வாங்கிக்கலாம்"

"சரி பாட்டி நான் வாங்கிட்டு அப்படியே வீட்டுக்குப் போறேன்." பாட்டியிடம் சொல்லிவிட்டு ஆளி விதை வாங்க விரைந்தேன்.

குறிப்பு:

- ஆளி விதையைப் பொடித்து, சுத்தமான நீரில் ஊறவைக்க குழம்பாகும். அதை வடித்து பிசைந்து எடுத்து கண்ணிலிட கண் சிகப்பு, கண் அரிப்பு, கண் எரிச்சல் மாறும்.

- இதன் ஊறல் குடிநீர் (1 பங்கிற்கு - 32 பங்கு குடிநீர்) ஈளை, இருமல், சிறுநீர் எரிச்சல், நீரடைப்பு, வெள்ளை தீர்க்கும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
 
 
Login / to join the conversation1
 
 
3 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

"- ஆளி விதையைப் பொடித்து, சுத்தமான நீரில் ஊறவைக்க குழம்பாகும். அதை வடித்து பிசைந்து எடுத்து கண்ணிலிட கண் சிகப்பு, கண் அரிப்பு, கண் எரிச்சல் மாறும்."- So we should keep the eye closed & then we have to apply that paste on "Eyelid", Am I right?

2 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்

Here its said that the flax seeds csn be consumed aftet soaking...can seeds be consumed as it is or roasted??

2 வருடங்கள் 7 மாதங்கள் க்கு முன்னர்

This is one of the magazines content and would like to know whether it is true??

1 வருடம் 6 மாதங்கள் க்கு முன்னர்

ஆளி விதையை பொடியாக்கி தினமும் உணவில் சிறிதளவு சேர்த்துக்கொண்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்

1 வருடம் 4 மாதங்கள் க்கு முன்னர்

Can I use this for eye pressure? Anyone has any experience using it?