Youth and Truth' எனும் இந்த தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியாவின் இன்றைய இளைஞர்களிடத்தில் தெளிவையும் புரிதலையும் கொண்டுவரும் விதமாக, மாதம் முழுவதற்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பலவித குறிப்பிடத்தகுந்த கல்வி நிறுவனங்களுக்கு சத்குரு நேரடியாக பயணித்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். அடுத்த நிகழ்ச்சி சென்னை CEGல் நேற்றைய தினம் (செப்டம்பர் 10) வெகு சிறப்பாக நடைபெற்றது.

இளமை எனும் வசந்தகாலம்…

ஒரு மனிதனின் வாழ்வில் இளமைப் பருவம் என்பது வாழ்வின் உயிரோட்டம் மிக்க முக்கியமான ஒரு காலமாகும்.

திருமந்திரப் பாடலில் திருமூலர் சொல்லும்போது,

தேய்ந்தற் றொழிந்த இளமை கடைமுறை
ஆய்ந்தற்ற பின்னை அரிய கருமங்கள்

என்கிறார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சிறிது சிறிதாக கடந்து போகக்கூடிய இளமைக் காலத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், முதுமையில் செயற்கரிய செயல்கள் எதுவும் செய்வதற்கு வாய்ப்பில்லை என்பதே இதன் பொருளாகும்.

பொதுவாக, எந்தவொன்றையும் ஆச்சரியத்துடனும் கேள்வி கேட்கும் மனப்பான்மையுடனும் அணுகக்கூடிய இளைஞர்கள், தங்களுக்குள் விடை தெரியாமல் தகித்துக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான விடையை யாரிடம் கேட்பது என்பது புரியாமல் தவிப்பதைப் பார்க்கலாம். வாழ்வின் லட்சியங்கள், வெற்றிக்கான சரியான பாதை, கனவை நிஜமாக்கும் வழி, தோல்வி குறித்த அச்சம், உணர்வுப்பூர்வமான தன்மைகள் மற்றும் தர்க்கம் செய்யும் பகுத்தறிவு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பல்லாயிரம் கேள்விகள் இன்னும் விடைதெரியாமல் தொடர்ந்து உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும்.

இளைஞர்களுக்கு உடலளவில் புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் இருக்கும் போதிலும், இலக்கினை எட்டுவதற்கு சரியான பாதை எது என்பதை சுட்டிக்காட்ட சரியான வழிகாட்டுதல் இல்லை என்றால், அது விழலுக்கு இறைத்த நீராகிப் போய்விடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Youth And Truth எனும் சத்குருவின் இந்தப் புதிய முன்னெடுப்பின் மூலம், இளைஞரும் உண்மையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இன்றைய இளைஞர்கள் தங்களது முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வரும்வகையில், அவர்களிடத்திலிருக்கும் தயக்கத்தை தகர்த்து, விடை தெரியாமல் இருக்கும் பல்வேறு தகிக்கும் கேள்விகளுக்கு சத்குரு நேரடியாக பதிலளிக்கிறார். இன்றைய இளைஞர்கள் மத்தியில் புரிதலையும், சமநிலையையும் கொண்டுவருவதற்காக சத்குருவினால் துவங்கப்பட்டுள்ளது இவ்வியக்கம்.

நிகழ்ச்சி துவங்கும் முந்தைய தருணங்கள்…

cbe-y&t-preparation-collagepic1நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக அங்கு கூடியிருந்த மாணவர்களிடம் அவர்களின் மனநிலை குறித்து கேட்டபோது, சத்குருவை நேரடியாகப் பார்த்து அவரின் பேச்சைக் கேட்பதற்கு தாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக பலர் தெரிவித்தனர். அவர்களில் சிலர் சத்குருவை யூட்யூபிலும் தொலைக்காட்சி வழியாகவும் பரிட்சயமாகி இருந்தனர்.

சத்குருவைப் பற்றி பிறர் சொல்வதை கேள்விப்பட்ட நிலையில் மட்டுமே சிலர் இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவருமே நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெரும் ஆர்வத்துடன் காணப்பட்டனர். அங்கு வருகைதந்திருந்த பல்வேறு தரப்பட்ட மாணவ குழுக்களும் இந்நிகழ்ச்சி எதைப் பற்றியது என்பதை முதலில் தெரிந்திருக்கவில்லை. இந்நிகழ்ச்சி சத்குருவின் தனிப்பட்ட உரையாடலைப் போல அமையும் என்றுகூட சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், நாம் அந்த மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியின் தனித்தன்மை குறித்து விளக்கியபோது அவர்கள் உடனடியாக கூடுதல் உற்சாகமடைந்தனர். சத்குருவிடம் கேட்டுத் தெளிவு பெற தங்களிடம் பல்வேறு கேள்விகள் காத்துக்கொண்டிருப்பதை அவர்கள் உறுதிசெய்தனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்திற்குள் நிகழ்ந்த காட்சியை அடுத்ததாக விவரிக்கிறோம். ஆம்… அங்கே சத்குரு வருவதற்கு முன்பாக அரங்கத்திற்குள் காத்திருந்த மாணவர்கள் மத்தியில் வழக்கமான கேளிக்கை அரட்டைகளைக் காணமுடிந்தது. ஆனால், சத்குரு அரங்கத்திற்குள் நுழைந்தவுடன் அங்கே ஒரு ஆழமான நிசப்தம் நிலவியது. அங்கே கூடியிருந்த மாணவர்கள், எவரும் எதிர்பாராத வகையில் தாங்களாகவே எழுந்து நின்று தங்களது சிறப்பு விருந்தினரான சத்குருவிற்கு மரியாதை செலுத்தியது ஆச்சரியம் தருவதாக அமைந்தது.

நிகழ்ச்சிக்குள் நுழைவதற்கு முன்பாக ஒருசில வீடியோ பதிவுகள் அங்கு வைக்கப்பட்டிருந்த திரையில் மாணவர்களுக்காக ஒளிபரப்பப்பட்டன. ஒவ்வொரு முறையும் Youth & Truth முன்னெடுப்பு குறித்த வீடியோ ஒளிபரப்பப்படும்போதும் மாணவர்களின் கவனம் குறிப்பிடத்தகுந்த வகையில் மாற்றம் பெறுவதை கண்கூடாக பார்க்க முடிந்தது.

கேள்விகளால் ஒரு வேள்வி துவங்கிய நேரம்…

cbesgonstagepic

நிகழ்ச்சி துவங்கியதும் மாணவர்கள் குழு மேடையேறி சத்குருவிடம் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் துவங்கியது. அவர்களின் முதல் கேள்வி மன அழுத்தத்தை கையாள்வது குறித்ததாக இருந்தது. அந்தக் கேள்வி கேட்ட மாணவர் பேசும்போது, தனது நண்பர்களிடம் சத்குருவிடம் என்ன கேள்வி கேட்கலாம் என ஆலோசித்தபோது பலரும் மன அழுத்தத்தைக் கையாள்வது குறித்த கேள்வியை பரிந்துரைத்ததாக தெரிவித்தார். இந்தக் கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில் எது நமக்கு தேவையில்லையோ அதனை நாம் கையாள்வது தேவையில்லாதது என்பதைப் புரிய வைத்தார். அதனை முற்றிலும் தவிர்ப்பதுதான் தீர்வு என்பதையும் விரிவாக பதிலளித்து உணர்த்தினார்.

மேலும் தொடர்ந்து பலவித கேள்விகள் கேட்கப்பட்டபோது, கற்பழிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்பட வேண்டும், அறியாமை என்பதே உன்னதமென்றால் மக்கள் ஏன் அறிவைத் தேடுகிறார்கள், முறைதவறிய உறவுநிலைகள், உள்நிலையில் அச்சுறுத்தும் சாத்தான்களை கையாள்வது எப்படி போன்ற குறிப்பிடத்தகுந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

சமூக ஊடகங்கள் வழியாக சில கேள்விகள்!

அந்த மாணவர் குழு அதன் பிறகு சமூகவலைதளங்களில் அதிக வாக்குகளைப் பெற்ற கேள்விகளை சத்குருவிடம் படித்துக் காண்பித்தனர். புதிய நபர்களை சந்திக்கும்போது உண்டாகும் அச்ச உணர்வை எப்படி கையாள்வது, சமூகவலைதளங்களில் தற்போது பொய்யான தகவல்கள் பரப்பப்படும் மனநிலையை மாற்றுவதற்கு இளைஞர்கள் செய்யவேண்டியது என்ன, சோம்பேறித்தனத்தையும் காலம் தாழ்த்துவதையும் விட்டொழிப்பதற்கு செய்யவேண்டியது என்ன போன்ற பல்வேறு குறிப்பிடத்தகுந்த கேள்விகளை சத்குருவிடம் மாணவர்கள் கேட்டனர்.

பார்வையாளர்கள் மத்தியில் இருந்து தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்!

youthandtruth-tnau-cbe-tamilblog-subjectpic

சமூக ஊடகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விக்கான நேரம் முடிந்த பின்னர், பார்வையாளர்கள் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஒரு இளம் மாணவி எழுந்து நின்று கேட்ட ஒரு கேள்வி, பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாத வகையில் சத்குரு பெற்றுள்ள வெற்றிக்கான ரகசியம் என்ன என்று சத்குருவிடம் அவர் கேட்டார். இன்னொரு மாணவி எழுந்து “Sadhguru, my love…” என்று சொல்லி தனது கேள்வியை ஆரம்பிக்க அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது!

cbe-y&t-questions-collagepic

பார்வையாளர்கள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவ்வளவாக எதிர்வினை ஆற்றாமல் இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல, நிகழ்ச்சியில் சத்குரு பேசத் துவங்கியதிலிருந்து அனைவரும் ஒருவித உற்சாகத்தில் ஆழ்ந்தனர். அவ்வப்போது பார்வையாளர்களை நோக்கி சத்குரு கேள்வி கேட்டபோது சத்குருவின் கேள்விகளுக்கு ‘ஆம்' ‘இல்லை' என்று எதிர்வினையாற்றி நிகழ்ச்சியில் உயிர்ப்புடன் ஒன்றியிருந்தனர். “தனித் தமிழ்நாடு குறித்த சத்குருவின் பார்வை என்ன” “நவீன யுகத்தின் இன்றைய பிரச்சனைகளுக்கு ஆன்மீகம் ஒரு தீர்வாக இருக்க முடியுமா?” “என் வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும்?” என்பன போன்ற பல்வேறு வகையிலான கேள்விகள் பார்வையாளர்களிடமிருந்து முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை பற்றி சத்குருவின் ட்வீட் ...

sgtweetoncbey&tevent

sgtweetoncbey&tevent1

ஆசிரியர் குறிப்பு: சமூக வலைத்தளங்களில் மூலமாக வரக்கூடிய கேள்விகளுக்கும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மற்றும் தினமும் பிரபலங்களால் வீடியோவாக பகிரப்படும் கேள்விகளுக்கும் சத்குரு பதில் தருகிறார். சத்குருவின் Facebook, Youtube, மற்றும் Twitterஇல் எங்களுடன் இணைந்திருங்கள்!