Youth & Truth எனும் சத்குருவின் இந்தப் புதிய முன்னெடுப்பின் மூலம், இளைஞரும் உண்மையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இன்றைய இளைஞர்கள் தங்களது முழு ஆற்றலையும் வெளிக்கொண்டு வரும்வகையில், அவர்களிடத்திலிருக்கும் தயக்கத்தை தகர்த்து, விடை தெரியாமல் இருக்கும் பல்வேறு தகிக்கும் கேள்விகளுக்கு சத்குரு நேரடியாக பதிலளிக்கிறார். இன்றைய இளைஞர்கள் மத்தியில் புரிதலையும், சமநிலையையும் கொண்டுவருவதற்காக சத்குருவினால் துவங்கப்பட்டுள்ளது இவ்வியக்கம்.

"Youth and Truth – இளைஞரும் உண்மையும் சந்தித்தால்” எனும் இந்த தொடர் நிகழ்ச்சியின் முதல் சந்திப்பு, டெல்லியின் “ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில்” இளைஞர்களின் உயிர்த்துடிப்புமிக்க உற்சாகமிகு சூழலில் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு முன் பரபரப்பான தருணங்கள்:

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-img1

sgtweetonsrccyouthandtruthlaunch-tamil

நிகழ்ச்சி துவங்கிய செப்டம்பர் 4ம் தேதியன்று, கல்லூரியின் தன்னார்வத் தொண்டர்களும் ஈஷா தொண்டர்களும் இணைந்து காலை 6 மணியிலிருந்தே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கியதிலிருந்து ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஆனால் உண்மையில், இந்நிகழ்ச்சிக்கான முன்னோட்டம் சில வாரங்களுக்கு முன்பே தொடங்கியிருந்தது. தன்னார்வத் தொண்டர்கள் அக்கம்பக்கத்திலிருந்த மற்ற கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களையும் ஆசிரியர்களையும் அழைத்து, இந்த இயக்கத்தைப் பற்றி எடுத்துக்கூறிவந்தனர்.

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-faces1

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக இருந்த சூழ்நிலையைப் பார்த்ததை கொண்டு சொல்வதானால், மாணவர்களிடத்தில் இந்நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், கூடவே புதிய அனுபவத்திற்கு முன்பு ஏற்படும் இயல்பான ஒருவித தயக்கமும் உணரமுடிந்தது. ஆனால், நமது தன்னார்வத் தொண்டர்களோ வேறு ஒரு பரிமாணத்தில் இருந்தார்கள். உற்சாகமும் கொண்டாட்டமும் உள்ள ஒரு மனநிலையை பங்கேற்கும் மாணவர்களிடம் ஏற்படுத்தி, அவர்களின் இறுக்கமான நிலையை நீக்குவதற்கான செயல்களை மேற்கொண்டிருந்தனர்.

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-faces2

அரங்கத்தினுள்ளே நிகழ்ச்சியின் உஷ்ணம் சிறிது சிறிதாக ஏறத்தொடங்கியது. ஆரம்பத்தில் அரங்கினுள்ளே மாணவர்கள் வர வர, அவர்கள் இருக்கும் இடத்திற்கே உண்டான ஒருவித ”இரைச்சல்” இருந்தது. ஆனால் நமது சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசைநிகழ்ச்சி தொடங்கியவுடன், இரைச்சல் மெல்ல குறைந்து, ஆங்கங்கே மாணவர்களும் மாணவிகளும் ஆடிப்பாடத் தொடங்கினார்கள். சிறிது சிறிதாக அங்கே ஒரு ”ராக் இசை” கச்சேரி போன்றதொரு ஒரு சூழல் உருவாகியது.

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-soi

சத்குருவின் நுழைவு…!

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-sadhguruenters

சத்குரு மேடையில் நுழைந்தவுடன் அங்கிருந்த சூழலே அடியோடு மாறியது. “சத்குரு என்டர் ஆனவுடன் ஆடிட்டோரியமே அதிர்ந்தது. ஒரு அபூர்வமான காட்சி” என்று ரேடியோ ஜாக்கி ரௌனக் கூறினார்.

rjraunac-tweetvideosnap-tamilblog

“யூத் அண்ட் ட்ரூத்!” “யூத் அண்ட் ட்ரூத்!” “யூத் அண்ட் ட்ரூத்!” – என்ற ஆரவாரமும், கை தட்டல்களுடன் கூடிய முழக்கங்களும் சத்குருவிற்கு தகுந்த ஒரு உற்சாக வரவேற்பாக அமைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

போதாதற்கு இந்த ஆரவார உற்சாகத்துடன் மோஹித் சௌஹானின் ‘ராக் ஸ்டார்’ பாடல்களும் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையும் சேர்ந்து அரங்கத்தினரை வேறு ஒரு உலகிற்கு கொண்டுசென்றது. அடுத்து வரவிருக்கும் ஒருசில நிமிடத்தில் தூக்கியடிக்கவிருக்கும் மின்சாரத்தின் முன்னோட்டமாக இது இருந்ததென்று சொல்லலாம். இதில் சத்குருவின் ஆட்டம் இல்லாமலா? மோஹித் சௌஹானின் பாடலுக்கு தனக்கே உரிய நளினமான நடன அசைவுகளுடன் கொண்டாட்டத்தில் சத்குரு கலந்துகொண்டார்.

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-mohitchauhan

 

youngaudienceofsrcc-mohitchauhan

தேடல் துவங்கியது…

3 மாணவர்கள் இணைந்த ஒரு குழுவுடன் தொடங்கிய இந்த கேள்வி-பதில் நிகழ்ச்சி, பிறகு அரங்கிலிருந்தவர்களுக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்பளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு சத்குருவிடம் கேட்க நெருப்பாய் தகிக்கும் நிறைய கேள்விகள் இருந்தாலும், சத்குருவை கண்டதும் ஒருவித பிரமிப்பும் ஆச்சரியமும் இருந்தது; அதனால் அவர்களுடைய கேள்விகள் பெரும்பாலும் சத்குருவைப் பற்றியே இருந்தது – “நீங்கள் ஏன் எப்பொழுதும் ஒரு காலை மடித்து உட்காருகிறீர்கள்?” “இந்த மரியாதையும், பக்தியும் உங்களுக்கு ‘நான்’ என்ற அகந்தையை உண்டாக்கியதா?” “நீங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில், உங்களின் எதிர்கால கனவுகளை அடைவதற்கான போராட்டதுடன், உங்களின் பெற்றோர்களையும் சார்ந்திருக்க வேண்டியிருந்ததா?”

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-questionspic1

பலவிதமான சுவாரஸ்யமான தலைப்புகளில் கேள்விகள் எழுந்தன. “பொறாமையினால் ஒருவர் உந்தப்படுவாரா?” “இலக்கு என்பது ஆரம்பமா, முடிவா?” “பொது இடங்களில் காதலை வெளிப்படுத்துவது” “ராமானுஜன் போல ஒரு மேதையாக வேண்டுமானால் உடல்-மனம் இரண்டையும் எப்படி தயார்படுத்தலாம்?” என்று பற்பல விஷயங்களில், பதிலை அறியும் ஆர்வத்தில் கேள்விகள் வந்து விழுந்தன. வழக்கம்போல் சத்குருவின் நகைச்சுவை மிகுந்த, சரளமான அதே சமயம் உற்சாகமான பதில்கள் அரங்கத்தினரை மூச்சுமுட்ட சிரிக்கவும் ஆழமாக சிந்திக்கவும் வைத்தது.

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-questionspic2

ஆனால், சத்குரு அங்கே அப்பழுக்கற்ற உண்மை என்னவென்பதை வெளிப்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடவில்லை. இணையத்தில் மூழ்கியுள்ள இன்றைய இளைஞர்களுக்கு அவர்கூறிய சில உண்மைகள் பரிட்சயமில்லாதது. உதாரணமாக “கழுதை கூட வாலில் நெருப்பு பற்றினால் குதிரையை விட வேகமாக ஓடும்”; “சர்கஸில் பழக்கிய ஒரு குரங்குபோல இருக்க வேண்டாம் ஏனென்றால் இறப்பு என்பது எல்லோருக்கும் நடக்கும் ஒரு விஷயம்” போன்றவை அந்த இளைஞர்களுக்குள் ஒருவித ஆழ்ந்த புரிதலை அல்லது சமநிலையை உண்டாக்கியது.

சத்குரு மாணவர்களுக்கிடையே பேசும்போது பகிர்ந்துகொண்ட உரையிலிருந்து சில வாசகங்கள் உங்களுக்காக!

“பாருங்கள் நாம் செயல்பாடுகளில் ஈடுபாட்டுடன் இருக்கிறோம். இலக்கு பற்றி நமக்கு கவலையில்லை. நாம் முழுமையாக செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம், அவ்வளவுதான்! ”

“இந்த ‘contentment’ எனும் வார்த்தை ‘containment’ இன்னும் வார்த்தையிலிருந்து வருகிறது. உயிரை பிடித்துவைப்பதுதான் தீர்வு என்று நீங்கள் ஒருவேளை நினைத்தால், அது நீங்கள் உயிரை பயத்தால் வீணடிப்பதே ஆகும்.”

நீங்கள் உங்களது வாழ்க்கையை உணர விரும்பினால், உங்களுக்கு போதைப்பொருள் அவசியம் என்பது அர்த்தமல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை உணர விரும்பினால், அதற்கு ஒவ்வொரு மாலையும் உங்களுக்கு கேளிக்கைவிருந்து இருக்கவேண்டும் என்பது பொருளல்ல. நீங்கள் உங்கள் வாழ்க்கையை உணர்ந்து பார்க்க விரும்பினால், வாழ்க்கையை அதன் உச்சபட்ச புரிதலுக்கான சாத்தியத்துடன் வாழ்க்கையை உணர்வதற்கான இந்த ஒரு கருவியை நீங்கள் கொண்டிருக்க வேண்டும்."

“நீங்கள் சரியானவற்றை செய்வதனால்தான் வெற்றி வருகிறது. அதற்காக ஆசை மட்டும் கொண்டிருப்பவர்களுக்கு அது நிகழாது, யார் அதற்காக சரியானவற்றை செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் அது நிகழும்.”

“தங்கள் வாழ்க்கையில் 50% தருணத்தில் மட்டுமே சரியாக இருப்பவர்களுக்கு இரண்டு தொழில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அவர்களால் ஒருவேளை தட்பவெப்பத்தை முன்கூட்டியே கணித்துச் சொல்லும் வானிலை நிபுணராக மாறமுடியும் அல்லது நீங்கள் ஒரு ஜோசியக்காரராக ஆகமுடியும். வேறு எந்தத் துறையானாலும் நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள்.”

“நாளை என்பது உருவாக்கப்பட வேண்டும், அது இப்போதே நிர்ணயிக்கப்பட தேவையில்லை.”

இந்நிகழ்ச்சியில், யோகாவில் உடல் நிலைகள், யோக அறிவியல் மற்றும் வாழ்க்கை குறித்து தனித்தன்மையான விதத்தில் எடுத்துரைத்து சத்குரு மாணவர்களை ஆழமாக சிந்திக்கச் செய்தார். ஆதியோகி சிலையின் பிரம்மாண்ட தோற்றத்திற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, சத்குரு அதன் வடிவியலின் தனித்துவம் குறித்து விளக்கினார். அந்த இளைஞர் கூட்டத்தின் மத்தியில் “பல்கலைக்கழகமா அல்லது பரந்த பிரபஞ்சமா?” என்ற கேள்வியை சத்குரு முன்வைத்து அந்நிகழ்ச்சியிலிருந்து விடைபெற்றார்.

இரண்டு மணி நேர நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டிருந்தது மூன்று மணி நேரமாக மாற்றப்பட்டது மேலும், மாணவர்கள் இன்னும் சற்றுக் கூடுதலான நேரத்தை கேட்டனர். செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற வள்ளுவரின் கூற்றுக்கிணங்க, நிகழ்ச்சியானது மாணவர்களின் கேள்விகளுக்கான விடை அறியும் தாகத்தின் காரணமாக உணவு இடைவேளையை மறக்கச்செய்து மதியம் 2 மணி வரை நீண்டது.

விடைபெற்ற அழகிய தருணம்...

சத்குரு அவர்கள் வளாகத்திலிருந்து வெளியேறும்போது, மகத்தான ஒரு பாதுகாப்பு படைபோல சத்குருவை சூழ்ந்து நின்றுகொண்டு மாணவர்கள் உருவாக்கிய பாதுகாப்பு வளையம் அமைந்தது. ஆனால் சத்குரு அதிலிருந்து சட்டென விலகி ஒரு பறக்கும் தட்டினை வீசி கலகலப்பாக்கினார். உயிரோட்டமாக இருப்பதற்கும் உடற்தகுதியுடன் இருப்பதற்கும் வயது ஒரு பொருட்டே அல்ல என்பது அப்போது மிகத் தெளிவாக தெரிந்தது.

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-sgplayingfreezebee

age delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-sgleavingஇந்த நிகழ்வுக்குப் பின்னர் மாணவர்களிடத்தில் மனநிலையிலும், உள்ளத் தெளிவிலும், கண்ணோட்டத்திலும் குறிப்பிடத்தகுந்த வித்தியாசம் வந்துள்ளதை காணமுடிந்தது. காலையில் கூச்சத்துடனும் சோர்வான முகங்களுடனும் அமர்ந்திருந்த மாணவர்களின் முகங்களில் திடீரென்று புதுவித புத்துணர்ச்சி தொற்றிக் கொண்டதைப் பார்க்கமுடிந்தது. இதுவரை கண்டிராத ஏதோ ஒரு புதிய உற்சாகத்துடன் கூடிய நடையுடன் கடந்துசென்ற சில மாணவர்களிடம் குறுக்கிட்டு, அவர்களது அனுபவத்தை கேட்டறிந்தோம். இருபாலின உறவு குறித்தும் வெளிப்படையாக பேசிய அவர்கள், இந்நிகழ்ச்சி ஏன் இதற்கு முன்பாகவே வரவில்லை என்றும் கேட்டனர். சத்குருவை கண்டுணர்ந்த அனுபவம் குறித்து அவர்களில் சிலர் வார்த்தைகள் இங்கே!

delhiyil-youth-and-truth-ennatra-kelvigal-unmaiyai-unarthum-bathilgal-tamilblog-group-pic-volunteers

சத்குருவிடம் கேளுங்கள் நிகழ்ச்சி குறித்து மாணவர்கள் கூறியவை என்ன?

“கல்லூரி மாணவர்களுக்காக சத்குரு இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது உண்மையிலேயே மிகவும் அருமையானது. மேலும், அவர் எங்களது SRCC கல்லூரியில் இந்நிகழ்ச்சியை துவங்கியது என்பது எங்களுக்கு ஒரு மிகப்பெரிய பெருமையாகும்.”

“இன்றைய இந்தப் போட்டி உலகத்தில் சரியான விதத்திலான வழிகாட்டுதலை பெறுவது என்பதும் மிகமுக்கியமானது. மேலும், எங்களுக்கு இத்தகைய ஒரு மகத்தான மனிதரின் வழிகாட்டுதல் கிடைத்திருப்பது ஒரு பெரும் பாக்கியமாகும். எங்களுக்குள் விடை தெரியாமல் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு இங்கே உண்மையிலேயே விடை கிடைத்தது.”

“எங்களின் கேள்விகளுக்கு சத்குரு வழங்கிய பதில்கள் எங்கள் அன்றாட வாழ்க்கையில் நாங்கள் சந்திக்கும் பலவித சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பதற்கான ஒரு தெளிவை வழங்கியது.”

“நான் சத்குருவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவரை நேரடியாகப் பார்த்து அவரின் கருத்துகளைக் கேட்பது என்பது ஒரு மாபெரும் அனுபவமாகும். அவருடைய ஆளுமைத் தன்மையும் அவருடைய அதிர்வு நிலையும் மிகவும் நேர்மறையானதாகவும், சக்தி வழங்கக்கூடியதாகவும் இருந்தது. அவரது இருப்பின்போது நாங்கள் உணர்ந்தது என்ன என்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.”

“இந்த நிகழ்ச்சி இந்த தருணத்திற்கு ஏற்ற மிக தேவையான ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எனது ஒரு பாட வகுப்பை நான் தவிர்த்துவிட்டேன். நிகழ்ச்சி முடிந்து நான் திரும்பிச் செல்கிறபோது, எனது அனைத்து நண்பர்களையும் அழைத்து, நான் சத்குருவை பார்த்ததையும் அவர் பகிர்ந்துகொண்ட அனைத்து உன்னத அம்சங்களையும் இன்று அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

‘Youth and Truth' எனும் இந்த தொடர் நிகழ்ச்சிகளின் மூலம் இந்தியாவின் இன்றைய இளைஞர்களிடத்தில் தெளிவையும் புரிதலையும் கொண்டுவரும் விதமாக, மாதம் முழுவதற்கும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பலவித குறிப்பிடத்தகுந்த கல்வி நிறுவனங்களுக்கு சத்குரு நேரடியாக பயணித்து, மாணவர்களுடன் கலந்துரையாடி, கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார். இரண்டாவது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று (செப் 7) வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

ஆசிரியர் குறிப்பு: சமூக வலைத்தளங்களில் மூலமாக வரக்கூடிய கேள்விகளுக்கும் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மற்றும் தினமும் பிரபலங்களால் வீடியோவாக பகிரப்படும் கேள்விகளுக்கும் சத்குரு பதில் தருகிறார். எங்களுடன் இணைந்திருங்கள்! சத்குருவின் Facebook, Youtube, Twitter, மற்றும் Instagram.

சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

YAT18_Newsletter-650x120