ஜூலை 31, 2019 அன்று காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுக்கும் வேளாண்காடுகள் திட்டம் பற்றி தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 28 வாகனங்களில் நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் சத்குரு கொடியசைத்து வைக்க புறப்பட்டனர். விவசாயிகளின் வாழ்வை மாற்றியமைக்க துவங்கியிருக்கும் இந்த பயணத்தில், நெஞ்சம் உறைய வைக்கும் விவசாயிகள் வாழ்வின் நிதர்சனங்களை தன்னார்வலர்கள் நேரில் காண்கிறார்கள். கிராமம் கிராமமாக பயணிக்கும் தன்னார்வத் தொண்டர்களின் ஆழமான அனுபவங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டின் ஆனந்தம் வழியாக நாமும் காவேரி கூக்குரல் இயக்க பயணம் செய்வோம், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வை மாற்றியமைப்போம். களத்துமேடுகளின் வழி செல்லும் இந்த பயணத்தில் இணைந்திருங்கள்..

 

இரண்டு இரவுகளுக்கு முன்பு டோடபல்லபுரா தாலுக்காவில் உள்ள மடகொண்டனஹள்ளியில் இந்த நிகழ்வு நடந்தேறியது. இந்த கிராமம் வித்தியாசமாக இருந்தது. வேளாண்காடுகள் பற்றிய வீடியோவைப் பார்க்க விவசாயிகள் வருமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் வெறுமனே உட்கார்ந்திருந்தனர், முழு வீடியோவையும் பார்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஒரு பத்து விவசாயிகள் அங்கு இருந்த போதும் அந்த இடத்தில், வீடியோவில் கவனம் செலுத்தியது என்னவோ அங்கிருந்த குழந்தைகள் மட்டுமே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"பாரதத்தின் அன்னதத்தா"-வை திரட்டிய "பாரதத்தின் பாக்கிய விதாதா"க்கள்

வீடியோக்களைப் பார்த்த பிறகு, இந்த குழந்தைகள் எங்களுடன் சேர்ந்து, பெரியவர்களையும் பார்க்க அழைத்தனர். அது அவர்களின் நலனுக்காக என்றும் அவர்களிடம் சொன்னார்கள். இது ஒரு அற்புதமான நிகழ்வு. வருங்கால தலைமுறை தங்களின் சிறந்த நலனுக்காக அவர்கள் உணர்ந்த ஒரு செயலுக்காக அதை நோக்கி முன்னேறியது! இந்த குழந்தைகள் மிகவும் உந்துதல் பெற்றவர்கள், அவர்கள் ஆர்வம் காண்பிக்காத விவசாயிகளை கேலி செய்தனர். இறுதியாக, விவசாயிகள் காவேரியின் கூக்குரலிற்கு அடிபணிந்தனர். நாங்கள் வீடியோவை மீண்டும் ஒருமுறை ஒளிபரப்பினோம், மேலும் பலர் வேளாண்காடுகளுக்கு மாறுவதற்கு கையெழுத்திட்டனர். பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதைப் பார்ப்பது வேதனையாக இருந்தது, யாரோ சிலர் அவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. "பாரதத்தின் அன்னதத்தா"களை (இந்தியாவிற்கு உணவளிப்பவர்களை) திரட்டிய "பாரதத்தின் விதாதா"களுக்கு (இந்தியாவின் தலையெழுத்து - நாளைய தலைமுறையினருக்கு) நன்றி.

எங்கள் நன்றியின் அடையாளமாக குழந்தைகளுடன் சாக்லேட்டுகளை பகிர்ந்துகொண்டு நிகழ்வை முடித்து கொண்டோம், பின் இயக்கத்தின் தன்னார்வலரான சுதான்ஷு அண்ணா தரையில் சிதறிக் கிடந்த இருந்து சாக்லேட் காகிதங்களைப் பொறுக்கி எடுத்து அவ்விடத்தை சுத்தம் செய்தார்.

ஒரு இசை அழைப்பு

சிறிது அருகாமையில் இருந்த மைசூர் தாலுக்காவைச் சேர்ந்த இரத்தினஹள்ளி கிராமத்தின் நமது நவீனயுக தன்னார்வலர்களின் உற்சாகத்தின் அளவு சொல்லவொண்ணா நிலையில் இருந்தது. நாம் அந்த கிராமத்தை அடைத்தபோது மழை பெய்துகொண்டிருந்தது. விவசாயிகள் வெளியில் வந்து நாம் கூறுவதைக் கேட்க ஆர்வமில்லாமல் இருந்தனர். எனினும் அங்குள்ள குழந்தைகள் அந்த நிகழ்வைக் குறித்து பெரும் ஆர்வம் கொண்டு நம்மோடு கூட இருந்து நமக்கு உதவி செய்யவும் முனைப்போடு இருந்தனர். நம்மோடு வந்த ஒரு தன்னார்வலர் அந்த குழந்தைகளோடு சேர்ந்து நமக்கு பிடித்தமான அந்த பாடலைப் பாட விரும்பினார். அந்த பாடல் சித்தேஷ் என்னும் இன்னொரு தன்னார்வலரால் அன்று காலைதான் எழுதி இசையமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து அந்தப் பாடலைத்தான் பயணம் செய்யும் போது நாங்கள் மகிழ்ச்சியோடு முணுமுணுத்துக் கொண்டிருந்தோம். அந்தப் பாடலை குழந்தைகளோடு சேர்ந்து பாடும் போது மிகக் களிப்புடைய அனுபவமாய் எங்கள் எல்லோருக்கும் இருந்தது.

“காவேரிக்கரை நிலத்திலே,
காடு வளர்ப்போம் வேளாண்காடு வளர்ப்போம்!
கொஞ்சம் காசும் பார்ப்போம் - அது
கண்ணில் இதுவரை படல!
'மழையில்ல மழையில்ல' எங்கும் கூக்குரல் "
'மரம் வளர்ப்போம் மண்வளம் காப்போம்' என்றும் கூக்குரல்
காவேரியின் கூக்குரல் காதுக்கு எட்டலையா?"

அவர்களை மறுமுறை நாம் சந்திக்க வேண்டும்

பாடல் முடிந்தவுடன், விவசாயிகள் ஆர்வத்துடன் முன் வந்து தங்கள் விவரங்களை பகிர்ந்து கொண்டனர். ஒரு வயதான பெண்மணி, கௌரம்மா ஒரு தீவிர தன்னார்வலராக மாறியதோடு மட்டுமல்லாமல், மேலும் பல கிராமவாசிகளை பதிவு செய்யச் சொன்னார். படிவத்தை நிரப்பும்படி நாங்கள் அவரிடம் கேட்டபோது, அவருடைய நடத்தையில் ஒரு வித்தியாசமான மாற்றத்தைக் கண்டோம். அவர் ஒரு கணம் படிவத்தைப் பார்த்து அதை கையில் வைத்துக்கொண்டு, அவசரமாக அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றார். எதற்கு இப்படி நடந்து கொள்கிறார் எங்களுக்கு குழப்பமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தார், அவருடைய மொபைல் எண் நினைவில் இல்லாததால் அவர் மொபைல் ஃபோனைக் கொண்டு வரச் சென்றதை நாங்கள் உணர்ந்தோம். அவருடைய வீடு அந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் இருந்தது, ஆனாலும் அவர் தொலைபேசி எண்ணை எங்களுக்கு கொடுக்க ஆர்வமாக இருந்தார்.

எங்களில் பலருக்கு, இந்த பிரச்சாரம் ஒருமுறை வாழ்நாள் அனுபவமாக இருந்தது. இந்த பணிவான கிராமப்புற மக்களுக்கு நாங்கள் நன்றியுணர்வையும் அன்பையும் செலுத்துகிறோம்

நாம் அவர்களை மீண்டும் சந்திப்போம் - அவர்களின் நிலத்தில் மரங்களும், தண்ணீரும் இருக்கும் நேரத்தில்!

-“காவேரி கூக்குரல்” விவசாயிகளின் சுவடுகளை தேடி செல்லும் பணியில் ஈஷா தன்னார்வலர்கள்

ஆசிரியர் குறிப்பு :காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். கீழ்க்கண்ட ஏதேனும் வகையில் நீங்களும் இணையலாம்,
ஒரு மரத்திற்கு ₹ 42 நன்கொடை வழங்க முடியும்.
தன்னார்வத் தொண்டாற்றலாம்.
ஆன்லைனில் தனி பக்கம் துவங்கி மக்களிடம் நிதி திரட்டி உதவலாம்.
காவேரி வடிநிலப்பகுதி விவசாயிகளை அணுக உதவ முடியும்.இணைந்திருங்கள்