Main Centers
International Centers
India
USA
FILTERS:
SORT BY:
ஒரு சூழ்நிலையை எப்படி கையாள்கிறீர்கள் என்பது முழுக்கமுழுக்க உங்கள் கையில் இருப்பதில்லை. ஆனால் உங்களை எப்படி கையாள்கிறீர்கள் என்பது முழுக்கமுழுக்க உங்கள் கையில்தான் இருக்கிறது.
இந்த படைப்பை உள்ளது உள்ளபடி பார்த்தால், இது வெடித்தெழும் பேரழகு கொண்டது .
வாழ்க்கையில் இருப்பதிலேயே மிக முக்கியமான அம்சம் சமநிலை. சமநிலை இல்லை என்றால் உங்கள் உடலும் மனமுமே உங்களுக்கு எதிராக வேலை செய்யும்.
அசைவற்ற தன்மைதான் பிரபஞ்சத்தின் அடிமூலம். நீங்கள் யார் என்பதன் அடிமூலத்தை உணர்வீர்களாக!
இதுதான் நீங்கள் செய்யும் கடைசி செயல் என்பதை போல எல்லாவற்றையும் செய்யுங்கள். பிடித்து வைத்துக்கொள்ள எதுவுமே இல்லை, பின்னாளுக்காக சேர்த்து வைக்க எதுவுமே இல்லை.
ஒருவர் தொடர்ந்து U-turn எடுத்துக்கொண்டே இருந்தால், அவருக்கு எங்கேயும் போய் சேரும் விருப்பமே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
விஜயதசமி வெற்றியைக் கொண்டாடுகிறது. உங்களுக்கே உரிய கட்டுப்பாடுகளைக்கடந்து அதை வெற்றி கொள்ளும்போது தான், உயிரின் மகத்தான இயல்பு தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்.
ஏதோ ஒன்று உங்களை ஊக்கப்படுத்த முடிகிறது என்றால், வேறு ஒன்று உங்களை சோர்வடைய வைக்கவும் முடியும். சுகமாக, இயல்பாக பயணிக்க ஒரே வழி தெளிவு மட்டும்தான்.
அபிப்ராயங்கள் கண்புரை(cataract) போன்றது, உங்களை தெளிவாக பார்க்கவிடாது.
நாம் சுவாசிக்கும் காற்று, நாம் குடிக்கும் தண்ணீர், நாம் சாப்பிடும் உணவு, நாம் உபயோகிக்கும் பொருட்கள், வாழ்வில் ஒவ்வொரு கணத்திலும் நமக்கு துணையாக இருக்கும் உயிர்கள் ஒவ்வொன்றின் மீதும் நமக்கு நன்றி உணர்வு இருப்பது அவசியம்.