சத்குருவுடன் யந்திர வைபவம்- ஈஷா யோக மையம், 22 டிசம்பர் 2018

நீங்கள் இப்போது தேவியை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள், அவள் எந்த அளவு சக்தியாக, எந்த அளவு வீரியமாக, எந்த அளவு அற்புதமாக உங்கள் வீட்டில் வீற்றிருப்பாள் என்பது, நீங்கள் உங்கள் உள்ளத்தை எந்த அளவு அவளிடம் கொடுக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. உங்கள் வீட்டில் அனைத்திலும் அதிமுக்கியமானவளாக அவளை வைத்திருந்தால், நீங்களோ உங்கள் குடும்பமோ முக்கியமில்லை, தேவியே உங்கள் வீட்டில் அனைத்திலும் அதிமுக்கியமானவள் என செய்துகொண்டால், தேவியின் அருளைப் பெறும் ஒருவர், தோல்வி, நோய், மரணம், போன்றவை குறித்து ஒருபோதும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் விளையாட்டைப் போல் நிகழும்.

மஹாராஷ்டிர மாநில மராத்தி பத்திரிகையாளர் சங்கம், சத்குருவிற்கு நதிகள் மீட்பு இயக்கத்திற்காக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது

நிதின் கட்காரி மத்திய அமைச்சர் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, நீர்வளம், நதி மேம்பாடு, மற்றும் கங்கை புத்துணர்வு

மதிப்பிற்குரிய சத்குரு அவர்களே, நதிகளுக்காக நீங்கள் உலகிற்கு ஆற்றியுள்ள பணி, நதிகள் மீட்பு இயக்கம், மிகவும் வெற்றிகரமான ஒரு இயக்கம். இது இந்தியாவை ஊக்குவிப்பதோடு, உலகம் முழுவதையும் ஊக்குவிக்கும். குறிப்பாக நீர்வளம், நதிகள் இணைப்பு, கங்கை புத்துணர்வு, ஆகியவற்றுக்கு நான் பொறுப்பேற்றுள்ளேன். நான் கவனிக்கும் துறைகளில் நீர்வளம் மிக முக்கியமானது. உங்கள் ஆசிகளோடு, தூய்மை கங்கா இயக்கத்திற்காக திட்டமிட்டு வருகிறோம், இது நம் தேசத்தில் சவாலாக இருக்கிறது. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, பெரிய அளவில் மரங்கள் நடாமல் நம்மால் நம் நதிகளைக் காப்பாற்ற இயலாது. இதுதான் நதிகள் மீட்பு இயக்கத்தின் முக்கிய கருப்பொருளாக இருக்கிறது. பொதுமக்களிடத்தில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவித்து, சுற்றுச்சூழலுக்காக செய்யவேண்டியதை திட்டவட்டமான ஒரு இலக்காக அவர்களிடம் கொடுக்கவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் ரசிகன் ஒருவனாக, இன்று மஹாராஷ்டிர மராத்தி பத்திரிகையாளர் சங்கம் உங்களுக்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது. இதை உங்களுக்கு வழங்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி, பெருமை. நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை, ஆனால் இது எனக்குக் கிடைத்த உங்கள் ஆசிகள் என்றே கருதுகிறேன்.

சத்குரு: என் வாழ்வில் மிகவும் தர்மசங்கடமான தருணங்கள், பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும் தருணங்களே. ஆனால் இதை ஏற்பாடு செய்தமைக்கு உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நதி என்பது உயிருள்ள ஒன்று. கங்கை நதியை சுத்தம் செய்ய நிறைய வேலைகள் நடக்கின்றன. நிறைய மக்கள் கங்கை அசுத்தமாக இருக்கிறது என நினைக்கிறார்கள், அப்படியில்லை, நாம்தான் அடிப்படையில் அசுத்தமான மனிதர்கள். மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு வருடம் தூங்கிவிட்டார்கள் என்றால், ஒரே வெள்ளத்தில் கங்கை தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்வாள். எனவே கங்கைக்குத் தேவைப்படுவது நம்மிடமிருந்து பொறுப்பான நடவடிக்கை. மண்தான் மிகவும் முக்கியமானது. நம்மிடம் வளமான மண் இருந்தால், எப்போதுமே போதுமான நீர்வளம் இருக்கும். இந்த தலைமுறையைச் சேர்ந்த மனிதர்களாக, இதை பிரச்சனையாக்காமால், தீர்வுநோக்கி கொண்டுசெல்லும் உறுதியுடன் நாம் இருக்கிறோமா? வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் பரிசு என்ன? அடுத்த தலைமுறைக்கு இந்த தேசத்தை நம் பெற்றோர்கள் நமக்கு வழங்கியது போலாவது விட்டுச்செல்லும் பொறுப்பு நம்மிடம் உள்ளதா? நதிகள் மீட்பு இயக்கத்தில் மஹாராஷ்டிர மாநிலம் முன்னோடியாக கலந்துகொண்டுள்ளது. இது அனைத்து மாநிலங்களிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. இதற்கு உங்கள் அனைவரையும் பாராட்ட வேண்டும்.

கட்காரி அவர்கள் சுதீர் முகந்திவர் பெயரைக் குறிப்பிட்டார், அவர் நெருப்பாய் இருக்கிறார். அவருடைய ஆர்வமில்லாமல் இவை நடந்திருக்காது. முதலமைச்சரும் அவருக்கு 100% ஆதரவு வழங்குகிறார். அதிர்ஷ்டவசமாக மஹாராஷ்டிர மாநிலத்தில் வன அமைச்சரும் நிதியமைச்சரும் ஒருவரே. இது அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. யவத்மால் பகுதியில், வகாரி நதிக்கு ஒரு திட்டத்தை நாம் துவக்கவிருக்கிறோம். தேசத்திலேயே மிகவும் சவாலான பகுதியை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இவ்விடம்தான் விவசாயிகள் தற்கொலையின் மையப்பகுதியாக கருதப்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் 100% உறுதியாக இதை என்னால் சொல்லமுடியும், தேவையான ஒத்துழைப்பு இருந்தால், 5 முதல் 8 ஆண்டுகளில், இப்பகுதியை முற்றிலுமாக நம்மால் மாற்றிவிட முடியும்.

உங்களில் பெருமையான மராத்தியர்கள்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன், இதை உலகிற்கு நாம் செய்துகாட்ட வேண்டும். எது மீட்கமுடியாத நிலம் போலத் தெரிந்ததோ, அதை நம்மால் மிக வளமான பூமியாக மாற்றி மக்கள் அதில் நன்றாக வாழும்விதமாக செய்யமுடியும். நாங்கள் விரிவான திட்ட வரைவரிக்கையை தயார்செய்துள்ளோம். களப்பணியில் நமது தன்னார்வத் தொண்டர்கள் 8 மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டுள்ளார்கள், அப்பகுதியிலுள்ள ஒவ்வொரு விவசாயியையும் சந்தித்து ஆய்வுகள் செய்துள்ளார்கள். விவசாயிகள் ஆர்வமாக இருக்கிறார்கள், அரசாங்கமும் ஆர்வமாக இருக்கிறது, நீங்கள் அனைவரும் எங்களுடன் இருந்தால், நிச்சயமாக நம்மால் இதனை நிகழச்செய்ய முடியும். நன்றி.

கிருஸ்துமஸ் 2018 - ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ், அமெரிக்கா

கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்குள் உள்ளது' என இயேசு சொன்னார். உங்கள் உள்தன்மையை உணரும் ஒரு வழியே யோகா!" - சத்குரு

 

அன்பும் அருளும்,