பனிப்பாறையில் யோகா
இவ்வருட உலக யோகா தினத்தன்று, உயிர்வாழ்வதே கடினமாக இருக்கும் இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நம் வீரர்களுக்கு சத்குரு யோகாவை எடுத்துச் சென்றுள்ளார். சத்குருவின் சியாச்சின் பயணத்தை, புகைப்பட, ட்வீட் மற்றும் வீடியோ தொகுப்பாக இதில் தொகுத்துள்ளோம்.

ஜூன் 21, சியாச்சின் சிகரத்திலுள்ள வீரர்களை சந்தித்தபோது
மனிதர்களுக்கு மிகவும் சவாலான, ஆபத்தான சூழ்நிலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய இராணுவ வீரர்களுடன் இருப்பது எனது மிகப்பெரிய பாக்கியம். - சத்குரு
ஜூன் 21 - சியாச்சின் நகரத்திலுள்ள இராணுவ வீரர்களுக்கு யோக அறிவியலை சத்குரு அர்ப்பணித்தபோது
இந்த ஆண்டு உலக யோகா தினத்தில் சியாச்சின் வீரர்களுடன் இருப்பது மிக அற்புதமான அனுபவம். இவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் தேசம் போற்றிக் கொண்டாடட்டும். - சத்குரு
ஜூன் 21 - உலக யோகா தினத்தன்றும் அதைக் கடந்தும் நமது பணி
மனிதகுலத்திற்கு பிணியாக இருப்பவை அனைத்திற்குமான அருமருந்தே யோக அறிவியல். இணைத்துக்கொள்ளும் தன்மை, ஆனந்தம் மற்றும் உற்சாகம் நிறைந்த மனிதர்களை உருவாக்குவதில், யோகாவின் பரிமாணங்கள் பலவும் அடிப்படையாக விளங்கமுடியும். நான்காவது உலக யோகா தினமான இன்று, தன்னிலை மாற்றத்திற்கான கருவிகளை உலகின் ஒவ்வொரு பிரஜைக்கும் கொண்டுசேர்க்க நாம் உறுதிகொள்வோம். - சத்குரு
தன்னிலை மாற்றத்திற்கான கருவிகள் ஒவ்வொரு மனிதரின் கையிலும் இருப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இவை சில அமைப்புகள், குருக்கள் அல்லது புனித நூல்களில் அல்லாமல், ஒவ்வொரு தனிமனிதரின் கையிலும் இருக்கவேண்டும். பூமியிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் தனிமனிதர்களிடமிருந்தே தோன்றியுள்ளன, நாம் கவனம் செலுத்த வேண்டியதும் தனிமனிதர்கள் மீதுதான். - சத்குரு
Subscribe
ஜூன் 21 - தங்கள் உயிரை தியாகம் செய்தோருக்கு மரியாதை
நம் பாதுகாப்புப்படை வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தின் அடித்தளத்தில்தான் நம் செயல் மற்றும் சாதனைகள் அனைத்தும் நிற்கின்றன. இப்புனிதமான இடத்தில் இருப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். அன்பும் ஆசிகளும். - சத்குரு
ஜூன் 21 - இராணுவ வீரர்களுக்கான யோகா பற்றி சத்குரு
ஜூன் 21 - 2018 உலக யோகா தினத்தன்று சத்குரு நம்முடன் பகிர்ந்துள்ள குருவாசகம்
ஜூன் 20 - சியாச்சின் நோக்கிய பயணத்தின்போது
ஜூன் 20 - லே நகரத்திலுள்ள இந்திய இராணுவத்தின் Hall of Fame அருங்காட்சியகத்தில்
ஜூன் 19 - லே நகரத்திலிருந்து வீடியோ செய்தி
இந்த யோகா தினத்தையொட்டி, தன்னிலை மாற்றம், உள்நிலையில் மேம்பட்ட சமநிலை மற்றும் ஆழ்ந்த நல்வாழ்வுக்கான கருவிகளை நம் இராணுவ வீரர்களுக்கு வழங்கவிருக்கிறோம். - சத்குரு
ஆரோக்கியத்திற்கான சவாலை சத்குரு ஏற்கிறார்
இவ்வருடம், நம் பாதுகாப்புப்படை வீரர்கள்மீது நாம் கவனம் செலுத்துகிறோம். இந்த யோகா தினத்தில், சக்தி வாய்ந்த யோக முறையான அங்கமர்தனா பயிற்சியை வழங்குவதற்காக இந்திய இராணுவத்துடன் நான் சியாச்சினில் இருப்பேன். அனைத்திலும் சிறந்ததையே நம் போர் வீரர்கள் பெறவேண்டும் என்பதே நம் நோக்கம். - சத்குரு
தமிழக முதல்வர், துணை முதல்வர், ரஜினிகாந்த, மற்றும் மு.க.ஸ்டாலின் அவர்களை ஆரோக்கியத்திற்கான சவாலை ஏற்று, தமிழக மக்களை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊக்குவிக்குமாறு அழைக்கிறேன். - சத்குரு
ஜூன் 18/19 - லே
வெறுமையாக, வறண்டு, ஆளரவமின்றி இருந்தாலும் இது கண்கொள்ளாக் காட்சி. லே நகரத்தில் கம்பீரமான இமயமலையின் மடியில். - சத்குரு
யோகாவை தங்கள் வாழ்வின் அங்கமாக்கிட ஆர்வமும் ஈடுபாடும் காட்டும் நம் இந்திய இராணுவ வீரர்களைக் கண்டு மனமகிழ்கிறேன். - சத்குரு
இந்த யோகா தினத்தில், உலகின் மிக உயர்ந்த சில போர்க்களங்களில், தன்னிலை மாற்றத்திற்கான யோகக் கருவிகளை நம் வீரர்களுக்கு வழங்கவிருக்கிறோம். அதிக உயரங்களில் இருப்போருக்கென பிரத்யேகமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. - சத்குரு