கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, எனக்கு நூற்றுக்கணக்கான கேள்விகள் உள்ளன.

சத்குரு: ஓ! 

கேள்வியாளர்: ஆனால், நான் ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறேன். நீங்கள் வழங்கும் பயிற்சிகளான ஹடயோகா, ஷாம்பவி, சக்தி சலன கிரியா மற்றும் சம்யமா செயல்முறையை, தீவிரத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்துவந்தால், எனது கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்குமா?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: இல்லை, உங்கள் கேள்விகள் எதற்கும் பதில் கிடைக்காது. எந்த பயிற்சியும் செய்யாத பெரும்பான்மையான பொதுமக்களுக்கு மட்டும்தான் நான் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். தினமும் தீவிரத்துடன் பயிற்சி செய்வோருக்கு, அவர்களது கேள்வியை நான் ஏற்கிறேனா? அல்லது பதிலளிக்கிறேனா? இல்லை. ஏனென்றால், சாதனா செய்வதன் நோக்கமே, கேள்விகள் அனைத்தையும் எரித்துவிடுவதே, பதில்கள் கண்டறிவதற்கில்லை. உங்கள் கேள்விகள் இல்லாமல் போய்விட்டால், பதில்களில் அர்த்தம் இருக்குமா? தங்கள் உள்நிலை நல்வாழ்விற்கு எதுவும் செய்யாமல், கேள்வி கேட்டு பதில் கிடைத்துவிட்டால் வாழ்க்கை சரியாகிவிடும் என்று நினைப்பவர்களுக்கு, நாம் சற்றே பொழுதுபோக்கு வழங்குகிறோம். ஆனால் ஒரு கட்டத்தில், அவர்களுக்கு பொழுதுபோக்கு வழங்குவதை நான் முற்றிலுமாக நிறுத்திவிடுவேன். தற்போது அதை வழங்குகிறேன்.

ஒரு கட்டத்தில், தீவிரமாக சாதனா செய்வோருக்கு மட்டுமே நான் இருப்பேன். மற்றவர்கள் யூடியூப் வீடியோ பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பழைய சினிமா எப்போதுமே பொழுதுபோக்குதான். நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும் - கேள்விகள், பதிலறிய முடியாத இடத்திலிருந்தே தோன்றுகின்றன. நீங்கள் எவ்விடத்திலிருந்து கேள்வி எழுப்புகிறார்களோ, அவ்விடம் எதையும் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாதது. அதற்கு ஒரு தீர்மானம் தேவை.

நான் தீர்மானங்கள் வழங்கும் ரகம் இல்லை - நான் உயிரோட்டமான ஒரு செயல்முறை. நீங்கள் வளர்ச்சி செயல்முறையாக இருக்க விருப்பத்துடன் இருந்தால், உங்களுக்கு நான் இருக்கிறேன். மாறாக, உங்களுக்கு ஒரு தீர்மானம் வேண்டுமென்றால், நான் உங்களை எரிச்சலாக்குவேன். ஏனென்றால், ஒரு தீர்மானத்தின் அர்த்தம்தான் என்ன? இது தொடர்ந்து நடந்தேறும் ஒரு செயல்முறை. இந்த உயிர் செயல்முறை மிக அழகாகவும் உன்மத்தமாகவும் ஆகும்போது, தீர்மானம் தேடி கவலைப்பட மாட்டீர்கள். அப்போது உங்களிடம் எந்த கேள்வியும் இருக்காது. எனவே, "எனது சாதனா அனைத்தையும் நான் செய்தால்..." - அது ஏதோ கொடுமையான செயல் என்பதுபோல் சொல்கிறீர்கள் - "இவை அனைத்தையும் செய்தால், என் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்குமா?!"

ஒருமுறை இப்படி நடந்தது. சங்கரன்பிள்ளை... இது நியாயமில்லை - அவர் கதை எப்போதுமே சிரிப்பாக இருக்காது, சிலசமயம் சீரியஸான விஷயமாக இருக்கும். சங்கரன்பிள்ளை விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நோய் மற்றும் சோர்வின் காரணத்தால் எனக்கு விவாகரத்து வேண்டும்" என்று கேட்டிருந்தார். நீதிபதி அதைப் பார்த்து, "இது என்ன நோய் மற்றும் சோர்வு?" என்று கேட்டார்.

அதற்கு சங்கரன்பிள்ளை சொன்னார், "அது என் வக்கீலின் வேலை. நான் சொன்னது, 'அவளை பார்த்தாலே பிணியாகிறது, அவளுடன் வாழ்ந்து சோர்ந்துவிட்டேன்' என்று மட்டும்தான்." துவக்கத்தில், உங்களுக்கு கேள்விகள் இருந்தால், கேள்விகளின் வடிவத்தில்தான் தேடுதல் துவங்குகிறது என்பதால், அது பரவாயில்லை. நாம் கேள்விகளை எதிர்க்கவில்லை. ஆனால், நீங்கள் இதை தெரிந்துகொள்ள வேண்டும் - இந்த கேள்விகள் அனைத்தும் உற்பத்தியாகும் இடம் - அவ்விடம் தெரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாதது. இதற்கு உதாரணம் சொன்னால், நீங்கள் இப்படி செய்வதுண்டா? (மூக்கை சுத்தம் செய்வதுண்டா?) இங்கே செய்யாதீர்கள். இதை குளியலறையில்தான் செய்யவேண்டும். எல்லா இடங்களிலும் செய்யக்கூடாது. இதை எதற்காக செய்கிறீர்கள்? உங்கள் நாசிகளை சுத்தம் செய்வதற்கு.

சற்று நேரத்திற்குப் பிறகு, "என் விரலால் சுவாசிக்க முடியுமா?" என்று நீங்கள் கேட்டால், விரலால் சுவாசப் பாதையை சுத்தம் செய்யத்தான் முடியுமே தவிர, சுவாசிக்க முடியாது. எனவே, உங்கள் புத்திசாலித்தனத்திற்கு தெரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளதென ஒருபோதும் நம்பாதீர்கள் - அதனால் தெரிந்துகொள்ள முடியாது. அது கேள்விகள் கேட்பதற்குக் காரணம், தற்போது அது அப்படி இருக்கிறது, அது பரவாயில்லை - அதில் தவறேதும் இல்லை.

"நான் பதில்கள் தர முயற்சி செய்யவில்லை. உங்கள் வாழ்க்கையில் உண்மை மட்டுமே அதிகாரமாக மாறும்விதமாக, உங்கள் கேள்விகளை நீங்கள் ஆழப்படுத்திட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

Love & Grace