இது அருள் நேரம்
ஸ்பாட்: இந்த மாதம் அருளை உள்வாங்கிக் கொள்ளும் திறன் மேம்படும் மாதம். இந்த வார சத்குரு ஸ்பாட்டில், எப்படி ஒருவர் அருளை இன்னும் அதிகமாக உள்வாங்கிக் கொள்வது என்பதை சுட்டிக் காட்டுகிறார் சத்குரு. "சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அனைவருக்கும் எபபோதும் ஒரு கேள்வியாக இருக்கிறது. 'நான்’ என்னும் தன்மை உங்களிடம் குறைவாக இருப்பது, பெற்றுக் கொள்ளும் திறன் உங்களிடம் ஏற்பட, சிறந்த வழியாக இருக்கும்."
click on photo to zoom
click on photo to zoom
Watch Sadhguru's Kannada book launch and interactive session tonight 7pm IST, 6th July live from Bangalore. Register at Isha Live
Excerpted from Darshan 3 July 2011:
This is the time of year when the Aadhi Yogi’s attention first fell upon the seven now celebrated disciples. We are in the month when an ascetic and yogi, who is completely uninvolved with what is around him, is beginning to get involved. Slowly, the intention of sharing his experience is beginning to blossom. From the last full moon day to the coming one, which is referred to as Guru Pournami, Shiva could not take his attention off the Sapta Rishis, who prepared for 84 long years without even a moment of attention from him. And now, his attention upon his disciples was undivided.
This month is seen as one where even a completely heartless ascetic could not ignore the intensity of longing to blossom in the seven disciples and he became compassionate. Somebody who had hardened himself in such a way that the world could never touch him, loosened up, became compassionate and was compelled to become a teacher or a guru, for which he had no intention at all.
Subscribe
So this month is seen as the best time to receive the Grace of the Guru. This is a good time to seek Grace. This is a good time to make yourself receptive.
“What should I do?” is always the question. If you don’t do anything of your own, if you are less of yourself, that is the best way to be receptive. The sadhana is always structured like this; it absorbs you into activity in such a way that in the daily process of living, you forget who you are. You forget what you are. You forget what your life is about. You are just absorbed into what is happening.
There is a beautiful story in the Zen system of allowing human consciousness to grow. A disciple goes to a Zen master and asks:
‘What should I do for my spiritual growth?’
‘Sweep the floor, chop the wood, cook the food. That’s all.’
‘For that, why should I come here? I can do that at home!’
‘But if you are sweeping the floor at home, it’s your own floor. You will not sweep the neighbor’s floor if it is dirty, you will not. Chopping the wood and cooking would be for your own use and who you consider as yours. You are using every activity to enhance who you are instead of using every activity to dissolve who you are.’
This is all the difference between making our activity, or our karma, either into a bondage or into a process of liberation. Either you are acquiring karma, or your karma is becoming yoga. That’s all it is. You are doing your activity to enhance yourself or are you are doing your activity to dissolve yourself?
Just sweeping the floor, cooking food and planting a tree – not on your property, not for you and your children to sit under its shade – simply planting it so that anybody, even your enemy, may sit under its shade and enjoy it. Is it okay? If you plant a mango tree, your enemy and his children may eat the mangoes. Now this activity becomes a process of dissolution. Otherwise, every activity is a way of imprisoning yourself.
It is activity which is entangling people. Human ability to do things, unfortunately, is being used to imprison themselves. Human intelligence is being used to cause misery to oneself. Once you start doing this, you will unknowingly become an enemy of any kind of capability. That’s a bad position to take. If you are against all capability and intelligence, you are asking for regression. You are not asking for progress. You are not asking to evolve. You are asking to regress into a lesser kind of life.
So this is the month of Grace. Grace is like manure for growth. With Grace, a human being can catapult himself to another dimension of existence, capability and possibility. And to make use of Grace, what should we do? Nothing to do. The less you do of what you consider as me and myself the more available you become to Grace.
ஜுலை 03, 2011 அன்று ஈஷா யோகா மையத்தில் நடந்த தர்ஷனின் போது சத்குரு பேசியதிலிருந்து:
வருடத்தின் இந்தப் பகுதியில்தான் ஆதியோகியின் கவனம் முதன்முதலில் சப்தரிஷிகளின் மேல் விழுந்தது. வருடத்தின் இந்த மாதத்தில்தான், தன்னைச் சுற்றியுள்ள எதன் மீதும் ஈடுபாடு இல்லாத யோகியும் கடும் துறவியுமான ஒருவர், அவர்களிடம் ஈடுபாடு காட்ட ஆரம்பிதார். தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் எண்ணம், மெதுவாக, அவரிடம் மலர ஆரம்பித்தது. கடந்த பௌர்ணமியிலிருந்து குரு பௌர்ணமி என்று சொல்லக்கூடிய வரும் பௌர்ணமி வரை சப்தரிஷிகளின் மீதுள்ள கவனத்தை அவரால் தவிர்கக முடியவில்லை. 84 வருடங்களாக கடுமையாக பயிற்சி செய்து வந்த அந்த சப்தரிஷிகள் மேல் அதுவரை சிவன் ஒரு ஷணம் கூட கவனம் செலுத்தாதிருந்தார். ஆனால் இப்போது சிவனின் கவனம் அவருடைய அந்த சீடர்கள் மேல் ஒரு ஷணமும் மாறாததாக இருந்தது.
முழுவதும் கருணையற்ற இதயம் கொண்டவராக இருந்த துறவி கூட, அந்த ஏழு சீடர்களின் தேடுதலில் இருந்த தீவிரத்தை புறக்கணிக்க முடியாமல், இந்த மாதத்தில், கருணை கொண்டவராக மாறினார். இந்த உலகத்தினரால் அணுகப்பட முடியாத அளவு தன்னைத்தானே கடுமைப்படுத்திக் கொண்ட ஒருவர், இளகிய மனம் கொண்டவராக, கருணை உடையவராக இந்த மாதத்தில் மாறினார். இதுவரை ஒரு ஆசிரியராகவோ அல்லது ஒரு குருவாகவோ இருப்பதற்கு எண்ணமில்லாமல் இருந்தவர் தற்போது அவ்வாறு மாறுவதற்கேற்ற நிர்ப்பந்தமான நிலையில் இருந்தார்.
எனவே இந்த மாதம் குருவின் அருளைப் பெறுவதற்கு உகந்த காலமாகப் பார்க்கப் படுகிறது. பெற்றுக் கொள்ளும் திறனை உங்களிடம் அதிகப்படுதிக் கொள்ள இது நல்ல நேரம்.
சரி, அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அனைவருக்கும் எபபோதும் ஒரு கேள்வியாக இருக்கிறது. 'நான்' என்னும் தன்மை உங்களிடம் குறைவாக இருப்பது, பெற்றுக் கொள்ளும் திறன் உங்களிடம் ஏற்பட, சிறந்த வழியாக இருக்கும். ஆன்மீகப்பயிற்சிகள் இப்படித்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. எந்த அளவிற்கு என்றால், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் நீங்கள் ஈடுபட்டிருக்கும்போது, நீங்கள் யார் என்பதையும் உங்கள் தன்மை என்ன என்பதையும் உங்கள் வாழ்க்கை எதைப் பற்றியது என்பதையும் மறந்து விடுகிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ள நிகழ்வுகளில் வெறுமனே ஈர்க்கப்பட்டு விடுகிறர்கள்.
மனிதரின் விழிப்புணர்வு வளர ஊக்கப்படுத்துவதைப் பற்றிய ஒரு அழகான கதை ஜென்னில் உண்டு. ஒரு சீடர் ஜென் குருவிடம் சென்று கேட்கிறார்:
"நான் எனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும்?"
"தரையைப் பெருக்கு, விறகை வெட்டு, உணவை சமை. அவ்வளவுதான்".
"அதற்கு நான் ஏன் இங்கே வரவேண்டும்? நான் அவற்றை என் வீட்டிலேயே செய்து கொள்வேனே"
"ஆனால், உன்வீட்டில் நீ தரையைப் பெருக்குகிறாய் என்றால் அது உன் வீட்டுத் தரையாக இருப்பதால்தான். உனது பக்கத்து வீட்டுத் தரை குப்பையாக இருந்தால் நீ பெருக்க மாட்டாய். விறகு வெட்டுவதும் உணவு சமைப்பதும் உனக்காகவும் உன்னைச் சார்ந்தவர்கள் என்று நீ நினைப்பவர்களுக்காக மட்டுமே செய்வாய். உன் வீட்டில் நீ செய்யும் ஒவ்வொரு செயலும் உன்னைக் கரைத்துக் கொள்வதற்குப் பதிலாக உன்னை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவே இருக்கும்".
இவ்வளவுதான் வித்தியாசம். நம் செயல்கள், நம் கர்மா, நம்மை சிக்க வைப்பதாக இருக்கிறதா அல்லது நம்மை விடுவிப்பதாக இருக்கிறதா என்பதற்கான வேறுபாடு இவ்வளவுதான். ஒன்று நீங்கள் கர்மாவை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது உங்கள் கர்மாவே யோகாவாக மாறலாம். இவ்வளவுதான் விஷயம். உங்கள் செயல்களை உங்களை மிகுதிப்படுத்திக் கொள்வதற்காக செய்கிறீர்களா அல்லது உங்களை கரைத்துக் கொள்வதற்காக செய்கிறீர்களா என்பதுதான் விஷயமே.
தரையைப் பெருக்குவதோ உணவு சமைப்பதோ அல்லது மரம் நடுவதோ - உங்கள் இடத்தில் செய்வதில்லை. உங்களுக்காக செய்வதில்லை. அல்லது உங்கள் குழந்தைகள் அந்த மரத்தன் அடியில் உட்கார்வதற்காக செய்வதில்லை. வெறுமனே மரம் நடுவது, அவ்வளவுதான். உங்கள் எதிரி கூட அந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து அனுபவிப்பார். அது சரிதானே? நீங்கள் ஒரு மாமரம் நட்டால், உங்கள் எதிரியும் அவரது குழந்தைகளும் அந்த மாம்பழங்களை சாப்பிடக் கூடும். இந்த நிலையில் நீங்கள் செயல்படும்போது, உங்கள் செயல்கள் விடுதலைக்கான ஒரு வழியாக இருக்கிறது. அப்படி இல்லையென்றால், உங்களுடைய ஒவ்வொரு செயலும் உங்களை நீங்களே சிறைப்படுத்திக் கொள்வதாகவே இருக்கும்.
மக்கள் எப்போதும் செயல்களில் சிக்கிக் கொள்கிறார்கள். மனிதன், செயல் செய்வதற்கான தன் திறமையை, துரதிர்ஷ்டவசமாக, தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொள்ளவே பயன்படுத்திக் கொள்கிறான். மனிதனின் அறிவாற்றல் தனக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக் கொள்ளவே பயனாகிறது. ஒரு முறை இப்படி நீங்கள் செய்ய ஆரம்பித்து விட்டால், உங்களை அறியாமலேயே, எந்த விதமான திறமைக்கும் நீங்கள் எதிரியாகி விடுகிறீர்கள். அது மிகவும் மோசமான நிலை. அனைத்துத் திறமைகளுக்கும் அறிவுக்கும் நீங்களே எதிரானவராக இருந்தால், நீங்கள் அழிவை நோக்கித்தான் செல்வீர்கள். உங்களுக்கு வளர்ச்சி என்பது இருக்காது. கீழான வாழ்க்கையைத் தேடிக் கொள்பவராக இருப்பீர்கள்.
இந்த மாதம் அருள் நிறைந்த மாதமாக இருக்கிறது. அருள் என்பது வளர்ச்சிக்கு உரமாக இருந்து உதவுகிறது. அருளின் உதவியால் ஒருவர் திறமை மற்றும் சாத்தியம் நிறைந்த அடுத்த பரிமாணத்திறகு தன்னை உயர்த்திக் கொள்ள முடியும். அப்படியென்றால் அந்த அருளைப் பெற்று பயன்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. 'நான்' என்பதை நிலைநாட்டுவதற்காக நீங்கள் செய்யும் செயல்களை எந்த அளவு குறைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவு அருள் நிறைந்தவராக மாறக் கூடிய வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.