தினமும் யோகா செய்ய போராட்டமா?
சிலர் தங்கள் வாழ்நாள் முழுக்க யோகா செய்யவேண்டுமென நினைக்கிறார்கள்; சிலரோ கடுமையாக யோகப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்! ஆனால் இவையெல்லாம் அவர்களுக்கு தடைகளாகவே அமைகின்றன. எனில், தினமும் யோகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் செய்யவேண்டிய எளிய காரியம் என்ன? சத்குருவிடம் கேட்டபோது...
கேள்வி
சத்குரு, நான் கடந்த காலத்தில் சில யோகா நிகழ்ச்சிகளில் கலந்திருக்கிறேன். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அங்கு கற்றுக்கொண்ட பயிற்சிகளை என்னால் கடுமையாக பின்பற்ற முடிவதில்லை. ஒருகாலத்தில் நான் காலை 6 மணி முதல் 9:30 அல்லது 10 மணி வரை, நான்கைந்து மணி நேரத்திற்கு யோகா செய்ததுண்டு, ஆனால் அதுவே நான் கண்ட உச்சம் எனலாம். அதற்குப் பிறகு முற்றிலும் தொலைந்துவிட்டேன். நான் தொடர்ந்து பயிற்சிகள் கூட இப்போது செய்வதில்லை. ஏன் இப்படி அவ்வப்போது மட்டும் பயிற்சி செய்யும் போக்கு வந்தது? என்னை நான் எப்படி மாற்றிக்கொள்வது?
சத்குரு:
நீங்கள் ஒருபோதும் கடுமையாக யோகா செய்யக்கூடாது, அது வேலைசெய்யாது. அதோடு வாழ்நாள் முழுவதும் யோகா செய்யக்கூடாது, இன்று மட்டும் செய்யுங்கள், அவ்வளவே. “இதனை நான் என் வாழ்நாள் முழுக்க செய்யப்போகிறேன்” என்பது போன்ற அபத்தங்களால் உங்களை பாரமாக்கிக் கொள்ளாதீர்கள்! இன்று செய்யுங்கள். அதுபோதும். வாழ்க்கை மிகவும் எளிமையானது. “நான் என் வாழ்நாளில் எல்லா நாட்களிலும் அதை செய்யப்போகிறேன்” என்றெல்லாம் எதற்காக அதை நீங்கள் சிக்கலாக்குகிறீர்கள்? தயவுசெய்து அதை எல்லா நாட்களும் செய்யவேண்டாம், இன்று மட்டும் செய்யுங்கள். அதற்கு கடுமையான இறுக்கமான உறுதி தேவையில்லை. “இன்று நான் செய்யப்போகிறேன்” என்பது மட்டுமே தேவைப்படுகிறது. அது மிகவும் எளிமையானது. ஒருநாள் உங்களால் செய்யமுடியுமல்லவா? அவ்வளவுதான்.
குறிப்பு:
தன்னிலை மாற்றத்திற்கான 5-நிமிட யோகப்பயிற்சிகள் கற்க இங்கே கிளிக் செய்யுங்கள். அதற்கான ஆன்டிராய்டு அல்லது ஐஃபோன் செயலியை இங்கு டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
Subscribe