கேள்வி: புகை பிடிக்கும் பழக்கத்திலிருந்து நான் மீள்வது எப்படி?

சத்குரு:

இதை நல்லது அல்லது கெட்டது என்று நான் கூறவில்லை. புகைப்பது என்பது முட்டாள்தனமான ஒரு விஷயமாகும். அது நன்மையோ, தீமையோ அல்ல. அது வெறும் முட்டாள்தனமான விஷயம் மட்டுமே.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
பத்து வருடங்களுக்கு முன்னால், புகையை மற்றவர்கள் முகத்தில் ஊதினால் தன்னைப் பெருமையாகவும், மற்றவரை முட்டாளாகவும் நினைத்துக்கொள்ளும் நிலை இருந்தது. இந்தப் பத்து வருடங்களில் அந்நிலை மாறிவிட்டது.

இந்த உடல் புகைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இது சுற்றுக்சூழலோடு நட்பு கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் தற்போது, நீங்கள் அதை புகைக்கும் இயந்திரமாக மாற்றிவிட்டீர்கள். எனவே இது முட்டாள்தனமான விஷயமாகும். ஒரு திறமைமிக்க இயந்திரத்தை, திறமையற்ற இயந்திரமாக மாற்றியது முட்டாள்தனம்தான். நல்லது அல்லது கெட்டது என்று இதைப் பார்க்க வேண்டியதில்லை. நீங்கள் இதைத் தீமையென்று பார்த்தால் உங்களால் அதிலிருந்து விடுபட இயலாது. இதற்குத் தொடர்பில்லாத அர்த்தங்களைக் கொடுக்கிறீர்கள். உண்மையில் இது வெறும் முட்டாள்தனமான விஷயம். நீங்கள் ஒரு விஷயத்தை முட்டாள்தனம் என்று பார்த்தால், அதைத் தினமும் செய்து கொண்டிருக்க முடியாது.

நீங்கள் புகைப்பதை பெருமையாக உணர்கிறீர்கள். தற்போது, உலக மக்கள் அனைவரும் புகைப்பவர்களுக்கு எதிராக உள்ளனர் என்பதை உங்களால் உணர முடியும். பத்து வருடங்களுக்கு முன்னால், புகையை மற்றவர்கள் முகத்தில் ஊதினால் தன்னைப் பெருமையாகவும், மற்றவரை முட்டாளாகவும் நினைத்துக்கொள்ளும் நிலை இருந்தது. இந்தப் பத்து வருடங்களில் அந்நிலை மாறிவிட்டது. எப்படியோ, புகைப்பதை நீங்கள் கவர்ச்சிகரமான செயலாக நினைத்துவிட்டீர்கள். நீங்கள் பத்து வயது பையனாக இருந்தபோது, புகைத்து அடுத்தவர் முகத்தில் ஊத விரும்பினீர்கள். அப்படிச் செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றியது. தற்போது, புகை வெளியிடாத வாகனங்கள் தயார் செய்வதற்கு கடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது, புகைக்க இயலாத ஒரு இயந்திரத்தை புகைக்கச் செய்வது முட்டாள்தனமா அல்லது அறிவுபூர்வமா?

முட்டாள்தனம்தான், இதை உங்களால் உணர முடிந்தால் மெதுவாக, இது உங்களை விட்டுச் சென்றுவிடும்.