ஆகஸ்ட் 28, 2000 ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த, நூற்றாண்டின் உலக-அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரையின் ஒரு பாகம்.

சத்குரு: நம் ஒவ்வொருவருக்குள்ளும் அதே தெய்வீகம் குடியிருக்கும்போது, ஒருவரை அன்பாய் அரவணைப்பதும், மற்றொருவரை வெறுத்து ஒதுக்குவதும் எப்படி சாத்தியம்? வானவில்லின் பல்வேறு வர்ணங்கள் எப்படி ஒரே ஒளியின் வெளிப்பாடோ, அதேபோல் உலக மதங்கள் எல்லாமும்கூட ஒரே இறைத்தன்மையின் வெளிப்பாடுதான். மனிதனுக்கு மனிதன் எதிராய், இவர் நம்பிக்கைக்கு அவர் எதிராய் நிற்பதற்கு உருவாக்கப்பட்டவை அல்ல மதங்கள். பல்வேறு நிறத்தவர்களும், குணத்தவர்களும், வெவ்வேறு நிலையிலான பக்குவம், புரிதல், அனுபவம் உள்ளவர்களும் வேறுபாடின்றி, அவரவர் வழியில் எல்லோருக்கும் பொதுவான அந்த இறைமூலத்தை அடைவதற்கான வாய்ப்பாய் உருவானவை இந்த மதங்கள். தெய்வீகத்தில் ஒன்றிடும் பேரானந்தத்தை நீங்களும் உணர்வீர்களாக!.